எனது நூல்கள்.

வெள்ளி, 11 ஜனவரி, 2019

ஜுமைரா சிட்டி & புர்ஜ் அல் அராப் - JUMEIRAH CITY & BURJ AL ARAB.

புர்ஜ் அல் அராபுக்கு ஒரு நாள் சென்றோம்.

இது ஜுமைரா சிட்டி என்னுமிடத்தில் உள்ளது . சிகாகோ பீச், மியாமி பீச் என்றெல்லாம் அழைக்கப்பட்ட இடம் இது.  பாரசீக வளைகுடா என்ற இடத்தில் அமைக்கப்பட்ட செயற்கைத் தீவில் அமைந்துள்ளது இந்த புர்ஜ் அல் அராப்.

1994 இல் கட்ட ஆரம்பிக்கப்பட்ட இது 1999 இல் பொதுமக்கள் பார்வைக்கும் பணக்காரர்களின் உபயோகத்துக்கும் வந்தது. ’துபாய் சிகாகோ பீச் ஹோட்டல்’ என்னும் இது புதுப்பிக்கப்பட்டவுடன்  அமீரக அதிபர் ஷேக் முகம்மது பின் ரஷீத் அல் மக்டம் அவர்கள் இதை ”புர்ஜ் அல் அராப் ஹோட்டல்” ( டவர் ஆப் அராப் )  எனப் பெயரிட்டுத் திறந்து வைத்தார்கள்.

நிலத்திலிருந்து இந்த விடுதிக்குச் செல்ல பாலம் இருக்கு. இது தூரத்திலேருந்து பார்க்கும்போது ஒரு பெரிய பாய்மரக் கப்பல் போல இருக்கு. இதை வடிவமைத்தவர் டாம் ரைட் என்ற பொறியாளர்.  சூரிய வெளிச்சமும் காற்றும் நிறைய வரும்படி வடிவமைக்கப்பட்டிருக்கும் இதன் முன் புறம் இயற்கைச் சீற்றத்தை எதிர்கொள்ளும் விதமா அமைக்கப்பட்டிருப்பதாக சொல்றாங்க.  இதற்கே நிறைய இடத்தை ஒதுக்கி இருப்பதால் இதில் புழக்கத்தில் இருக்கும் அறைகள் குறைவுதான்.

இதோ வந்தாச்சு புர்ஜ் அல் அராப்.

முன்னால் ஜுமைரான்னு ஒரு கட்டிடம்.  ஏதோ நியூஸ் பேப்பரைப் போட்டதுபோல் முன்னாடி ஒரு அமைப்பு இருக்குது பாருங்க.


ஜுமைராவும் பேரீச்சைகளும்.

பேரீச்சைகளின் ஆட்சிதான் எங்கெங்கும்.


கார்கள் அணிவகுக்க இதோ வந்துவிட்டோம் புர்ஜ் அல் அராப் கட்டிடத்துக்கு. தங்க இல்ல. சுத்திப் பார்க்கத்தான் போறோம். :)

செக்யூரிட்டி செக். அதன் பின் கார் பார்க்கிங்.

வளைந்து நெளிந்து எத்தனை கிலோமீட்டராக இருந்தாலும் சுற்றித்தான் போக வேண்டும். குறுக்கே கடக்கக் கூடாது. எதிர்க்கடையாக இருந்தாலும்.

நீரருவி.

வாடகை டாக்ஸிகள் மஞ்சள் & நீலப் பெயிண்டில்.

லாண்டர்ன் எனப்படும் மின் லாந்தர்கள்.

வெல்கம் டு புர்ஜ் அல் அராப். ( என் பையர் நிக்கிறார் )

செயற்கை அருவி பார்த்தீங்கள்ல. செயற்கை ஆறே பாருங்க இங்க. இதுல போட் சர்வீஸ் வேற உண்டு. ( கடலைத் தூர்த்துக் கட்டியதால் லாகூன் எனப்படும் முகத்துவாரம் உள்ளே ஓடுறாப்புல வளைச்சிருக்காங்க ).

