எனது 24 நூல்கள்

எனது 24 நூல்கள்
எனது இருபத்து நான்கு நூல்கள்

திங்கள், 24 ஜூலை, 2017

இராமேசுவரம் நகரவிடுதி.

தீர்த்த யாத்திரை செல்பவர்கள் முதலில் காசி சென்று விசுவநாதர் விசாலாட்சியை வணங்கி கங்கையின் 64 கட்டங்களிலும் நீராடித் தீர்த்தம் எடுத்துவருவார்கள்.

ராமேஸ்வரம் எடுத்துவந்து ராமநாத சுவாமிக்கு அபிஷேகம் செய்து அங்கே கடலில் புனித நீராடி அதன்பின் 22 புண்ணிய தீர்த்தங்களிலும் கோயிலுக்கு வெளியே அமைந்திருக்கும் ராமதீர்த்தம், லெக்ஷ்மண தீர்த்தம், சீதை தீர்த்தத்தில் நீராடி அந்தப் புனிதநீரையும் ஒரு குடுவையில் சேமித்து மதுரை வந்து வணங்கி அதன் பின் காசி சென்று அந்தத் தீர்த்தத்தால் விசுவநாதர் விசாலாட்சியை அபிஷேகம் செய்து வணங்குவார்கள்.   (தீர்த்தமாடுபவர்களுக்கு ஒரு நபருக்கு ரூ 125/-)  இதுதான் அந்தக் காலத்திய தீர்த்த யாத்திரை நடைமுறை.

நீத்தார் கடன் தீர்க்கவும் திருச்சி ஸ்ரீரங்கம், காசி, ராமேஸ்வரம் சென்று அஸ்தியைக் கரைத்து பிண்டம் கொடுத்து வழிபடுவதுண்டு. இதே முதலாம் ஆண்டு இரண்டாம் ஆண்டு தலைத் திவசமெனிலும் ராமேஸ்வரம் சென்று பித்ருக்களுக்கு வழிபாடு செய்து பிண்டம் கொடுப்பதுண்டு. சேதுக்கடல் அக்னி தீர்த்தத்தில் ஆத்ம தர்ப்பணம் கொடுப்பதுண்டு. ஆடி அமாவாசை, மாளய அமாவாசையில் கொடுப்பது சிறப்பு.

இராமேஸ்வரத்திலும் தேவிபட்டிணத்திலும் நகரவிடுதிகள் அருமையாகப் பராமரிக்கப்படுகின்றன.

நகர விடுதிகள் ஸ்தல யாத்திரை செல்லும் பக்தர்களுக்கு குறைந்த வாடகையில் தங்க இடம் அளிக்கின்றன. காசிச் சத்திரத்தில் அனைத்து மக்களுமே இப்போது தங்க அனுமதிக்கப்படுகிறார்கள்.

ஸ்ரீ காசி நாட்டுக்கோட்டை நகரச் சத்திரம் மேலாண்மைக் கழகம் கி. பி. 1813 இல் ஆரம்பிக்கப்பட்டது. இதன்படி காசி விசுவநாதர் கோயிலுக்கு ஆறுகால பூசைக்காகப் பூக்கள் வழங்க சம்போ எனப்படும் பூசைக்கட்டளையைக் காசி ராஜாவிடம் இருந்து கேட்டுப் பெற்றுள்ளார்கள். இன்றுவரை அந்தக் கட்டளை குறைவில்லாமல் நிறைவேறி வருகிறது. 

இதன் கிளையாய் எல்லா ஸ்தலங்களிலும் இடம் வாங்கி ஸ்தல யாத்திரை மேற்கொள்வோர் பயணடைய சத்திரங்கள் கட்டப்பட்டுப் பயன்பாட்டில் இருந்து வருகின்றன.

கி. பி 1871 இல் நிறுவப்பட்ட இராமேசுவரம் விடுதி 1977 இல் ஒரு முறையும் 2015 மே மாதம் இன்னொரு முறையும் புதுப்பிக்கப்பட்டுள்ளது.

{{தேவிபட்டிணத்தில் காப்பாளராக ஒரு பெண்மணி இருக்கிறார். மிகப் பெரிய ஹாலும் பாத்ரூம் டாய்லெட்டும் கூடியது அந்த விடுதி. தனியறைகள் இல்லை. காப்பாளர் தங்கிக் கொள்ளவும் உணவு சமைக்கவும் அவருக்கு மட்டுமே இரு அறைகள் உண்டு.

ஒரு ஷெல்ஃபில் சாமி படங்கள் வைத்து செம்பருத்திப் பூக்கள் சூட்டி வைத்திருந்தார்.

