எனது 24 நூல்கள்

எனது 24 நூல்கள்
எனது இருபத்து நான்கு நூல்கள்

திங்கள், 3 ஜூலை, 2017

டாம் க்ரூஸின் த மம்மி 2017. – THE MUMMY 2017- REVIEW.


மம்மி & மம்மி ரிட்டர்ன்ஸ் மிகச் சிறப்பான படங்கள். மிஷின் இம்பாஸிபிள் தொடர் படங்கள் அதில் நடித்த டாம் க்ரூஸ் அதி சிறப்பு. இந்த மம்மியும் டாம் க்ரூஸும் இணைந்தால் எப்படி இருக்கும். இதுதான் த மம்மி திரைப்படம்.

கதை ஓரளவு சுவாரசியமானதுதான். ஆனா இதுக்கு டாம் தேவையா. யார் வேணாலும் நடிக்கலாம். ஆனா இவரைப் போட்டு வேஸ்ட் பண்ணனுமா. மிஷின் இம்பாஸிபிள்ல செம ஆக்‌ஷன்ல பார்த்துட்டு இந்த மம்மி பேய் பிசாசு கதையில் இவரைப் பார்ப்பது எல்லாம் எரிச்சலா இருக்கு.

 முதலில் திடுக் திடுக் என்று நம்மை அதிரவைத்த படம், எதிர்பார்ப்பு எகிறிக்கிட்டு இருக்கும்போது அதுல அப்போ அப்போ தண்ணீரை ஊத்தி அணைக்கிறாமாதிரி ஆயிடுச்சு இப்படம் தொடர்ந்த விதம்.

மெர்குரியால் நிரப்பி மூழ்கடிக்கப்பட்ட காஃபின்ல மூடி இருக்கிற  மம்மியை நிக் மார்டானும் அவரது தோழர் கிறிஸ் வெயிலும் புதைபொருள் ஆராய்ச்சியாளினியான தோழி ஜென்னி ஹால்சியும் கண்டுபிடிச்சிடுறாங்க. 

சமய சந்தர்ப்பம் தெரியாம விமானத்துல எடுத்துச் செல்லப்படுற அந்த கேஃபின்லேருந்து கிறிஸ் வெயில் ஒரு ப்ரேஸ்லெட்டை சுடுறார். அதன்பின் விமானம் அந்த மம்மிக்குத் தேவையான ஒரு ரூபி புதைக்கப்பட்டிருக்கிற இருக்குற நாட்ல விழுது.   

வாரிசுச் சண்டைல தந்தையையும் எல்லாரையும் கொன்னுட்டு காதலனுக்கு உடலோடே நித்யப் பெருவாழ்வு வழங்க கத்தியால குத்தப் போய் ராஜகுருவால கைது செய்யப்பட்டு உயிரோடு புதைக்கப்பட்ட இளவரசி அஹ்மானெட்தான் அந்தக் கல்லறைல இருக்குறா. யப்பா மூச்சு வாங்குதா.

அவ எப்பிடி வெளியே வந்து நூற்றாண்டுகளா  சிதைந்த தன் உடலை செப்பனிட்டு நிக் மார்டானைக் கொல்லப்பாக்குறா அதாவது நித்ய ஜீவிதம் (!)  வழங்கப்பாக்குறா என்பதுதான் கதை.

இதுல ப்ளைட் ஏறுமாறாப் பிஞ்சு போய் பறக்கும்போதும் அந்த மம்மியும் நம்ம டாமும் ஈரோயினும் விழாமப் பறக்குறாங்கன்னு வியப்பா இருந்துச்சு. ( மிஷின் இம்பாஸிபிள்ல மட்டும் நம்புவீங்களா. இங்கேயும் நம்புங்கங்கிறாங்களோ J 

அதோட ஒரு மணல் புயல் காத்து அடிச்சு கட்டிடம் எல்லாம் வேரோட தூரோட தூள் தூளாறது கிறுகிறுக்க வைச்சிச்சு.

அழகான இளவரசி முகத்தில் சாபத்தின் விளைவாக மெசபடோமியன் எழுத்துக்கள் தோன்றுவது திகில்  ஆனா ஏன் இவ்ளோ அழகான மம்மிய ஸ்பைடர்மேன் மாதிரி கட்டிப் போட்டிருக்காங்கன்னு புரில. பிடிபட்டு கட்டிப்போடப்பட்டு சும்மா இருந்த மம்மி அதுக்கப்புறம் பல நாள் கழிச்சு ஏன் ஸ்பைடர் மூலமா ஆக்ட் பண்ணுதுன்னும் புரில.

