எனது 24 நூல்கள்

எனது 24 நூல்கள்
எனது இருபத்து நான்கு நூல்கள்

திங்கள், 26 அக்டோபர், 2015

சித்திரை உற்சவர்3.5.86.

25. * செடிகள் காத்திருக்க
பாலைக்கு அறுவடைக்குப்
போகும் சூரியன்.


*ஒளிந்த நிழல்கள்
உதிர்ந்த சருகுகளின்
கீழ் கிடக்கும்.

*சூரியக் கதிர்கள்
தோரணம் கட்ட
உலாப் போகும் ‘சித்திரை’ உற்சவர்.

*குடிசைகளுக்குள்ளும்
கட்டிடங்களுக்குள்ளும்
ஆரோகணிக்கும் வெய்யில்.

*அடுக்கப்பட்ட ஓடுகளாய்
வெய்யில் தூவும்.

*சித்திரைச் சட்டியின்
வதக்கலில்
வேரோடு செடிகள்
வதக்கலாகும்.

*சூரியன்
சித்திரையின் தகனத்தில்
மும்முரமாய்.

*பின் வெய்யில்
சொட்டுச் சொட்டாய் வீழும்.


5 கருத்துகள்:

சும்மா ( பத்தி ) உங்க கருத்தையும் பதிவு செய்ங்க :)

Related Posts Plugin for WordPress, Blogger...