எனது 24 நூல்கள்

எனது 24 நூல்கள்
எனது இருபத்து நான்கு நூல்கள்
மன்னார்குடி லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
மன்னார்குடி லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

திங்கள், 22 மே, 2023

மன்னார்குடி சில நினைவுகள் !

 மன்னார்குடி நினைவுகள் !

கணபதி விலாஸும், செயிண்ட் ஜோசப்பும், லெக்ஷ்மி காலனியும். 

 மன்னார்குடி என்னும் ராஜ மன்னார்குடியில் நாங்கள் கிட்டத்தட்டப் பன்னிரெண்டு வருடம் இருந்தோம். எனது முதலாம் வகுப்பிலிருந்து ப்ளஸ்டூ வரை நான் அங்கேதான் செயிண்ட் ஜோசப்பிலும் பின்னர் கணபதி விலாஸிலும் அதன் பின்னர் திரும்ப செயிண்ட் ஜோசப்பிலும் படித்தேன். 

நாங்கள் குடியிருந்த வீட்டின் பக்கவாட்டுத் தோற்றம். வனஜாக்கா, சித்ராவின் வீட்டிலிருந்து நாங்கள் 2022 இல் மன்னார்குடிக்குச் சென்றிருந்தபோது எடுத்த படம்.

இதே வீட்டில்தான் குடி இருந்தோம். நம்பர் 18, லெக்ஷ்மி காலனி, சிங்காரவேலு உடையார் தெரு. இதுதான் முகவரி. இந்தக் காலனியின் முன்னால் வேலி போட்ட ஒரு காலி இடமும் அதன் முன் செங்குளமும் இருக்கும். கிழக்குப் பார்த்த வீடு.  (இந்த ரோடு மேற்காலே முடியும் இடத்தில் நாதன்ஸ் ஸ்டூடியோ இருந்தது.) 

முன்புறம் தெரிவது முகப்பு, முதல் ஜன்னல் பக்கம் முதல் ரூம், இரண்டாம் மூன்றாம் ஜன்னல்கள் சாமி ரூம். அதன் அந்தப் பக்கம் நடு ரூம், கடைசி ஜன்னல் அடுப்படி. இதே ஓட்டுக் கட்டிடம். ஒருவேளை ஓடு மட்டும் மாற்றி இருக்கலாம், ! 


திங்கள், 2 மே, 2022

மன்னை இராஜகோபாலஸ்வாமி செங்கமலத் தாயார் திருக்கோயில்

 மன்னார்குடி மதில் அழகு என்று கேள்விப்பட்டிருப்பீர்கள். அந்த ராஜ மன்னார்குடியில் இராஜ கோபாலனையும் செங்கமலத் தாயாரையும் தரிசிக்கும் வாய்ப்பு சென்ற ஆண்டு கிட்டியது.

நான் மன்னார்குடி செல்லக் காரணமே என் தோழி ப்ரேமலதாதான். அவளுடைய அன்புதான் என்னை அங்கே கட்டி இழுத்துச் சென்றது என்று சொல்லலாம். அவள் மூலம் வசந்தி, வஹிதா, அமுதா ஆகியோரையும் சந்திக்கும் வாய்ப்பு அமைந்தது.( தஞ்சையில் தேன்மொழி & சாந்தியின் பெண் நந்தினி ) 


வியாழன், 9 டிசம்பர், 2021

மன்னார்குடி அருள்மிகு ஆனந்த விநாயகர் திருக்கோயில்

 மன்னார்குடி - இராஜ மன்னார்குடி ஒற்றைத் தெருவில் இருக்கும் ஆனந்த விநாயகரை கிட்டத்தட்ட 40 வருடங்களுக்குப் பின் தரிசித்தேன். 

கணவருக்கு மன்னார்குடியில் அலுவலக வேலையாகச் செல்ல வேண்டி இருந்தது. உடனே நானும் பையனும் கூடக் கிளம்பி விட்டோம். முக்கிய காரணம்  அங்கே என் தோழி ப்ரேமலதா தியாகராஜன் இருப்பதால்தான்.

