செவ்வாய், 25 ஜூலை, 2017

யோசிக்கலாம் வாங்க – ஒரு பார்வையோசிக்கலாம் வாங்க – ஒரு பார்வை


வளமான வாழ்க்கைக்கு நூறு அழகான யோசனைகள் என்று சொல்லப்பட்டிருக்கும் இந்நூல் ஒரு வாழ்க்கைக் கையேடு எனலாம். லேடீஸ் ஸ்பெஷலில் ஆசிரியை திருமதி கிரிஜா ராகவன் அவர்களின் முதல் நூல் இது என்பது வியப்புக்குரியது.

பத்ரிக்கையில் அவ்வப்போது எழுதி வந்த ஆலோசனைக் குறிப்புகளைச் சேர்த்துப் புத்தகமாக்கம் செய்திருக்கிறார்கள். யதார்த்த உலகில் எதனோடும் ஒத்துப் போய் வாழ்வதற்கு இம்மாதிரியான ஆலோசனைகள் அவசியத் தேவை எனலாம். 

முன்னுரை காந்தி கல்வி நிலையத்தைச் சேர்ந்த ப்ரேமா அண்ணாமலை வழங்கி இருக்கிறார். ஒவ்வொரு யோசனைக்கும் போடப்பட்டிருக்கும் படம் சுவை கூட்டுகிறது. சில படங்கள் அதனோடு ஒத்தும் சில நையாண்டி செய்தும் சில யோசிக்க வைக்கவும் செய்கின்றன.

பொதுவாக இம்மாதிரி யோசனைகள் பிறருக்கு மட்டுமல்ல. நமக்குமே பயன்படும் என்பதை ஆசிரியர் முன்னுரையில் அழகாக எடுத்துரைத்திருக்கிறார். சில இடங்களில் அட்வைஸ் தேவையில்லை உடனடி உதவியே தேவை எனவும் உரத்துச் சொல்லி இருக்கிறார்.

சமூகத்துடன் இயைந்து செல்லும் போக்கு, தனிமனித வாழ்வியல், வேலைக்குச் செல்லும்போது உள்ள தனி உலகம், குடும்பத்துடனான வாழ்க்கை என நான்கு விதமாகப் பிரித்து ஒவ்வொன்றையும் எப்படிக் கையாளவேண்டும் எனச் சொல்லி இருப்பதும் சிறப்பு. 


கணவன் மனவி, அம்மா அப்பா, அண்ணன் தம்பி அக்கா தங்கை ஆகிய உறவினரோடு மட்டுமல்ல மாமியார் மருமகள், வேலை செய்யும் இடம், நட்பு வட்டம், வெளி உலகம் சமூகம் ஆகியவற்றோடும் உறவு முறைகளையும் நட்பு முறைகளையும் எப்படி சிறப்பாக நகர்த்திச் செல்வது என்பதையும் கூறுகிறது இந்நூல்.  
 

சில அனுபவங்களாகவும் சில யோசனைகளாகவும் சில ஆலோசனைகளாகவும் சில சிறுகதைகளுடன் பகிர்ந்திருப்பது உபயோகமாக உள்ளது. மொத்தத்தில் அனைவரும் வாசிக்க வேண்டிய நூல். வாசித்துப் பார்த்துச் சொல்வீங்க . வாங்க நல்லா யோசிச்ச பின்பே எல்லாத்தையும் செய்வோம் என்று. 

நூல் – யோசிக்கலாம் வாங்க.
ஆசிரியர் – கிரிஜா ராகவன்
பதிப்பகம் :- காயத்ரி
விலை :- ரூ 75/-

2 கருத்துகள் :

G.M Balasubramaniam சொன்னது…

பதிவர் ஒற்றுமை ஓங்குக

Thenammai Lakshmanan சொன்னது…

thanks Bala sir

வலைப்பதிவர் ஒற்றுமை ஓங்கட்டும்.!
என்றும் நம்முள் வலிமை பெருகட்டும்.!

கருத்துரையிடுக

சும்மா ( பத்தி ) உங்க கருத்தையும் பதிவு செய்ங்க :)

Related Posts Plugin for WordPress, Blogger...