எனது 24 நூல்கள்

எனது 24 நூல்கள்
எனது இருபத்து நான்கு நூல்கள்

திங்கள், 24 ஜூலை, 2017

வள்ளல் அழகப்பர் அருங்காட்சியகம்.


உள்ளம் அழகா இருந்தா ஊரே அழகா இருக்கும். தன் பேரும் அழகா இருக்கும் ஒருத்தரைப் பற்றிச் சொல்லிக்கிட்டே போகலாம்.

காரைக்குடியைக் கல்விக்குடியாக மாற்றியவர் வள்ளல் அழகப்பர். அவரோட வள்ளல்தன்மைக்கு முன்னாடி கர்ணன் மட்டும்தான் நிக்கமுடியும்.

தன் கவசத்தைக் கொடுத்த கர்ணன் மாதிரி அரண்மனை போன்ற தனது இல்லத்தைப் பெண்கள் கல்லூரி துவங்கக் கொடுத்தவர்.

கல்விக்கூடம், ஆராய்ச்சிக்கூடம், கட்ட ஏக்கர்கணக்கில் தனது சொந்த நிலத்தை வழங்கியவர்.

1943 இலேயே ஒரு லட்சம் ரூபாயை கல்விப்பணிக்காக நன்கொடை வழங்கியவர். இவர் செய்த பணிகளைப் பட்டியலிட்டால் அது நீண்டுகொண்டே போகும்.

கிட்டத்தட்ட 47 ஏ ஆண்டுகள் வாழ்ந்த இவர் செய்த சாதனைகள் கணக்கில் அடங்கா.

ஆங்கில இலக்கியத்தில் முதுகலைப் பட்டம் பெற்றவர். இங்கிலாந்தில் பாரிஸ்டர் பட்டம் பெற்றவர். லண்டன் சாட்டர்ட் வங்கியில் பயிற்சி பெற்ற முதல் இந்தியர். விமானம் இயக்கத் தெரிந்தவர்.

கேரளா, மலேஷியா, பர்மா, கல்கத்தா, பம்பாய், சென்னை ஆகிய இடங்களிலும் தனது வியாபாரத்தை விரிவுபடுத்தியவர்.

டெக்ஸ்டைல்ஸ், டீ எஸ்டேட், ஈயச்சுரங்கம், இன்சூரன்ஸ் கம்பெனி , ஹோட்டல்கள், தியேட்டர்கள்,  பங்குவணிகம் எனப் பரந்துபட்ட வியாபாரம் இவருடையது.

இவை எல்லாவற்றையும் விட இவர் ஆரம்பித்த கல்விச்சாலையும் பல்வேறு இடங்களில் கல்விச்சாலைகளுக்கு வழங்கிய நன்கொடையும்தான் இன்றும் இவர் பெயரைப் பறைசாற்றிக் கொண்டிருக்கிறது.

ஆங்கில அரசு வழங்கிய சர் பட்டத்தை ஏற்காதவர் இவர் . 1957 ஆம் ஆண்டு இவருக்கு பத்மபூஷண் விருது வழங்கி கௌரவம் பெற்றது அவ்விருதும் நமது தேசமும்.


இவர்போல் ஒரு மனிதர் இனித்தான் பிறந்துவரவேண்டும். 

இவரது 108 ஆவது பிறந்தநாளை ஒட்டி இவரைக் கௌரவிக்கும் விதத்தில் காரைக்குடியில் ஒரு அருங்காட்சியகம் ஆரம்பிக்கப்பட்டுள்ளது.

இதில் இவரது குழந்தைப்பருவம் முதல் இவர் முழு வாழ்க்கைச் சரிதமும் புகைப்படமாகப் பதிவு ஆகியுள்ளது.

மினி தியேட்டர் ஹாலில் இவர் பற்றிய டாகுமெண்டரி ஒன்று திரையிடப்படுகிறது.

இது போக இங்கே தமிழ்ப் பண்பாட்டு மையம் தமிழகத்தின் தென்னகத்தின் செட்டிநாட்டின் பாரம்பரிய வாழ்வு முறைகளையும் முன்னோர் பயன்படுத்திய/பயன்படுத்தி வரும் பொருட்களையும் தனித் தனியாகக் காட்சிப்படுத்தியுள்ளது சிறப்பு.
முகப்புத் தோற்றம்.


உள்புறம்.நிறையப்பேருக்குக் கல்விக் கண் திறந்த வள்ளல். வாழ்வளித்த பெருந்தகை.

ஐவகைத் திணைகளில் வாழ்வு


மூவேந்தர்கள்.

பண்டைக்காலத்திய வரலாற்று ஆவணங்கள்.

எரகா மரம் எனப்படும் இரவை மரத்தில் செய்யப்பட்டது. . - கால்வாய்களில்/வாய்க்கால்களில் இருந்து நீர் இறைக்க உபயோகப்படுத்திய கருவி.

