எனது 24 நூல்கள்

எனது 24 நூல்கள்
எனது இருபத்து நான்கு நூல்கள்

செவ்வாய், 4 ஜூலை, 2017

தமிழ்ப்பண்பாட்டு மையம் மற்றும் கல்வியாளர்கள் சங்கமம் – பன்னாட்டுக் கருத்தரங்கம் – 2017.தமிழ்ப்பண்பாட்டு மையம் மற்றும் கல்வியாளர்கள் சங்கமம் – பன்னாட்டுக் கருத்தரங்கம் – 2017.

காரைக்குடி அழகப்பா பல்கலைக்கழகத்தில் வரும் ஆகஸ்ட் மாதம் அழகப்பா பல்கலைக்கழகத்தின் தமிழ்ப்பண்பாட்டு மையம் மற்றும் கல்வியாளர்கள் சங்கமத்தின் தமிழ்வளர்ச்சிக் குழுமம் இணைந்து நடத்தும் பன்னாட்டுக் கருத்தரங்கம் நடைபெறவுள்ளது. 


இதில் 21-ம் நூற்றாண்டில் தமிழின் நோக்கும் போக்கும் என்ற தலைப்பில் நடக்கப் போகும் கருத்தரங்கத்துக்கு பின்வரும் 21 தலைப்புகளில் ஆய்வுக்கட்டுரை அனுப்ப விழைபவர்கள் அனுப்பலாம். 


1.தமிழ்வளர்ச்சியில் இணையத்தின் பங்கு,.
மிச்சத்தை அந்த புகைப்படத்தில் பாருங்கள். 

2017, ஜூலை 15 ஆம் தேதிக்குள் கிடைக்க வேண்டும். மேலும் படிவத்தைப் பூர்த்தி செய்து 700/- ரூ கட்டணம் செலுத்தி அனுப்பவும்.  Centre For Tamil Culture என்ற பெயரில் காரைக்குடியில் மாற்றத்தக்க வரைவோலையாக அனுப்பலாம். அல்லது இந்தியன் வங்கியில் கணக்கு எண்: 6526141690 (Indian Bank, AC Campus, Karaikudi ) செலுத்தி அதன் இரசீது நகலைக் கட்டுரையுடன் அனுப்பலாம். 

கட்டுரைகள் A4  தாளில் ஒருங்குறி செந்தமிழ் எழுத்துருவில் 4 பக்கங்களுக்கு மிகாமல் இருக்கவேண்டும். இதை pavaisenthamizh17@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு அனுப்புவதோடு குறுந்தகட்டிலும் அனுப்பவேண்டும். 

ஆய்வுக்கட்டுரைகள் அனைத்தும் புத்தகக் குறியீட்டு எண்ணுடன் நூலாக்கம் செய்யப்பட்டு கருத்தரங்க நாளிலேயே வழங்கப்படுமாம்

2 கருத்துகள்:

  1. தமிழை இப்போதுதான் வாசிக்கவும் சுவைக்கவும் ஆரம்பித்து இருக்கிறேன் ஆய்வுக் கட்டுரை என்பதைநினைத்தும் பார்க்க முடியாது பதிவர் ஒற்றுமை வளர்க

    பதிலளிநீக்கு
  2. NANUMTHAN BALA SIR. :)


    வலைப்பதிவர் ஒற்றுமை ஓங்கட்டும்.!
    என்றும் நம்முள் வலிமை பெருகட்டும்.!

    பதிலளிநீக்கு

சும்மா ( பத்தி ) உங்க கருத்தையும் பதிவு செய்ங்க :)

Related Posts Plugin for WordPress, Blogger...