எனது 24 நூல்கள்

எனது 24 நூல்கள்
எனது இருபத்து நான்கு நூல்கள்

செவ்வாய், 11 ஜூலை, 2017

காரைக்குடி ஸ்ரீ ராமவிலாஸம் தியேட்டர்.இருளில் மூழ்கிக் கிடக்கும் அந்தத் தியேட்டரில்தான் கல்யாணியின் கணவன் படம் பார்த்தேன். 1963 இல் வந்த படம் திரும்பவும் 1983 வாகிலும் வந்திருந்தது. “நமது ராஜ சபையிலே ஒரே சங்கீதம். அதில் இரவும் பகலும் தூக்கமில்லை ஒரே சந்தோஷம்” என்ற பாடல் மறக்க இயலாதது.  இங்கே மணாளனே மங்கையின் பாக்கியம் போன்ற மாயாஜாலப் படங்களும், இராஜா ராணிக் கதை உள்ள படங்களும் பார்த்திருக்கிறோம்.காரைக்குடி முத்துப்பட்டணத்தில் வ உ சி ரோட்டில் இருக்கும் ஸ்ரீ ராமவிலாஸம் தியேட்டர்தான் அது. சினிமா முடிந்து வந்ததும் வெளியே இருளில் சாலைகள் எல்லாம் ஜில்லென்று இருக்கும். பரோட்டாக் கடைகளில் முட்டைப் பரோட்டாவுக்காகக் கொத்திக் கொண்டிருப்பது தாள லயத்தோடு பசியைத் தூண்டும். அப்போதெல்லாம் வெளியே பரோட்டா எல்லாம் வாங்கிச் சாப்பிட்டுப் பழக்கமில்லை.
சினிமாவே பெரியவர்கள் பார்த்துவிட்டு சென்சாரெல்லாம் செய்து ரொம்ப நல்லா இருக்கு என்று சொன்னால்தான் அழைத்துச் செல்வார்கள். காரைக்குடியில் இருக்கும் ஆறு தியேட்டர்களில் ( இராமவிலாசம், நடராஜா, நியூ சினிமா, அருணாசலா என்ற ஆனந்த் என்ற சத்யம் தியேட்டர் இவை நான்கும் பழசு. பாண்டியன், சிவம் இரண்டும் 1980 களில் புதுசு ) இப்ப எங்கேயும் கூட்டமில்லை. நடராஜா மட்டும் கொஞ்சம் வுட்லாண்ட்ஸ் பாணியில் சீட்டை கம்மி பண்ணி டிடி எஸ் வசதியுடன் கொஞ்சம் மாயாஜாலம் காட்டுவதால் டங்கல் படம் குடும்பத்தோடு பார்த்தோம். 

 ( பள்ளி வயதில் கை கொடுக்கும் கை, கண்ணா மூச்சி, மாயா பஜார், இது போல் மா, காளி சரண், ஆகிய ஹிந்திப் படங்களையும் மன்னையில் கல்கி தியேட்டரிலும் செம்பகா தியேட்டரிலும் சாந்தி தியேட்டரிலும் பார்த்திருக்கிறோம். – வரலாறு முக்கியமில்லையா J )
அடுத்து ராமவிலாஸில் திருவிளையாடல் வந்து சக்கைப் போடு போட்டது. அதுவும் மறு வெளியீடாக இருக்கும். கூட்டம்னாக் கூட்டம் கொள்ளைக் கூட்டம். தூணுக்குத் தூண் மறைக்கும். இருக்குற சேர் போக சைடில் எல்லாம் பெஞ்ச் போட்டு உக்கார வைச்சிருப்பாங்க. அது போக உள்ளே நுழையும் படிக்கட்டில் எல்லாம் உக்கார்ந்து பார்ப்பாங்க. பலர் கதவு ஓரமா நின்னே முழுப்படமும் பார்ப்பாங்க. எம்ஜியாருக்கும் சிவாஜிக்கும் காரைக்குடியில் ரொம்ப மவுசு இருந்த காலம் அது. 