மரக்கால் எனப்படும் அளவிக் கருவிகள். ( உழக்கு , ஆழாக்கு , படி போன்றவை )பல பொருட்கள் கண்ணாடிக் கூண்டுக்குள் இருந்தாலும் சில வெளிப்படையாகவே ஷெல்ஃபில் அடுக்கப்பட்டிருந்தன. கல்லூரி இளைஞர்கள் நால்வர் அங்கே வந்திருந்தார்கள். ஒவ்வொரு பொருளையும் தொட்டுப் பார்ப்பது, எடுத்துப் பார்ப்பது விமர்சிப்பது என்று ஒரே சத்தம்.

காட்சிக்கு வைக்கப்பட்டிருக்கும் அனைத்துப் பொருட்களுக்கும் கண்ணாடிக் கூண்டு போட முடியுமா. காட்சிக்கு வைக்கப்பட்டிருக்கும் பொருட்கள் பார்வைக்கு மட்டுமே அவற்றைத் தொடக்கூடாது என்பது அவர்களுக்குத் தெரியாதது வேதனை தரும் செயல். 

ஹால் ஹாலா பித்தளை, இரும்பு, மங்கு, சீர் வரிசை என அடுக்கப்பட்டிருக்கின்றன. சின்னஞ் சிறுமிகள் இருவர் விளையாட்டுப் பொருட்களை ( பம்பரம் ) அப்படித்தான் எடுத்துக் கீழே போட்டு உடைத்துக் கொண்டிருந்தார்கள். நம்மைக் கண்டதும் அவர்களது பெற்றோர் விரைந்து அழைத்துச் சென்றார்கள்.


கலப்பைகளும் கொட்டான்களும் ஏறுதழுவுதலும்.

உழவும் மரக்கட்டில் ஊஞ்சலும் சிறு குடிலும்.

திரும்பவும் கேலரிக்கு வந்தாச்சு


அழகப்பர் உபயோகப்படுத்திய பொருட்கள். மூக்குக் கண்ணாடி, பாஸ்போர்ட்
அவரது கோட் ஷால்,நடுநாயகமாக தங்க அரளிப் பூக்கள் முன்னிருக்க வீற்றிருக்கும் தங்க மனிதர்.

2007 இல் இவரைக் கௌரவிக்க அரசால் வெளியிடப்பட்ட ஸ்டாம்பு.

ஊரே விருந்துண்ட திருமணம் இவரது மகள் உமையாள் இராமநாதன் அவர்களின் திருமணமாகத்தான் இருக்கும்.

கல்கி தீபாவளி மலரிலும் இது வெளியாகி உள்ளது சிறப்பு !

வள்ளல் வாழ்ந்த இல்லம்.


என்றும் மாறாப் புன்னகையுடன் ஒளிரும் கல்வி வள்ளல்

என் காமிராக் கண்ணால பார்த்தா போதுமா. உங்க கண்ணாலயும் பார்க்கணும்ல . சோ ஒரு தரம் விசிட் செய்ங்க. நிறையத் தெரிஞ்சுக்குங்க.
இது காரைக்குடி கல்லூரிச்சாலையில் அமைந்திருக்கு. எல்லா நாளும் மாலை நாலு மணி முதல் ஏழு மணி வரையே திறந்திருக்கும்.

பள்ளிச்சிறுவர்கள் ஒவ்வொருவரும் இவரைப்பற்றித் தெரிந்துகொள்ளவேண்டும்.  அனைத்துப் பள்ளிகளும் தங்கள் மாணாக்கர்களை இங்கே அழைத்துவந்து வள்ளல் பற்றி அறியச் செய்ய வேண்டும்.

டிஸ்கி:-

இதையும் பாருங்க.

கொடையின் கதை - ஒரு பார்வை.

4 கருத்துகள்:

 1. நான் கேள்விப்பட்ட வரை பெரும்பாலான நகரத்தார் பணம் ஈட்டுவதில் கெட்டிக்காரர்கள் ஆனால் ஈட்டியதை வழங்குவோரில் அழகப்பா நெடிதுயர்ந்து நிற்கிறார்

  பதிலளிநீக்கு
 2. நல்ல அறிமுகம். பார்க்க முயற்சி செய்வோம்.நன்றி

  பதிலளிநீக்கு
 3. thanks Venkat sago

  aamam Bala sir

  thanks Baskar sago :)

  வலைப்பதிவர் ஒற்றுமை ஓங்கட்டும்.!
  என்றும் நம்முள் வலிமை பெருகட்டும்.!

  பதிலளிநீக்கு

சும்மா ( பத்தி ) உங்க கருத்தையும் பதிவு செய்ங்க :)

Related Posts Plugin for WordPress, Blogger...