திங்கள், 31 ஜூலை, 2017

முத்துக்கமலம் இணைய இதழ்

காரைக்குடி அழகப்பா பல்கலைக்கழகத்தில் வரும் ஆகஸ்ட் மாதம் அழகப்பா பல்கலைக்கழகத்தின் தமிழ்ப்பண்பாட்டு மையம் மற்றும் கல்வியாளர்கள் சங்கமத்தின் தமிழ்வளர்ச்சிக் குழுமம் இணைந்து நடத்தும் பன்னாட்டுக் கருத்தரங்கம் நடைபெறவுள்ளது.

இதில் 21-ம் நூற்றாண்டில் தமிழின் நோக்கும் போக்கும் என்ற தலைப்பில் நடக்கப் போகும் கருத்தரங்கத்துக்கு பின்வரும் 21 தலைப்புகளில் ஆய்வுக்கட்டுரை அனுப்ப விழைபவர்கள் அனுப்பலாம்.

தமிழ்ப்பண்பாட்டு மையம் மற்றும் கல்வியாளர்கள் சங்கமம் – பன்னாட்டுக் கருத்தரங்கம் – 2017. https://honeylaksh.blogspot.com/2017/07/2017.html

இக்கட்டுரை ஆய்வுக்காக நான் தேர்ந்தெடுத்த தலைப்பு மின்னிதழ்கள் பற்றியது.

"தமிழ் வளர்ச்சியில் மின்னிதழ்கள். "

எனவே மின்னிதழ்கள், இணைய இதழ்கள் பற்றி முழுமையான விபரம் சேகரித்துக்கொண்டிருக்கிறேன்.

உங்கள் மின்னிதழ் ஆரம்பிக்கப்பட்டது எப்போது ? ஆரம்பித்தது யார், எந்த வருடம், எதை முக்கியத்துவப்படுத்தி இது செயல்படுகிறது , இதன் நோக்கம், தமிழ் வளர்ச்சியில் இதன் பங்கு, இதுவரை இதன் ஆசிரியராக, நிர்வாகியாக செயல்பட்டு வருபவர் யார், மின்னிதழ் நடத்துவதில் மேற்கொண்ட சங்கடங்கள், இடையூறுகள், அவற்றை எப்படிக் களைந்தீர்கள்,  இம்மின்னிதழ் மூலம் அடைந்த சாதனைகள், விருதுகள், சிறப்புத் தகவல்களை, சிறப்பிதழ்கள், பற்றிப் பகிர்ந்துகொள்ள வேண்டுகிறேன்

/////திண்ணை, உயிரோசை, கீற்று , வார்ப்பு, வல்லினம், வல்லமை,அதீதம், முத்துக் கமலம்,  வலைச்சரம்,  சுவடு, பூவரசி, தகிதா, புதிய” , அவள் பக்கம்தென்றல், காற்று வெளி, பண்ணாகம், லங்காஸ்ரீ, சொல்வனம். அமீரத்தின் தமிழ்த் தேர், தமிழ் ரைட்டர்ஸ் போர்ட்டல், கவிசூரியன்.////

ஏ 4 தாளில் நான்கு பக்கமே வரும் கட்டுரை என்பதால் சுருக்கி அனுப்பவேண்டும். ஆனால் என் வலைத்தளத்தில் ஒவ்வொரு மின்னிதழ் பற்றியும் ஆகஸ்ட் மாதத்தில் இருந்து விரிவான தகவல்கள் வெளியாகும்.

எனவே உங்கள் மின்னிதழ்கள் பற்றிய விரிவான தகவல்களை எனக்கு honeylaksh@gmail.com என்ற ஈமெயில் ஐடிக்கு அனுப்பி உதவ வேண்டுகிறேன். வேறு மின்னிதழ்கள் பற்றியும் தெரிந்தால் அதன் ஈமெயில் ஐடி , விபரங்கள் அனுப்பி உதவ வேண்டுகிறேன்.