படம் & காட்சி அமைப்புகள் பிரம்மாண்டமா இருந்தாலும், அந்த மம்மி பல இடங்களில் நம்மை அசர வைச்சாலும், (சர்ச்சுக்குப் பக்கத்துலேயே, ஏன் சர்ச்சுக்குள்ளேயே பேய்கள் எல்லாம் வந்து பயமுறுத்துற மாதிரி) இந்த மம்மி அசராம வர்றது எல்லாப் பேய்ப்படத்தையும் ஒரு குலுக்கு குலுக்கிப் போட்டு எடுத்தாமாதிரி இருக்கு.  

ஒரு வழியா கத்தில ரூபியை பதிச்சு அந்தக் கொலையைச் செய்து ( யார் யாரைக் கொலை செய்தான்னு படத்தைப் பார்த்துத் தெரிஞ்சுக்குங்க ஹிஹி யாம் பெற்ற துன்பம்.. ) நம்ம டாம் இறப்பில்லா பெருவாழ்வு அடையிறாரு.

காதல் படம் எடுக்குற மணிரத்னம் எடுத்த பேய்ப்படம் மாதிரி ஒரே இருட்டும் சேறும் சகதியும் மழையும் ஈரமுமா இருக்குது படம். பார்த்தாலே கடுப்பாவுதுன்னு சொல்வோம்ல. அதுக்கு இந்தப் படத்தைப் பார்க்கலாம். வீட்ல ராட்டன் டொமாடோஸ் இல்ல ராட்டன் எக்கும் இருந்தா கொண்டு போங்க. கோபம் அடங்க நல்லா ஸ்க்ரீனைப் பார்த்து வீசிட்டு வரலாம்.  

இந்தப் படத்துக்கு டாம் தேவையா. தன்னோட இமேஜை அவரே இறக்கிட்டாருன்னு தோணுது.  ஹீரோயின் செலக்‌ஷன், மம்மி செலக்‌ஷன் எல்லாம் சூப்பர். பாதிவரைக்கும் ஓரளவு பரவாயில்லை. மீதியைப் பார்க்காமலே வந்திருக்கலாம். 

இது 3 டி படம் வேற. தியேட்டர்ல மொத்தமே 50 பேர்தான் இருந்திருப்போம். மம்மி வர்ற பல சீன்கள் திகிலடிச்சு நான் ரங்க்ஸைப் பிடிச்சிக்கிட்டேன். கொஞ்சம் மெனக்கெட்டிருந்தா எங்கேயோ போயிருக்க வேண்டிய படம் கடுப்பேத்துற பேய்ப்படம் மாதிரி ஆயிடுச்சு . மொத்தத்துல மம்மியும் இல்ல டாமும் இல்லை.

இந்தப் படத்துக்கு மைனஸ் ரேட்டிங்க்தான் கொடுக்கணும். கோவை கேஜிலயே காத்தாடுது. இங்கிலீஷ் மம்மியா என்று சிரிக்கிறார்கள். போய் எந்த சீட்ல வேணாலும் உக்காந்துக்குங்க என்று கவுண்டரிலும் டிக்கெட் வாங்குமிடத்திலும் ( ஒருவரும் இல்லை. ஒருத்தர் லைட்டை போட்டு சீட்டில் உக்கார்ந்திருந்தார் . அவர் சொன்னார் ) சொன்னபோதே சுதாரிச்சிருக்கணும். 

டைரக்டரை கட்டி வைச்சு ஒதைக்கணும். இதுதான் இந்தப் படத்தைப் பார்த்ததும் ரங்க்ஸ் சொன்ன வார்த்தை.  

யூனிவர்சல் பிக்சர்ஸே டார்க் யூனிவர்ஸ் ஆயிடுச்சு. 
இதுவரைக்கும் நான் இப்பிடி ஒரு ரிவியூ எந்தப் படத்துக்கும் எழுதினதே இல்லை.

செமயா ஏமாத்திட்டீங்களே டாம்.

 

2 கருத்துகள்:

  1. நல்ல வேளை எங்களை காப்பாற்றி விட்டீர்கள்

    பதிலளிநீக்கு
  2. AAM JAYAKUMAR SAGO


    வலைப்பதிவர் ஒற்றுமை ஓங்கட்டும்.!
    என்றும் நம்முள் வலிமை பெருகட்டும்.!

    பதிலளிநீக்கு

சும்மா ( பத்தி ) உங்க கருத்தையும் பதிவு செய்ங்க :)

Related Posts Plugin for WordPress, Blogger...