BISCUIT ஐ நாம் பிஸ்கட் என்போம். டெல்லிக்காரர்கள் பிஸ்குட் என்பார்கள். FRIDGE ஐ நாம் ஃப்ரிட்ஜ் என்போம். அவர்கள் ஃப்ரீஈட்ஸ் என்பார்கள். என் சொத்தைப் பல்லை டெல்லியில் டாக்டர் பாலியிடம் எடுக்கச் சென்ற போது அவரும் அவர் மனைவியும் தமிழர்களின் ஹிந்தி உச்சரிப்பைக் கிண்டலடிக்கும் விதமாக ஹிந்தி பேச இந்த டிஸ்கஷனில் நான் அவரிடம் என் கருத்தை வலிய சொன்னேன். ( தேவையா பல்லைப் பிடுங்கினோமா வந்தோமா என்றில்லாமல் என்கிறீர்களா.. :) அவர்களோ அசால்டான புன்னகையுடன் என் பதில் கேலியை எதிர் கொண்டார்கள்.