எல்லா மின்னிதழ்கள் பற்றியும் முழுமையான ஒரு தொகுப்பாகஇது அமையவேண்டும் என்பது எனது பேரவா.

வரும் ஜூலை 15 க்குள் அனுப்ப வேண்டும் என்பதால் ஜூலை 10 ஆம் தேதிக்குள் உங்கள் மின்னிதழ் விபரங்கள் எனக்குக் கிடைத்தால் நலம்.

அன்பும் நன்றியும்,

தேனம்மைலெக்ஷ்மணன். 


என எல்லா மின்னிதழ்களுக்கும் நான் மின்னஞ்சல் அனுப்பியும் நான்கைந்து மின்னிதழ்களில் இருந்து மட்டுமே பதில் கிடைத்தன. எனவே அவற்றை வைத்து என் ஆய்வை முடிக்கமுடியாது என்பதால் என் வலைத்தளத்தில் வெளியிடுவதில் மகிழ்கிறேன்.


முதலில் அனுப்பிய முத்துக்கமலம் இணைய இதழ் ஆசிரியருக்கு நன்றிகள்.


முத்துக்கமலம் இணைய இதழ்

சென்னையில் இருப்பவர்களில் ஓரிருவர் மட்டும் தமிழ் இணைய இதழ் தொடங்கிய

காலத்தில், சென்னைக்கு வெளியில் தேனியிலிருந்து மு. சுப்பிரமணி முதன்

முதலாகக் கடந்த 01-06- 2006 முதல் முத்துக்கமலம் எனும் பெயரில் தமிழ் இணைய

இதழ் (www.muthukamalam.com) ஒன்றினைத் தொடங்கி அதன் ஆசிரியராக இருந்து

வருகிறார். இதன் வெளியீட்டாளராக உ. தாமரைச்செல்வி இருக்கிறார். மின்னிதழ்

குறித்துப் பலரும் அறியாத நிலையில், இணையத்தில் கிடைக்கும் பல்வேறு

மின்னஞ்சல் முகவரிகளுக்கு ‘முத்துக்கமலம்’ இணைய இதழின் ஒவ்வொரு

புதுப்பித்தலுக்கும், புதுப்பித்தலில் இடம் பெற்றிருக்கும் படைப்புகள் குறித்த

தகவல்களை அனுப்பி அதனைப் பார்வையிடச் செய்வதற்காக ஐந்தாண்டுகள் வரை

தொடர் முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டன. ஆங்கில மொழியிலான

இணையதளங்களைப் போல தமிழ் இணையதளங்களுக்கு விளம்பர வருவாய்

எதுவும் கிடைக்காத நிலையிலும், விடாமுயற்சியுடன் தொடர்ந்து நடத்தப் பெற்று

வருகிறது. முத்துக்கமலம் படைப்பாளர்களை ஊக்குவிக்கும் நோக்கத்துடன் பல்வேறு

முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு, 12 ஆம் ஆண்டு தொடக்கம் முதல் ஒவ்வொரு

புதுப்பித்தலிலும் இடம் பெறும் சிறுகதை, கட்டுரை, கவிதை ஆகிய தலைப்புகளிலான

படைப்புகளில் ஒன்று தேர்வு செய்யப்பட்டு, அதனை எழுதியவருக்கு நூல் ஒன்று

பரிசாக வழங்கப்பட்டு வருகிறது. பிற தலைப்புகளிலான படைப்புகளுக்கும் நூல்

அல்லது பயன்படுத்தக்கூடிய பொருள் பரிசு அளிப்பதற்கான முயற்சிகள் எடுக்கப்பட்டு

வருகின்றன.