முகநூலில் என்னைத் தேடி இணைந்து வாட்ஸப்பில் நான்கைந்து வருடங்களாகத் தொடர்பு கொண்டு வந்தே ஆக வேண்டும் என அன்புப்பிடிவாதம் செய்து கொண்டிருந்தாள் அவ்வப்போது. எனக்கும் போக ஆசைதான் . ஆனால் நேரம் ஒத்துழைக்கவில்லை. 

கணவர் மன்னார்குடி என்றதும் உடனே கிளம்பி அவளையும் அவளின் அன்பு முயற்சியால் இன்னும் சில தோழியரையும் ( வஹிதா, அமுதா, வசந்தி ) சந்தித்துவிட்டு வந்தேன். 

அந்தப் பயணத்தின் போது நான் மூன்றாம் வகுப்பில் இருந்து எட்டாம் வகுப்பு வரை படித்த கணபதி விலாஸ் பள்ளி, இரண்டாம் வகுப்பு & எட்டு முதல் ப்ளஸ்டூ வரை படித்த செயிண்ட் ஜோசப் பள்ளி ஆகியவற்றையும் நாங்கள் குடியிருந்த 18, சிங்காரவேலு உடையார் தெரு, லெக்ஷ்மி காலனி வீட்டையும், ஆனந்த விநாயகர் & இராஜகோபால சுவாமியையும் தரிசித்துவிட்டு வந்தோம்.

பிரேமலதாவின் அன்பில் தோய்ந்த நிறைவான பயணம். ( ப்ளஸ் ஒன் ப்ளஸ் டூ வரை இருவரும் படித்தோம். அவளுக்குத் திருமணமாகிவிட நான் கல்லூரிக்குச் சென்றேன். நாங்கள் இருவரும் அன்பு மடல்களாக வரைந்து தள்ளி இருந்திருக்கிறோம். அதை எல்லாம் பத்திரமாக வைத்துள்ளாள். அவளது மருமகள் அன்பும் அழகும் அறிவும் வாய்ந்த பாசமான பெண். அவளின் முயற்சி மூலமே நாங்கள் சந்தித்தோம். ) 


மன்னை சென்றதும் பூர்ணா லாட்ஜில் தங்கினோம். ஏன் வீட்டிற்கு வந்து தங்கவில்லை என்று லதாவும் அமுதாவும் வருத்தப்பட்டார்கள். :) 

சனி, 1 ஜூலை, 2017

ஆனந்த விநாயகரும் அத்தானின் கடிதமும்.



ஆனந்த விநாயகரும் அத்தானின் கடிதமும்.

ராஜமன்னார்குடிக்கு வருபவர்கள் ஒத்தைத் தெருவில் வீற்றிருக்கும் ஆனந்த விநாயகரையும், ராஜகோபால ஸ்வாமியையும் தரிசிக்காமல் திரும்பவே மாட்டார்கள். இவ்விரு தெய்வங்கள் மேலும் எனக்கு அசைக்க முடியாத ப்ரேமை உண்டு. அப்பா அடிக்கடி சந்தனக் காப்பு மண்டகப் படி செய்து மகிழ்வார்.

இவ்விரு தெய்வங்கள் பற்றியும் எனது சரசு அத்தை & சுப்பையா மாமாவின் ( அப்பாவின் அக்கா, அம்மாவின் அண்ணன் ) மகனான சுப்பு அய்த்தான் எழுதிய பாடல்களைப் பகிர்வதில் பெருமகிழ்வடைகிறேன் J
(அஹா அத்தான் நீங்க இப்பிடி கடவுள் வணக்கப் பாட்டு எழுதினத இப்பத்தான் பார்த்தேன். ஆச்சர்யமாயிட்டேன். உங்க அத்தைகள் மாதிரியே நீங்களும் ஆசுகவியா இருக்கீங்க.  அட்டகாசமா இருந்துச்சு. உடனே ப்லாக் போஸ்டாக்கிட்டேன். மன்னிச்சூ ப்ளீஸ். )


ஆனந்த விநாயகர் துதி. 

1.அந்தம் ஒன்றில்லா ஆனந்தம் பெற்றேன் – என்
கந்தனின் கண்ணான அண்ணனே ! ஆனைமுகனே !
பந்தம் காக்கும் பார்வதியின் புதல்வா ! உன்னைச்
சொந்தம் கொண்டாட எண்ணும் பொழுது.

Related Posts Plugin for WordPress, Blogger...