எனது 24 நூல்கள்

எனது 24 நூல்கள்
எனது இருபத்து நான்கு நூல்கள்
ஹொகனேக்கல் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
ஹொகனேக்கல் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

வியாழன், 3 ஜனவரி, 2019

ஹோகனேக்கல் தொங்கு பாலம்.- HOGENAKKAL HANGING BRIDGE.

ஹோகனேக்கல் - காவிரி ஆறு பாயும் தமிழக கர்நாடக எல்லையில் இருக்கும் ஊர். இங்கே வட்டு எனப்படும் பரிசல் ப்ரயாணம் பிரசித்தம். இந்தியாவின் நயாகரான்னு கூட சிலாகிக்கிறாங்க. தர்மபுரியிலேருந்து பக்கம்.

அங்கே தொங்கும் பாலத்துல போய் பார்த்ததையும் அங்கே இருந்த பச்சைப் புல்வெளிகளையும் என் காமிரா கண்ணால பார்த்து எடுத்துட்டு வந்திருக்கேன் உங்களுக்காக மக்காஸ்.

தமிழ்நாடு வனத்துறை போர்டு.

வனவிலங்குகள் செல்லும் பாதை என்பதால் முன் அனுமதி பெற்றே போகணும்.

வியாழன், 12 ஏப்ரல், 2018

உகுநீர்க்கல்லில் ஒரு வட்டுலா. நீலமும் மஞ்சளும்.

கர்நாடகா போய் காவிரியைத் தொட்டு சந்தோசப்பட்ட நிமிடங்களை மறக்கமுடியுமா . உகுநீர்க்கல்னா ஹொக்கனேக்கல்தான். 

எங்க புள்ளைங்க கர்நாடகாவுல வேலை பார்க்குறாங்க. எதேச்சையா ( அநேகமா எல்லா ட்ரெஸும் கறுப்பு கலர்ல வைச்சிருப்பானுங்க. ) கறுப்பு டீ சர்ட் போட்டுட்டுப் போனா என்ன காவிரிக்காகவான்னு ஆஃபிஸுல கேட்டானுங்களாம். கெதக்குன்னுச்சாம் புள்ளைக்கு. வீட்டுக்கு பார்த்து உஷாராப் போ அப்புன்னாங்களாம்.

ஒவ்வொரு தரமும் போராட்டம் நடத்தும்போதெல்லாம் இருதலைக் கொள்ளி எறும்பா தவிக்க வேண்டியிருக்கே. இங்கே கஷ்டப்படுற  நம்ம மக்களும் அங்கே கஷ்டப்படுற  நாம பெத்த மக்களும் நல்லா இருக்கோணும் சாமி. அம்புட்டுத்தான் நம்ம வேண்டுதல். காவிரியே நீ கண் திறந்து பொங்கிப் பெருகி வந்து எல்லா இடைஞ்சலையும் தவிடு பொடியாக்கு.

பொங்கிப் பெருகுது.

வியாழன், 29 ஜூன், 2017

ஓடமும் ஒரு நாள்...

ஹொகேனக்கலில் பரிசலில் சென்றபோது  பாதி தூரத்துக்குப் பின் இறங்கி நடக்க வேண்டியதாகப் போய்விட்டது.

காரணம் பின்னால் சொல்றேன்.

பரிசலுக்குப் பணம் ( 750 /-ன்னு நினைக்கிறேன் ) கட்டியவுடன் (இருவர் என்றால் கூட. மூவர் நால்வர் என்றால் குறைத்து.). நம்மை வேயிங் மெஷினில் நிற்கவைத்து வெயிட் பார்த்து லைஃப் ஜாக்கெட்டை மாட்டி விடுறாங்க.

நமக்கு ஜலத்துல கண்டமான்னு தெரியாது. ஏன்னா நீச்சல் தெரியாது. ஒவ்வொரு தரமும் பயத்தோட ஆத்தைப் பார்த்துட்டுத்தான் இறங்கி போட்ல உக்கார்றது :)

இது பரிசில் என்பதால் கால் வைக்கும்போதே சுழலுது. திகில் திகில்தான்.

ரங்க்ஸ் முதலடி வைச்சு உக்கார்ந்து கூப்பிட்டதால கொஞ்சம் தைரியமா இறங்கினேன். வண்டியில் தொப் என உக்காருவது போலவே பரிசலிலும் தொப் என விழுந்து அமர்ந்து ஆட்டம் காணவைத்து திகிலானேன் ஹாஹா


வட்ட வட்டமாய் சுழலுடன் சிறிது தூரம் சென்ற வட்டு ஓரிடத்தில் நின்றது.

செவ்வாய், 16 மே, 2017

கொளுத்தும் வெய்யிலில் ஹொகனேக்கலில் ஒரு குளு குளு குளியல்



அடிச்சுப் பெய்ற மழை மாதிரி அடிச்சு ஆடுது வெய்யில். யம்மா வெளியே போயிட்டு வந்தா சுக்கா உலர்ந்து போயிடுறோம். கொஞ்ச நஞ்ச வெய்யிலா நெசம்மாவே கருவாடுதான். வேனல்கட்டி, வேர்க்குரு எல்லாம் படை எடுத்து எரிய ஆரம்பிச்சது போக இப்ப எல்லாம் டைரக்டா இருப்புச் சட்டி வதக்கல்தான் போடுது வெய்யில். 

சுருண்ட தக்காளிப்பழம் மாதிரி வெய்யிலை வெறிச்சிக்கிட்டு வீட்ல உக்கார்ந்திருந்தபோது ( ஏன் மழையை மட்டும்தான் வேடிக்கை பார்க்கணுமா என்ன J ) போன வருஷம் போன ஹொகனேக்கல் ஞாபகம் வந்துச்சு. அப்ப அங்க எண்ணெய்க் குளியல் போட்டு மீன்குழம்பு வறுவல் எல்லாம் வைச்சு தலைவாழை இலையில் சுட சுட சாப்பிட்ட ஞாபகம் வந்தது. ஞாபகச்சூடு ஆறுறதுக்குள்ள எடுத்தேன் ஃபோட்டோ ஆல்பத்தை. ,போட்டேன் ப்லாகில் உடனே. J


போய் ஒரு ரவுண்ட் அடிச்சுக் குளிச்சிட்டு வரலாம்போல இருந்தது.

ஆனா எம்மாந்தூரம். சோ நினைவலையில் ஒரு குளு குளு உலா
Related Posts Plugin for WordPress, Blogger...