ஆங்கிலத் தேதிகள் 1 மற்றும் 15 ஆம் தேதிகளில் மாதமிருமுறையாகப்

புதுப்பிக்கப்படும் இந்த இதழில் அரசியல், திரைப்படம் தவிர்த்து, ஆன்மிகம்,

பகுத்தறிவு, கதை, கட்டுரை, கவிதை, அடையாளம், நேர்காணல், கல்வி, குட்டிக்கதை,

குறுந்தகவல், சிரிக்க சிரிக்க, மகளிர் மட்டும், சிறுவர் பகுதி, மருத்துவம், சமையல்,

சுவையான தகவல்கள், சுற்றுலாத் தலங்கள், மின்புத்தகங்கள், தமிழ் வலைப்பூக்கள்,

தினம் ஒரு தளம் என்பது உட்பட 25 முதன்மைத் தலைப்புகளில் பல்வேறு

படைப்புகள் இடம் பெற்று வருகின்றன. இந்த இணைய இதழில் இந்தியா மட்டுமின்றி

இலங்கை, சிங்கப்பூர், மலேசியா, ஐக்கிய அரபு நாடுகள், அமெரிக்கா, கனடா,

டென்மார்க், நார்வே, ஜெர்மனி, இங்கிலாந்து, ஹாங்காங் போன்ற நாடுகளில் வாழ்ந்து

வரும் தமிழ்ப் படைப்பாளர்கள் பலர் தொடர்ந்து எழுதி வருகின்றனர். இந்த இணைய

இதழுக்கு உலகம் முழுவதும் 42 நாடுகளில் தொடர் பார்வையாளர்களும், 117

நாடுகளில் அவ்வப்போது பார்வையிடும் பார்வையாளர்களும் இருக்கின்றனர்.

இணையத்தில் இடம் பெற்றிருக்கும் தமிழ் இணைய இதழ்களில் முத்துக்கமலம்

புகழ்பெற்ற இணைய இதழாக இருந்து வருகிறது. முத்துக்கமலம் இணைய இதழில்

இடம் பெற்று வரும் கதைகளில் உலகின் பல்வேறு நாடுகளில் வசிக்கும்

தமிழர்களின் படைப்புகள் இடம் பெற்று வருவதால், அந்த நாட்டின் இடங்கள்,

அவர்களின் பழக்க வழக்கங்கள், உணவு வகைகள், வாழ்க்கை முறைகள் மற்றும்

பண்பாடுகள் போன்றவைகள் இடம் பெறுவதால் உலகளாவிய தமிழர்களின்

வாழ்க்கையையும், அவர்களின் பண்பாடுகளையும் அறிந்து கொள்ள முடிகிறது.

கட்டுரைகள் பொது, இலக்கியம், சமூகம், வரலாறு, அறிவியல் & தொழில்நுட்பம்,

சட்டம், எப்படி? மற்றும் மனம் திறந்து எனும் தலைப்புகளின் கீழ் வகைப்படுத்தப்பட்டு

பல்வேறு கட்டுரைகள் இடம் பெற்று வருகின்றன. இக்கட்டுரைப் பகுதியில் கல்வி

நிறுவனங்களில் முனைவர் பட்ட ஆய்வு மேற்கொண்டு வரும் மாணவர்களின்

ஆய்வுக் கட்டுரைகளும் இடம் பெற்று வருகின்றன. இவை தவிர, வேறு சில தொடர்

கட்டுரைகளும் இடம் பெற்றிருக்கின்றன.