திருவிளையாடலில் நீலச்சேலை கட்டிக் கொண்ட சமுத்திரப் பொண்ணு நீ நெருங்கி வந்து பார்ப்பதென்ன சொல்லடி கண்ணு என்ற பாடலை சாவித்ரி பாடி முடித்ததும் சிவாஜி ம்யூசிக் ஒலிக்க ஒரு நடை நடந்துவருவார் பாருங்க அதுக்குன்னே ரசிக்கப் பெரும் கூட்டம் உண்டு. 
 
எல்லா தியேட்டரிலும் டிக்கெட் வாங்கக் காத்திருக்கணும். உள்ளே நுழைய கதவு சாத்தி இருக்கும். முதல் ஆட்டம் எப்ப முடியுமோன்னு இருக்கும். 

அதே போல் இண்டர்வெல்லில் இடது சைடில் பாத்ரூம் போக லைட் போடப்பட்டிருக்கும். வலது பக்கம் தின்பண்டக் கடைகளும் ஜெகஜ்ஜோதியா லைட் போட்டுக் காத்திருக்கும். அங்கே எல்லாம் தின்பண்டம் வாங்கித் தரமாட்டாங்க. என்ன எண்ணெயில போட்டிருப்பாங்களோன்னு பயம்தான். முட்டை போண்டா, சிப்ஸ், கடலை, பாப்கார்ன், காளிமார்க் கலர் , சோடா எல்லாம் மத்தவங்க குடிக்க நாம கொண்டு போன பிஸ்கட்டையும் கடலை முட்டாயையும் ஸ்கூல் வாட்டர் பாட்டில்ல கொண்டு போன (சுடவைச்சு ஆறவைச்ச) தண்ணியையும் குடிச்சிட்டு இருப்போம் J{{{ஆனந்த் தியேட்டரில் சோமண்ணன் ( ஐயாவிடம் முன்பு வேலைபார்த்தவர் ) டிக்கெட் கிழிக்கும் இடத்தில் இருப்பதால் சினிமா பார்க்கப் போனாலே நல்ல சீட்டாகப் பார்த்து உக்கார வைத்துவிட்டுப் போவார்கள். இண்டர்வெல்லில் நொறுக்குத்தீனிகளுடனும் காளிமார்க் பன்னீர் லெமனுடனும் வந்து விடுவார்கள். டிக்கெட் கூட வாங்க விடமாட்டார்கள். கட்டாயப்படுத்திக் கொடுக்கணும்.}}}

இதே ராமவிலாஸம் தியேட்டரில் திருமணத்துக்கு முன் சலங்கை ஒலியும் திருமணத்தின் பின் சிப்பிக்குள் முத்தும் பார்த்து பிரமித்திருக்கேன். பத்துவருடத்துக்கு முன்பு டாக்டர் வசூல்ராஜா எம்பிபிஎஸ்ஸும் பார்த்திருக்கோம். J

நடிகர் ரஹ்மான் நடித்த கண்ணே கனியமுதே இந்தப் படம்தான் திருமணம் ஆனதும் நாங்களும் புதிதாய்த் திருமணம் ஆன என் நாத்தனார் குடும்பமும் பார்த்த முதல் படம். அந்த மாடிப்படியேறும் படிகள் புது கனவு உலகுக்கு நம்மை அழைத்துச் செல்லும். கடைசியாய்ப் பார்த்தது என் முகநூல் நண்பர் டாக்டர் திரு உதயராஜா அவர்களின் மாப்பிள்ளை கணேஷ் எடுத்த பண்ணையாரும் பத்மினியும் படம்தான். மிக அருமையான படம். ஒனக்காகப் பிறந்தேனே எனதழகா ஒறங்காமே இருப்பேனே பகலிரவா என்ற பாடல் வரிகள் மிக அழகுஇருளில் மூழ்கிக் கிடக்கும் இந்தத் தியேட்டரின் யானைக்கால்கள் போன்ற வழு வழு தூண்களை அன்றுதான் நான் கடைசியாகப் பார்த்தது. காலில் கூட காரைக்குடி மண் தட்டுப்பட மிகவும் புராதனமாக இருந்தது தியேட்டரின் வெளிப்புறத்தைவிட உள்புறம். தியேட்டர் என்னவோ புதுப்பித்தால் ஓரளவு ஓடும் என்றுதான் தோன்றுகிறது என்ன செய்யப்போகிறார்களோ மூடியே கிடைக்கிறது. அதைக் கடக்கும்போதுதான் நமது காதுகளில் திடீரென ராஜா ராணி பேசும் வசனமும் குளம்படிச் சத்தங்களும் போரின் முரசங்களும் காதல் பாடல்களும் ஒலிக்கின்றன. என்னவாக ஆகப்போகிறோம் என்றறியாமல் மௌனத்துயிலில் ஆழ்ந்திருக்கிறது இராமவிலாஸம்.

