பாகுபலி – 2 BAHUBALI – 2 REVIEW.
ரொம்ப ரொம்ப அழகான
காதல் கதை என முதல் பகுதியின் ஒரு பாட்டை எதேச்சையா பார்த்துட்டுப் போனா திரை பூரா
ஒரே அரசியல் நெடி. அதுதான் பாகுபலி -2.
இராஜமாதா சிவகாமியும் தேவசேனாவும் மனசுல நிரம்பி
இருக்காங்க. யப்பா என்னா கம்பீரம். சான்ஸே இல்லை. முன்னே எல்லாம் எனக்குக் கம்பீரமான
பெண்கள் என்றால் முதலில் பானுமதிதான் தோன்றுவார். இந்தப் படம் பார்த்த பின்னாடி ரம்யாகிருஷ்ணனும்,
அனுஷ்காவும் அந்த இடத்துக்குப் போட்டி போடுறாங்க!