இவை தவிர, கருத்தரங்கக் கட்டுரைகள் எனும் தலைப்பிலும் மூன்று கல்லூரிகளில்

நடைபெற்ற கருத்தரங்கக் கட்டுரைகளும் இடம் பெற்றிருக்கின்றன. திருச்செங்கோடு,

ஆன்மிகம் பகுதியில் அனைத்து சமயங்களைப் பற்றிய தகவல்களும் இடம் பெற்று

வருகின்றன. அடையாளம் பகுதியில் தமிழ் மற்றும் தமிழர்களுக்காகப் பங்களிப்பு

செய்தவர்களின் வாழ்க்கை வரலாற்றுக் கட்டுரைகளும், நேர்காணல் எனும் பகுதியில்

உலகின் பல்வேறு நாடுகளில் தமிழ் வளர்ச்சிக்குப் பங்களிப்புகளைச் செய்து

கொண்டிருக்கும் தமிழறிஞர்களின் நேர்காணல்களும், குட்டிக்கதைகள் எனும்

பகுதியில் நல்ல நீதிகளை வழங்கும் நீதிக்கதைகளும், சிரிக்க சிரிக்க எனும்

பகுதியில் நகைச்சுவைத் துணுக்குகள் மற்றும் நகைச்சுவைச் செய்திகளும்,

குறுந்தகவல் எனும் பகுதியில் பொது அறிவுத் தகவல்களும், சிறுவர் பகுதியில்

சிறுவர்களுக்கான படைப்புகளும், மகளிர் மட்டும் பகுதியில் மகளிருக்கான

படைப்புகளும், சமையல் பகுதியில் பல்வேறு உணவுத் தயாரிப்பிற்கான சமையல்

செய்முறைக் குறிப்புகளும் இடம் பெற்று வருகின்றன.

தமிழ் வலைப்பூக்கள் எனும் தலைப்பில் தமிழில் இடம் பெற்றிருக்கும்

வலைப்பதிவுகள் குறித்த குறிப்புகளும், அதற்கான இணைய முகவரியும் தொடர்ந்து

அளிக்கப்பட்டு வருகின்றன. இதன் மூலம் தமிழ் மொழியில் இடம் பெற்றிருக்கும்

பதிவுகளை அதிகமான பார்வையாளர்கள் பார்வையிடவும், இணையப் பரப்பில் தமிழ்

மொழிக்கான பார்வையாளர்கள் எண்ணிக்கையினை அதிகப்படுத்திடவும் முயற்சிகள்

மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. கூகுள் போன்ற இணைய வழியிலான வணிக

விளம்பரங்களை அளிக்கும் நிறுவனங்கள் தமிழ் மொழியிலான தளங்களுக்கு எந்த

விளம்பரங்களையும் வழங்காத நிலையிலும், வணிக நோக்கமில்லாமல், வேறு

எவ்விதப் பொருளாதாரப் பயனுமில்லாமல் தமிழ் இணைய இதழ்கள் பல்வேறு

நெருக்கடிகளுக்கிடையில் தங்கள் வாழ்வை நீட்டித்துக் கொள்ளப் போராடிக்

கொண்டிருக்கின்றன. தமிழ் இணைய இதழ்களில் பல தொடங்கிய

ஓராண்டுக்குள்ளாகவே காணாமல் போய் விட்டன. ஆனால், முத்துக்கமலம் இணைய

இதழ் தமிழ் மொழியில் தொடர்ந்து 12 ஆம் ஆண்டில் பயணித்துக் கொண்டிருக்கிறது.

முத்துக்கமலம் இணைய இதழ் படைப்புகள்

முத்துக்கமலம் இணைய இதழில் 1-7- 2017 புதுப்பித்தல் (முத்து: 12, கமலம்: 3) வரை

இடம் பெற்றிருக்கும் படைப்புகள்:

ஆன்மிகம்

 இந்து சமயம் – 171

 இசுலாம் சமயம் – 10

 கிறித்தவ சமயம் – 16

 பிற சமயங்கள் – 16

 வழிபாட்டுத் தலங்கள் – 25

 ஆன்மிகத் தொடர்கள்: 3

ஜோதிடம்

 பொதுத்தகவல்கள் – 37

 சிறப்புத் தொடர்கள் – 3

 உங்கள் ராசிபலன்கள் – 1

பொன்மொழிகள்: 139

பகுத்தறிவு: 14

அடையாளம்: 9

நேர்காணல்கள்: 8

கதை

 சிறுகதை – 263

 தொடர்கதைகள் – 5

 நாட்டுப்புறக்கதைகள் தொடர் - 1

கட்டுரை

 பொதுக்கட்டுரைகள் – 112

 இலக்கியம் – 151

 சமூகம் – 15

 வரலாறு – 2

 அறிவியல் & தொழில்நுட்பம் – 6

 சட்டம் – 6

 எப்படி? – 8

 மனம் திறந்து – 68

 தொடர்கட்டுரைகள் – 8

 கருத்தரங்கக் கட்டுரைகள்: 3 (40+ 51 + 45…)