11 கருத்துகள்:

 1. பலவான்குடி செல்ல (ஓ.சிறுவயல் வழி)
  பர்ஸ்ட்பீட் என்று அழைக்கப்படும் ஆரம்பத்தில் இருந்து கழனிவாசல் நோக்கி பயணித்தால் இராமம விலாஸ் வரும் அந்த நீண்ட சாலையில் சைக்கிள் பயணம். சில படங்கள் பார்த்திருக்கிறோம்.

  பதிலளிநீக்கு
 2. தியேட்டர் நினைவுகள். பழைய தியேட்டர்களை மூடிக்கொண்டு வருவது சோகம்.

  பதிலளிநீக்கு
 3. அருமை.
  பழைய நினைவுகளை அசைப்போடுவதும் ஒரு சுகமே; இதுவும் கூட ஒருவித போதைதான்.

  பதிலளிநீக்கு
 4. vanakkam. Thiruvilaiyadal "neela chelai" paatil vandathu Chavithri endru ninaikkiren.

  பதிலளிநீக்கு
 5. இதில்தான் நான் பணத்தோட்டம் பார்த்தேன் பழைய நினைவுகள்.

  பதிலளிநீக்கு
 6. தியேட்டர்களெல்லாம் இப்போது திருமணக்கூடங்களாக மாறிவருகின்றன.

  பதிலளிநீக்கு
 7. முன்னால் இரண்டு சிறிய யானை சிலைகள், வாயிலுக்கு அருகில். பழைய நினைவுகள்

  பதிலளிநீக்கு
 8. நானும் எனது அரக்கோணம் நாட்களில் டூரிங் டாக்கீசில் படம்பார்த்த அனுபவங்களைப் பகிர்ந்திருக்கிறேன் என் பத்து வயதுக்கு முன்

  பதிலளிநீக்கு
 9. ATHEYTHAN PALANICHAMY SIR.

  AAM VENKAT SAGO

  AAM VISU SIR.

  THIRUTHIVITTEN PEYARILLA !

  AHAA ARUMAI KILLERJI SAGO

  NANDRI MOHAMED SAGO

  AAM JAMBU SIR

  AVLO GNABAGAM ILAIYEE.. PEYARILLA

  ARUMAI BALA SIR.


  வலைப்பதிவர் ஒற்றுமை ஓங்கட்டும்.!
  என்றும் நம்முள் வலிமை பெருகட்டும்.!

  பதிலளிநீக்கு
 10. ஹையோ எங்கள் சின்ன வயசு தியேட்டர் நினைவுகள்!!! மலர்ந்திடுச்சு சினிமாவாய்!!ஹஹஹ்

  கீதா: //சினிமாவே பெரியவர்கள் பார்த்துவிட்டு சென்சாரெல்லாம் செய்து ரொம்ப நல்லா இருக்கு என்று சொன்னால்தான் அழைத்துச் செல்வார்கள்.//

  அதே அதே

  கதவுக்குப் பக்கத்துல நின்னு பார்க்கறது// ஆஅ யெஸ் யெஸ்....

  //எல்லா தியேட்டரிலும் டிக்கெட் வாங்கக் காத்திருக்கணும். உள்ளே நுழைய கதவு சாத்தி இருக்கும். முதல் ஆட்டம் எப்ப முடியுமோன்னு இருக்கும்.//

  ஹையோ இதுவும் அப்படியே!!!

  தரை டிக்கெட்ல கூடப் பார்த்திருக்கேன்....அதுவும் கீச்சு கீச்சுத் தாம்பாளம் விளையாடிக்கிட்டே கூட ஹஹஹ

  பதிலளிநீக்கு

சும்மா ( பத்தி ) உங்க கருத்தையும் பதிவு செய்ங்க :)

Related Posts Plugin for WordPress, Blogger...