திங்கள், 31 ஜூலை, 2017

பேரமைதி வழங்கும் ஃபிலோமினா சர்ச்.ஆசியாவிலேயே மிக உயரமான சர்ச் மைசூரில் உள்ளது. அளவில் ஆசியாவின் இரண்டாவது பெரிய தேவாலயம். ஒரு முறை மைசூர் சிட்டி டூர் சென்றபோது இங்கேயும் சென்று வந்தோம்.செயிண்ட் ஃபிலோமினா கதீட்ரல் எனப்படும் சர்ச், செயிண்ட் ஜோசப் சர்ச் எனவும் அழைக்கப்படுது. இது ரோமன் கத்தோலிக்கர்களின் திருச்சபை ஆகும்.
1843 இல் மும்முடி கிருஷ்ணராஜ உடையாரால் கட்டுவிக்கப்பட்டது. 1926 இல் நல்வாடி கிருஷ்ணராஜ உடையார் என்பவர் மூலம் திருத்தி அமைக்கப்பட்டது.இந்த தேவாலயம் டாலி என்ற ஃப்ரெஞ்சுக்காரரால் வடிவமைக்கப்பட்டதாம். ஜெர்மனியின் கொலாஞ்ச் கதிட்ரலைப் போன்று கட்டப்பட்டது. நியூயார்க்கின் செயிண்ட் பாட்ரிக்ஸ் சர்ச்சைப் போல நியோ கோதிக் பாணியில் அமைக்கப்பட்ட ஆசியாவின் மிக உயரமான சர்ச் என்கிறார்கள்.  800 பேர் அமரக்கூடிய பெரிய சர்ச். தேவாலயத்தின் இரட்டைக்கோபுரங்களும் 175 அடி உயரம் உள்ளன. அதில் அமைக்கப்பட்டுள்ள கண்ணாடி ஜன்னல்கள் அனைத்திலும் கிறிஸ்துவின் பிறப்பு, கடைசி விருந்து, சிலுவைப்பாடு, உயிர்த்தெழுதல் ஆகியன வண்ண ஓவியங்களாகக் காட்சிப்படுத்தப்பட்டுள்ளன.  இங்கே புனிதரான ஃபிலோமினா அவர்களின் திரு உடல் பலிபீடத்தின் கீழ் இருக்கும் ஒரு அறையில் கண்ணாடிப்பேழையில் பாதுகாப்பப்படுகிறது.செயிண்ட் ஃபிலொமினா அவர்கள் கி பி 4 ஆம் நூற்றாண்டில் வாழ்ந்த க்ரேக்க இளவரசி. 14 வயது நிரம்பாத அப்புனிதரது திருவுடல் 1802 இல் ரோமில் கண்டெடுக்கப்பட்டது. அதில் இருந்த டைல்களை ஒழுங்குபடுத்தியதில் இந்த வார்த்தைகள் கிடைத்தன. PAX DECUM FILUMENA - PEACE WITH YOU. PHILOMENA.ஒரு விடுமுறை நாளில் பெங்களூரில் இருந்து மைசூரைச் சுற்றிப்பார்க்கச் சென்றோம். ஸ்ரீரங்கப்பட்டினம், மைசூர் அரண்மனை, பிருந்தாவன், மைசூர் சில்க் எம்போரியம், சாண்டல்வுட் கடைகள், சாமுண்டேஸ்வரி கோயில், செயிண்ட் ஃபிலோமினா கதீட்ரல் சென்றோம். உண்மையிலேயே செயிண்ட் ஃபிலோமினா சர்ச்  சென்றதும் மனதில் பேரமைதி நிலவியது . நிச்சயம் ஒருமுறையாவது செல்லவேண்டிய இடம்.

டிஸ்கி:- இவற்றையும் பெங்களூருவில் பாருங்க.

1.  மலர்க் கண்காட்சியும் போன்சாய் மரமும், சில்க் காட்டன் மரமும், கல் மரமும் லால் பாகில்.

2.குடியரசு தினத்தில் லால் பாகில் காய் கனி அணிவகுப்பு. ( 2014)
.
3. லால்பாகில் கோடையைத் தணிக்கும் கீரைகள். 

4. நான் தன்னந்தனிக்காட்டு ராஜா. பாகம் 1

5. இன்னும் சில ஒற்றையர்கள். பாகம் 2

6. மஞ்சள் முகமே வருக. (LAL BAGH )

7. குடியரசு/சுதந்திர தினத்தில் லால்பாக்.

8. இன்னும் சில ஒற்றையர்கள் பாகம் 3

9.  காதல் ரோஜாவே. -- பாகம் 4

10. காதல் ரோஜாவே..-- பாகம் 5
 

11. கோடையைக் குளுமையாக்கும் ஒரு கூடைப் பூக்கள்.

12. கழிவுநீரிலும் உயிர்க்கும் கல்வாழைகள்.

13. பிருந்தாவனத்தில் இசை நீரூற்றின் வண்ண நடனம். மைசூரில் வண்ணமயமான கோடை.

14. பணம் கொழிக்கும் பனசங்கரி – சாகம்பரி.

15. என் தோட்டத்தில் எத்தனை ரோஜா. இருவர்

16.  பிருந்தாவனத்தில் இசை நீரூற்றின்  வண்ண நடனம். மைசூரில் வண்ணமயமான கோடை.

17.பேரமைதி வழங்கும் ஃபிலோமினா சர்ச்.

3 கருத்துகள் :

வெங்கட் நாகராஜ் சொன்னது…

அழகான இடம்.

G.M Balasubramaniam சொன்னது…

செயிண்ட் ஃபிலொமினா சர்ச்சுக்குப் போய் இருக்கிறோம்

Thenammai Lakshmanan சொன்னது…

nandri Venkat sago

appadiya Bala sir..

வலைப்பதிவர் ஒற்றுமை ஓங்கட்டும்.!
என்றும் நம்முள் வலிமை பெருகட்டும்.!

கருத்துரையிடுக

சும்மா ( பத்தி ) உங்க கருத்தையும் பதிவு செய்ங்க :)

Related Posts Plugin for WordPress, Blogger...