கவிதை: 2309

குட்டிக்கதை: 695

குறுந்தகவல்: 187

சிரிக்க சிரிக்க: 166

சிறுவர்பகுதி

 கதை – 8

 கவிதை – 49

 குட்டிக்கதை – 110

 சம்பவங்கள் – 67

 விடுகதை – 6

 தகவல்கள் – 7

 தொடர்கதை – 1

மகளிர் மட்டும் – 18

சமையல்

 இனிப்புகள் மற்றும் காரங்கள் – 133

 சாதங்கள் – 82

 குழம்பு மற்றும் ரசம் – 118

 அசைவம் (ஆட்டு இறைச்சி – 47, கோழி இறைச்சி – 61, மீன் – 68, நண்டு – 14,

முட்டை – 33, பிற இறைச்சிகள் – 2) – 225

 துணை உணவுகள் (கீரை -12, பச்சடி மற்றும் கூட்டு – 136, சட்னி – 22,

துவையல் – 21, ஊறுகாய் – 21, வற்றல் மற்றும் பொடிகள் – 20, வடகம் மற்றும்

அப்பளம் – 7) – 239

 சிற்றுண்டிகள் (சிற்றுண்டி உணவு – 58, சுண்டல் மற்றும் பயறு – 14, பனியாரம்

– 4) – 76

 சூப் வகைகள் – 42

 பாயசம் – 7

 குளிர்பானங்கள் – 36

 உடனடி உணவுகள் – 15

 சிறப்பு உணவுகள் (பிற மாநில உணவுகள் – 4, வெளிநாட்டு உணவுகள் – 1, பிற

சிறப்பு உணவுகள் – 1) – 6

 வீட்டுக்குறிப்புகள் – 6

மருத்துவம்

 பொதுமருத்துவம் – 0

 ஓமியோபது மருத்துவம் – 1

 ஆயுர்வேத மருத்துவம் – 1

 அக்குபஞ்சர் மருத்துவம் – 0

 சித்த மருத்துவம் – 0

 இயற்கை மற்றும் யோகா மருத்துவம் – 1

 உளவியல் மருத்துவம் – 3

 இயன்முறை மருத்துவம் – 15

 பிற மருத்துவம் – 1

 பொதுத்தகவல்கள் – 12

புத்தகப்பார்வை – 83

சுவையான தகவல்கள்

 கிறுக்குத்தனம் – 10

 குறும்புகள் – 5

 தீர்ப்புகள் – 4

 பொதுத்தகவல்கள் – 3

 முத்துக்கமலம் குறித்த தகவல்கள் – 8

சுற்றுலாத்தலங்கள் – 4

மின்புத்தகங்கள் – 2

தமிழ் வலைப்பூக்கள் – 249

படைப்பாளர்கள் – 463

தினம் ஒரு தளம்

 கணினித்தகவல்கள் – 7

 பயனுள்ள தகவல்கள் – 10

 வேடிக்கையான தளங்கள் – 41

சிறப்புகள்:

முத்துக்கமலம் இணைய இதழின் தனிச்சிறப்புகளாகக் கீழ்க்காணும் தகவல்களைக்

குறிப்பிடலாம்.

இணையதளங்கள், அச்சிதழ்கள்

1. தமிழ் விக்கிப்பீடியாவில் முத்துக்கமலம் இணைய இதழ் குறித்த தனிக் கட்டுரைப்

பக்கம் ஒன்று இடம் பெற்றிருக்கிறது. தமிழ் இணைய இதழ் மற்றும் தமிழ்

வலைப்பூக்கள் போன்றவற்றில் இணைய இதழ் குறித்து எழுதப்பட்ட

கட்டுரைகளில் முத்துக்கமலம் இணைய இதழ் குறித்தும், அதன் சிறப்பு

குறித்தும் சிறப்புத் தகவல்கள் இடம் பெற்றிருக்கின்றன.