அதிகம் இருந்த உணவை அதன் காப்பாளரான பெண்மணியிடம் கொடுத்து வேலை செய்வோரிடம் கொடுக்கச் சொன்னபோது நாங்கள் கொடுத்த பாத்திரத்தில் இருந்த உணவை தன்னிடமிருந்த பாத்திரங்களில் மாற்றி வைக்கும்போது சிவாய நமஹ, நமச் சிவாய என்று சொல்லிக்கொண்டே ஒவ்வொரு கரண்டி அமுதத்தையும் எடுத்து வைத்தார்.

பார்த்துக் கொண்டிருந்த எனக்கு ஒரு நிமிடம் கலவையான உணர்ச்சி ஏற்பட்டது. சாமி கும்பிடும்போதுதான் நாம் சாமியை நினைப்போம். இந்தப் பெண்மணி சதா சர்வகாலமும் சாமியின் சிந்தனையிலேயே இருக்கிறாரே என்று அவரைப் பிரமிப்புடன் பார்த்துக் கொண்டிருந்தேன்.  }}


அலையில்லாத கடல் என்பது இராமேஸ்வரத்தின் சிறப்பு. உப்புத்தான் ஏழு முங்கு முங்குவதற்குள் மனிதரை உப்ப வைத்துவிடுகிறது.

நகரவிடுதியின் பழைய தோற்றமும் புதுப்பொலிவும்.மரகதவிநாயகர், சுப்ரமணியர் முன் ஹாலில் கோயில் கொண்டிருக்கிறார்கள்.

ஹால், வளைவு, முன் ஹால், அடுப்படி, உணவுக்கூடம் 24 குளிரூட்டப்பட்ட அறைகள் என வசதியாக இருக்கிறது சத்திரம்


அறைக்குள் இரட்டைத் திரைச்சீலை. இருவருக்கான படுக்கைகள்,  தண்ணீர் ஸ்டூல், முகம்பார்க்கும் கண்ணாடிகள், பாத்ரூமில் வெஸ்டர்ன் டாய்லெட், வாஷ்பேஸின் இன்னபிற வசதிகள் உள்ளன.

நன்கு விசாலமாக வெளிச்சத்துடன் கட்டப்பட்டிருக்கிறது.

தினமும் வரும் மக்கள் தொகை அதிகரித்துக் கொண்டிருப்பதால், ஊர் பூரா ஈரத்துணிகள், முக்கியமாத் தண்ணீரில் கால் வைத்தாலே துணிகள்தாம்.

நகரெங்கும் ஒருவித ஈரமான மக்கல், கழிவுநீர் வெளியேறாத வாடை அடித்துக் கொண்டே இருக்கிறது.
மகமை ஒரு ஆளுக்கு 20 ரூ. அறை வாடகை 500 ரூ. இது ஒரு நாளைக்கு.
சேஃப்டி லாக்கர்களும் தனியாக வாடகைக்குக் கிடைக்கின்றன.

ஒவ்வொரு ஹாலுக்கும், ஒவ்வொரு ரூமுக்கும் அதற்கு நிதியுதவி செய்தவர்களின் பெயர் இடப்பட்டுள்ளது.
 ராமேஸ்வரத்தின் கசகசப்பில் இங்கே சுத்தமாகப் பராமரிக்கப்படுவது சிறப்பு. மதிய உணவும் வழங்கப்படுகிறது.

மதிய உணவுக்காக நிதியளிப்பவர்களும் அங்கே அலுவலகத்தில் அளிக்கலாம்.

இறைவழிபாட்டுக்கும் தங்குவதற்கும்  ஏற்ற இடம் இராமேசுவரம் நகரவிடுதி.

6 கருத்துகள்:

 1. தகவல் பகிர்வுக்கு மிக்க நன்றி.

  பதிலளிநீக்கு
 2. நகரத்தார் தவிர பிறரும் தங்க அனுமதி உண்டா அறை கள் கிடைக்குமா

  பதிலளிநீக்கு
 3. nandriVenkat sago

  nandri Jayakumar sago

  ketu solren Bala sir

  வலைப்பதிவர் ஒற்றுமை ஓங்கட்டும்.!
  என்றும் நம்முள் வலிமை பெருகட்டும்.!

  பதிலளிநீக்கு
 4. Thank u for detailed answer. Could anyone provide their contact number and email id to enquire further

  பதிலளிநீக்கு

சும்மா ( பத்தி ) உங்க கருத்தையும் பதிவு செய்ங்க :)

Related Posts Plugin for WordPress, Blogger...