எனது 24 நூல்கள்

எனது 24 நூல்கள்
எனது இருபத்து நான்கு நூல்கள்

சனி, 1 ஜூலை, 2017

ஆனந்த விநாயகரும் அத்தானின் கடிதமும்.ஆனந்த விநாயகரும் அத்தானின் கடிதமும்.

ராஜமன்னார்குடிக்கு வருபவர்கள் ஒத்தைத் தெருவில் வீற்றிருக்கும் ஆனந்த விநாயகரையும், ராஜகோபால ஸ்வாமியையும் தரிசிக்காமல் திரும்பவே மாட்டார்கள். இவ்விரு தெய்வங்கள் மேலும் எனக்கு அசைக்க முடியாத ப்ரேமை உண்டு. அப்பா அடிக்கடி சந்தனக் காப்பு மண்டகப் படி செய்து மகிழ்வார்.

இவ்விரு தெய்வங்கள் பற்றியும் எனது சரசு அத்தை & சுப்பையா மாமாவின் ( அப்பாவின் அக்கா, அம்மாவின் அண்ணன் ) மகனான சுப்பு அய்த்தான் எழுதிய பாடல்களைப் பகிர்வதில் பெருமகிழ்வடைகிறேன் J
(அஹா அத்தான் நீங்க இப்பிடி கடவுள் வணக்கப் பாட்டு எழுதினத இப்பத்தான் பார்த்தேன். ஆச்சர்யமாயிட்டேன். உங்க அத்தைகள் மாதிரியே நீங்களும் ஆசுகவியா இருக்கீங்க.  அட்டகாசமா இருந்துச்சு. உடனே ப்லாக் போஸ்டாக்கிட்டேன். மன்னிச்சூ ப்ளீஸ். )


ஆனந்த விநாயகர் துதி. 

1.அந்தம் ஒன்றில்லா ஆனந்தம் பெற்றேன் – என்
கந்தனின் கண்ணான அண்ணனே ! ஆனைமுகனே !
பந்தம் காக்கும் பார்வதியின் புதல்வா ! உன்னைச்
சொந்தம் கொண்டாட எண்ணும் பொழுது.


2.ஆதியின் புதல்வா – ஆனந்தா வா !
சாதி பேதமற்றவன் நீ ! – சாந்தத்தின் திருவுருவே வா !
நீதியின் துணையும் நீ ! – நிம்மதியும் நீயே – வா ! உன்னை
துதி செய்கிறோம் தும்பிக்கையானே வா வா !

3. ஆனந்த நடமாடும் ஆனந்த விநாயகா – நினை
நானெந்த முறையில் நற்புகழ்பாட
தேனென்பேனோ, பாலென்பேனோ, தெவிட்டாத பாகென்பேனோ.

ராஜகோபாலசுவாமி துதி. 

1.மண்ணை ஆளும் மன்னா என் கண்ணா – உன்னை
மன்னையிலே மஞ்சள்நீர் ஆடக் கண்டேன்
பொன்னை நீ தரவேண்டாம், பொருள் ஏதும் வேண்டாம்
உன்னை நீ தரவேண்டும் – உன் அருளை நீ தரவேண்டும்.( திருமஞ்சனத்தை மஞ்சள் நீர் என்று சொல்லி இருக்கிறார்கள் என நினைக்கிறேன்.) 

2. ஆடியிலே வந்தேன் அம்மான் வீடுகாண
ஓடி ஆடிப் பணிபுரியும் அத்தை மகளும் கண்டேன் ( தேனம்மை)
ஆடிப் பெருக்கும் கண்டேன் ! ஆனந்தம் கொண்டேன் !.

டிஸ்கி:- ஆகா எனக்கும் ஒரு வரி கவிதையில் இடம் கிடைச்சிருக்கா. நன்றி நன்றி சுப்பைய்த்தான்


எவ்வளவு அழகான கையெழுத்து !!!இது 1977 இல் வந்த கடிதம். இப்பவெல்லாம் யார் கடிதம் எழுதுகிறார்கள். அது போக யார் உறவினர் வீட்டுக்கு எல்லாம் போறாங்க. அப்போவெல்லாம் அத்தைமக்கள், அம்மான் மக்கள், சித்தப்பா மக்கள் பெரியப்பா மக்கள் எல்லாம் ஒவ்வொருவர் வீட்டுக்கும் செல்வோம். மிக அதிகமாக பாட்டி வீடு ரெண்டுபடும். அது போக வந்து சென்றபின் பாசமான கடிதங்களும் பரிமாறப்படும். கொடுத்து வைச்சவங்க நாங்கதான்னு ( அதாவது எங்க தலைமுறைதான்னு)  நல்லா உரத்துச் சொல்வேன். இப்ப ப்லாக் மூலமா உலகெங்கும் சொல்லிட்டேன் J  

4 கருத்துகள்:

 1. அந்தக் காலத்தில் உறவுகள் சூழ வாழ்ந்திருந்ததற்கு நீங்கள் எழுதியது போல நாமெல்லாம் நிச்சயம் கொடுத்து வைத்தவர்கள் தான் தேனம்மை!

  மன்னார்குடி என் ஊராயிற்றே! அது தான் உள்ளே நுழைந்து விட்டேன். நீங்கள் எழுதியதைப்படித்ததும் ஹரித்ராநதி தெப்பமும் வெண்ணெய்த்தாழியும் நினைவில் வந்து மோதுகிறது.

  உங்கள் உறவினரின் கவிதைகளும் கையெழுத்தும் அருமை!

  பதிலளிநீக்கு
 2. Super Thenu. There is no place like Mannargudi and as you said we are the lucky generation to have enjoyed the company of our relatives very much.

  பதிலளிநீக்கு
 3. NANDRI MANO MAM

  NANDRI GOWRI

  NANDRI MEY.


  வலைப்பதிவர் ஒற்றுமை ஓங்கட்டும்.!
  என்றும் நம்முள் வலிமை பெருகட்டும்.!

  பதிலளிநீக்கு

சும்மா ( பத்தி ) உங்க கருத்தையும் பதிவு செய்ங்க :)

Related Posts Plugin for WordPress, Blogger...