2. தமிழில் வெளியாகும் இணையதளங்கள் மற்றும் தமிழ் வலைப்பூக்கள் போன்ற

600க்கும் அதிகமான தளங்களிலிருந்து முத்துக்கமலம் இணைய இதழினைப்

பார்வையிடுவதற்கு இணைப்பு வசதி அளிக்கப்பட்டிருக்கிறது.

3. முத்துக்கமலம் இணைய இதழ் குறித்தும், முத்துக்கமலம் இணைய இதழில் இடம்

பெற்றிருக்கும் சிறப்புப் பக்கங்கள் குறித்தும் தமிழ் கம்ப்யூட்டர் (செப்டம்பர் 16-30,

2007), இந்தியா டுடே தமிழ் பதிப்பு (நவம்பர் 7, 2012) மற்றும் குங்குமச்சிமிழ் கல்வி

- வேலை வழிகாட்டி (பிப்ரவரி 16 - 28, 2017) ஆகிய இதழ்களில் சிறப்புச் செய்திகள்

வெளியிடப்பட்டு இருக்கின்றன.

கல்விக்கான இதழ்

1. இந்திய அரசின் அறிவியல் மற்றும் தொழிலக ஆய்வுக் குழுவின் (Council of

Scientific and Industrial Research) கீழ் செயல்படும் புதுடெல்லியிலுள்ள தேசிய

அறிவியல் தொடர்பு மற்றும் தகவல் வளங்கள் நிறுவனம் (National Institute of

Science Communication and Information Resources) முத்துக்கமலம் இணைய இதழுக்குப்

பன்னாட்டுத் தரக்குறியீட்டு எண் (International Standard Serial Number) - ISSN 2454 - 1990

வழங்கியிருக்கிறது. இதன் மூலம் முத்துக்கமலம் இணைய இதழில் இடம்

பெறும் இந்தியாவிலிருக்கும் பல்கலைக்கழகங்கள் மற்றும் கல்லூரிகளில்

பயின்று வரும் தமிழ்த்துறை ஆய்வு மாணவர்களின் தமிழாய்வுக் கட்டுரைகள்

பன்னாட்டு ஆய்வுக் கட்டுரைகளாக ஏற்றுக் கொள்ளப்படுகின்றன.

2. திருவனந்தபுரம், கேரளப் பல்கலைக்கழகம், பல்கலைக்கழக மானியக் குழுவின்

ஆய்விதழ்களுக்கான பட்டியலில், முத்துக்கமலம் இணைய இதழினைத்

தமிழ்த்துறைக்கான பன்னாட்டுத் தமிழ் இணைய இதழாக அங்கீகரிப்பதற்காகப்

பரிந்துரை செய்திருக்கிறது.

3. திருச்செங்கோடு கே. எஸ். ரங்கசாமி கலை அறிவியல் கல்லூரியும்,

முத்துக்கமலம் பன்னாட்டு மின்னிதழும் இணைந்து ”தமிழ்ச் சிந்தனை மரபுகள்”

எனும் தலைப்பிலான பன்னாட்டுக் கருத்தரங்கம் ஒன்றினை கடந்த 19-4- 2017 அன்று

திருச்செங்கோடு, கே. எஸ். ரங்கசாமி கலை அறிவியல் கல்லூரியில் நடத்தியது.

இக்கருத்தரங்கிற்குப் பல்வேறு நாடுகளில் கல்லூரிகளில் பயின்று வரும்

மாணவர்கள், கல்லூரியின் பேராசிரியர்கள், தமிழ் ஆர்வலர்களிடமிருந்து 117

கட்டுரைகள் வந்திருந்தன. இக்கட்டுரைகள் அனைத்தும் முத்துக்கமலம்

மின்னிதழில் தொடர்ந்து வெளியிடப்பட்டு வருகின்றன. இக்கட்டுரைகள்

கல்லூரிப் பேராசிரியர்கள் முனைவர் த. கண்ணன் மற்றும் முனைவர் கோ.