வசதியான வெளிநாட்டு டூரிஸ்டுகள் இங்கே தங்குகிறார்கள். வெய்யில் சக்கை போடு போடுது.

அதோ மோட்டர் படகுல ஒருத்தர் வராரு. பின்னாடிஒரு மரப்பாலம் பாருங்க.

இதுக்குள்ளேயிருந்துதான் இப்ப வெளியே வந்தோம்.

நீரின் ஆட்சி,

இதன் உள்ளே பல்வேறு கடைகள் உள்ளன. ஆனால் எல்லாம் விண்டோ ஷாப்பிங்க்தான் செய்யணும் . ஒண்ணும் வாங்க முடியாது. எல்லாம் ஆன வெல. குதுர வெல.

அங்கே பாதை எங்கும் பேரீச்சைகள்.

இது பச்சைக்காய் உள்ள பேரீச்சை.

பக்கத்துலேயே பழுத்த காய்கள்.

இன்னும் கொத்துக்  கொத்தா இன்னொரு மரத்துல.

உள்ளே ரெஸ்ட் ரூமில் எடுத்தது. அங்கேயும் டோம் வடிவ கண்ணாடிகளும் சாளரங்களும்தான்.

திரும்ப உள்ளே போவோம் வாங்க.

இது அங்கே உள்ள ரெஸ்டாரெண்டில்  உணவருந்துபவர்களுக்காகப் போடப்பட்டுள்ளது.

கம்பீரமாக எழுந்து நிற்கும் புர்ஜ் அல் அராப். ட்ரபீசிய வடிவ பாலத்தின் கீழ் படகுகள் போவதைப் பார்த்தோம். வெனிஸ் நகரம் போல் இருந்தது.


மிக அழகான புர்ஜ் அல் அராப் ஹோட்டல். அதோ படகு ஒன்று போகிறது.

வாங்க நாம் வீட்டுக்குப் போகலாம்.

பெட்ரோல் தவிர வேறேதும் வளம் இல்லாத நாட்டை அழகான சுற்றுலாத்தலமா ஆக்கிட்டு வர்றாங்க அவங்க. இன்னும் பல விதமான ஷாப்பிங் மால்ஸ், பல்வேறு விளையாட்டுகள். ஆகாய விளையாட்டுகள், அட்வென்சர் விளையாட்டுகள்னு ஒரு சிறந்த சுற்றுலாத்தலமா ஆக்கி வெற்றிகரமா வாழ்றாங்க அமீரகத்தார். வாழ்க. அவர்களது உழைப்பும் முயற்சியும் வெற்றியடைக. 

3 கருத்துகள் :

Thulasidharan V Thillaiakathu சொன்னது…

மிக அழகாக இருக்கிறது . செயற்கையான அமைப்பு என்றாலும் எவ்வளவு அழகாக இருக்கின்றன...அனைத்தும்..அருமையா இடம்..

துளசிதரன், கீதா

மனோ சாமிநாதன் சொன்னது…

எங்கள் ஊரின் [!] மிக முக்கியமான கட்டிடங்களை மிக அழகாய் புகைப்படங்கள் எடுத்து வெளியிட்டிருக்கிறீர்கள் தேனம்மை! வாழ்த்துக்கள்! எப்போது துபாய் வந்தீர்கள்?
இனிய பொங்கல் நல்வாழ்த்துக்கள்!!

Thenammai Lakshmanan சொன்னது…

நன்றி துளசி சகோ

ஆம் மனோ மேம்.2009 இலும் 2013 இலும் வந்தோம்.

வலைப்பதிவர் ஒற்றுமை ஓங்கட்டும்.!
என்றும் நம்முள் வலிமை பெருகட்டும் !!

கருத்துரையிடுக

சும்மா ( பத்தி ) உங்க கருத்தையும் பதிவு செய்ங்க :)

Related Posts Plugin for WordPress, Blogger...