ஹாலிவுட் ஹீரோஸ் - 1. லியம் நீஸன்.
என்னைக் கவர்ந்த ஹாலிவுட் ஹீரோஸ் வரிசையில் நிச்சயம் லியம் நீஸனுக்கு முதலிடம் உண்டு. நான் அவரது பெரும்பாலான படங்களை பார்த்ததில்லை என்றாலும் பார்த்த சில படங்கள் அவரது காரெக்டரை உண்மையான பர்சனாலிட்டி போல மனதில் பதியவைத்தவை.
எல்லாருக்கும் அவரது தந்தைதானே முதல் ஹீரோவாய் இருக்கக்கூடும். லியம் நடித்த டேக்கன் படத்தில் அவர் பதின்பருவப் பெண் ஒருவருக்குத் தந்தையாய் நடித்திருப்பார். அந்த முதல் இம்ப்ரஷனே பிடித்தது. மகாநதி கமல் டைப் கதை அது. தன் பெண்ணை மீட்கப் போராடும் தகப்பனின் கதை அது. மகாநதியைப் பார்த்துவிட்டுப் புரண்டு புரண்டு அழுத ( பெண்குழந்தைக்குத் தகப்பன்களான ) ரங்க்ஸின் நண்பர்கள் ஏராளம்.
லியம் பிறந்தது பிரிட்டனில் உள்ள வடக்கு அயர்லாந்தில் 1952 ஜூன் 7 இல். அம்மா பெயர் காதரின் அப்பா பெர்னார்ட் நீஸன். லியம் நீஸனோட இயற்பெயர் வில்லியம் ஜான் நீஸன். ட்ராக் ட்ரைவர், ஆர்க்கிடெக்ட், பாக்ஸர் போன்ற தொழில் புரிந்தவர் ஆசிரியராகவும் பணியாற்றி இருக்கிறார்.