இரவிச்சந்திரன் ஆகியோரைத் தொகுப்பாசிரியர்களாகக் கொண்டு சென்னை,

சீதை பதிப்பகம் மூலம் 568 பக்கங்களில் ”தமிழ்ச் சிந்தனை மரபுகள்” எனும்

பெயரில் நூலாகவும் (ISBN: 978-93- 82689-54- 6) உருவாக்கப்பட்டு ரூ.600/-

விலையில் வெளியிடப்பட்டிருக்கிறது.



முத்துக்கமலம் குறித்த ஆய்வுகள்

தமிழ் இணைய இதழ்கள் குறித்து, முனைவர் பட்ட ஆய்வு செய்த சிலர் தங்கள்

ஆய்வேடுகளில் முத்துக்கமலம் இணைய இதழ் குறித்தும், அதன் உள்ளடக்கங்கள்

குறித்தும் ஆய்வுத் தகவல்களைப் பதிவு செய்திருக்கின்றனர். இவை தவிர,

 மதுரை காமராசர் பல்கலைக்கழகத்தின் தொலைநிலைக் கல்வியில் தமிழ்த்

துறையில் ஆய்வியல் நிறைஞர் பட்டம் பயின்ற மாணவி த. சுதந்திராதேவி

(பதிவு எண்: A4C 6060007) என்பவர், திருச்சிராப்பள்ளி, பாரதிதாசன்

பல்கலைக்கழக உறுப்புக் கல்லூரியில் விரிவுரையாளராகப் பணியாற்றும்

முனைவர் துரை. மணிகண்டன் அவர்களை ஆய்வு நெறியாளராகக் கொண்டு

“முத்துக்கமலம் இணையவழிச் சிறுகதைகள் – மதிப்பீடு” எனும் தலைப்பில்

ஆய்வு செய்து ஆய்வியல் நிறைஞர் பட்டம் பெற்றிருக்கிறார்.

 திருச்சிராப்பள்ளி பாரதிதாசன் பல்கலைக்கழகத்துடன் இணைப்பு பெற்ற

திருச்சிராப்பள்ளி, பிசப் ஹீபர் கல்லூரி (தன்னாட்சி ஏ+) யில் தமிழ்த் துறையில்

ஆய்வியல் நிறைஞர் பட்டம் பயின்ற மாணவி பெ. கீதா (பதிவு எண்: 7TM124102)

என்பவர் அக்கல்லூரியின் தமித்துறை இணைப்பேராசிரியர் முனைவர் இரா.

விஜயராணி அவர்களை ஆய்வு நெறியாளராகக் கொண்டு "முத்துக்கமலம்

இணைய இதழ் உள்ளடக்கப் பகுப்பாய்வு” எனும் தலைப்பிலும் ஆய்வு செய்து

ஆய்வியல் நிறைஞர் (எம்.பில்) பட்டம் பெற்றிருக்கிறார்.



___________________________________



டிஸ்கி:- விபரங்கள் கொடுத்து உதவியமைக்கு நன்றி தேனி மு சுப்ரமணி சார்.



3 கருத்துகள் :

அப்பாதுரை சொன்னது…

முயற்சி முழுமையுற வாழ்த்துக்கள்.

அதீதம் என்று ஒரு இணைய இதழ் நினைவுக்கு வருகிறது. தென்றல் என்று அமெரிக்க தமிழ் இதழ் மின்னிதழாகவும் வந்து கொண்டிருந்தது.

விஸ்வநாத் சொன்னது…

madam, you can contact Navina Virutcham idhaz. Mr.Azagiya Singar is the contact. Web : http://www.navinavirutcham.in/

Thenammai Lakshmanan சொன்னது…

nandri Appadurai sir. nan katturai submit panala. :(

nandri Visu sir.

வலைப்பதிவர் ஒற்றுமை ஓங்கட்டும்.!
என்றும் நம்முள் வலிமை பெருகட்டும்.!

கருத்துரையிடுக

சும்மா ( பத்தி ) உங்க கருத்தையும் பதிவு செய்ங்க :)

Related Posts Plugin for WordPress, Blogger...