எனது 24 நூல்கள்

எனது 24 நூல்கள்
எனது இருபத்து நான்கு நூல்கள்
திரௌபதி லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
திரௌபதி லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

ஞாயிறு, 20 நவம்பர், 2022

பத்தாயிரம் யானைகளின் பலம் பெற்ற பீமன்

பத்தாயிரம் யானைகளின் பலம் பெற்ற பீமன்


ஒரே மனிதனுக்குப் பத்தாயிரம் யானைகளின் பலம் கிட்ட முடியுமா. அப்படி பலம் கிட்டிய ஒருவன் தன் எதிரிகள் நூறு பேரை ஒரே போரில் கொல்ல முடியுமா? சாதாரண மனிதருக்கு அசாத்தியமான இவை இரண்டையும் நிகழ்த்திய பீமனின் வரலாறைப் பார்ப்போம் வாருங்கள் குழந்தைகளே.


பாண்டுவுக்கும் குந்திக்கும் பிறந்த மகன் பீமன். இவர் வாயுபுத்திரனின் அருளால் பிறந்தார். எனவே வலிமையுடன் திகழ்ந்தார். இவரது மனைவி இடும்பி, மகன் கடோத்கஜன். சிறுவயதிலிருந்தே நகைச்சுவையுணர்வு நிரம்பப் பெற்றவர். அதோடு அளப்பரிய கோபமும் கொண்டவர்.

அஸ்தினாபுர அரண்மனையில் பாண்டவர்களுக்கும் கௌரவர்களுக்கும் பீஷ்மர் குரு துரோணர் மற்றும் கிருபாச்சாரியார் மூலம் பல்கலைகளையும் பயிற்றுவித்து வந்தார். பீமன் கதாயுதப் பயிற்சியில் சிறந்து விளங்கினார். மல்யுத்தம் போன்றவற்றிலும் வெற்றிகாண முடியாத வீரராகத் திகழ்ந்தார்.

புதன், 6 மார்ச், 2019

அன்னம் பாலித்த அண்ணன். தினமலர் சிறுவர்மலர் - 7.


அன்னம் பாலித்த அண்ணன். :-

அன்னம் பாலித்த அண்ணன் என்றால் உங்களுக்கு தங்கையின் வேண்டுதலுக்காகத் தடா தடாவாக அக்கார அடிசிலும் வெண்ணையும் சமர்ப்பித்த ராமானுஜரும் ஆண்டாளும் நினைவுக்கு வரலாம். ஆனால் அடர் கானகத்தில் ஏதும் கிட்டாத இடத்தில் ஒரு அண்ணன் தன் தங்கைக்கு ஒரு முனிவர் மூலம் ஏற்பட்ட சோதனையில் இருந்து காக்க அன்னம் பாலித்தார் என்பது தெரியுமா?. அதுவும் எப்படி ? முனிவருக்கும் அவரது ஆயிரக்கணக்கான சீடர்களுக்கும்  அறுசுவை உண்டி சாப்பிட்ட உணர்வை உண்டாக்கி இக்கட்டிலிருந்து நீக்கினார் என்றால் ஆச்சர்யம்தானே. அது என்ன என்று பார்ப்போம் வாருங்கள் குழந்தைகளே.

திங்கள், 21 ஜனவரி, 2019

சூதால் வென்ற துஷ்டச் சகுனி. :- தினமலர் , சிறுவர்மலர் - 1.

சூதால் வென்ற துஷ்டச் சகுனி. :-
அத்தினாபுரம் அரண்மனை. ‘தாயம்.. தாயம்.’. என்று சொல்லி நெற்றியில் தட்டிக்கொண்டு தாயக்கட்டைகளை உருட்டிப் போடுகிறான் ஒருவன். அவன் சொன்னபடியே தாயம் விழ. கௌரவர்கள் குதூகலிக்கிறார்கள். பாண்டவர்களோடு பீஷ்மர் விதுரர் துரோணர் கிருபர் ஆகியோரும் அமைதியாக அமர்ந்திருக்கிறார்கள். குள்ளநரிப்புன்னகையோடு இவர்கள் நடுவில் அமர்ந்து தாயம் உருட்டும் அவன் தான் சகுனி. சூதால் அவன் செய்த வினை கொஞ்சமா நஞ்சமா. இதற்கெல்லாம் காரணம் என்னவென்று பார்ப்போம் குழந்தைகளே.
திருதராஷ்டிரன் மனைவி காந்தாரி காந்தார நாட்டில் பிறந்தவள். தந்தை சுவலன். அவளுக்கு நூறு சகோதரர்கள். அவர்களின் ஒருவன் சகுனி. திருதராஷ்டிரனுக்கு மணம் முடிக்கு முன்பு காந்தார தேசத்தில் அவளுக்கு திருமணதோஷம் இருந்ததால் ஒரு ஆட்டுக்கு மணம் செய்து தோஷம் கழித்தார்கள். இது பீஷ்மருக்குத் தெரியவர அவர் கோபமாக காந்தாரியின் தந்தை சுவலனையும் அவரது பிள்ளைகள்  நூறுபேரையும் சிறையில் அடைக்கிறார்.
போதிய உணவு இல்லாமல் அனைவரும் சிறையில் வாடுகிறார்கள்.  தங்களுக்குக் கொடுக்கப்படும் உணவை அவர்கள் சகுனிக்குக் கொடுத்துத் தாங்கள் மரிக்கிறார்கள். சகுனியின் தந்தை சுவலன் சாகும் தருவாயில் சகுனியின் கணுக்காலை அடித்துஉடைத்துத் ” நம் வம்சத்தைச் சிறையில் சாகடித்த குருவம்சத்தைப் பழிவாங்கவேண்டும்” என்று கோபமாய்ச் சொல்கிறார்.