எனது 24 நூல்கள்

எனது 24 நூல்கள்
எனது இருபத்து நான்கு நூல்கள்

வியாழன், 29 ஜூன், 2017

ஓடமும் ஒரு நாள்...

ஹொகேனக்கலில் பரிசலில் சென்றபோது  பாதி தூரத்துக்குப் பின் இறங்கி நடக்க வேண்டியதாகப் போய்விட்டது.

காரணம் பின்னால் சொல்றேன்.

பரிசலுக்குப் பணம் ( 750 /-ன்னு நினைக்கிறேன் ) கட்டியவுடன் (இருவர் என்றால் கூட. மூவர் நால்வர் என்றால் குறைத்து.). நம்மை வேயிங் மெஷினில் நிற்கவைத்து வெயிட் பார்த்து லைஃப் ஜாக்கெட்டை மாட்டி விடுறாங்க.

நமக்கு ஜலத்துல கண்டமான்னு தெரியாது. ஏன்னா நீச்சல் தெரியாது. ஒவ்வொரு தரமும் பயத்தோட ஆத்தைப் பார்த்துட்டுத்தான் இறங்கி போட்ல உக்கார்றது :)

இது பரிசில் என்பதால் கால் வைக்கும்போதே சுழலுது. திகில் திகில்தான்.

ரங்க்ஸ் முதலடி வைச்சு உக்கார்ந்து கூப்பிட்டதால கொஞ்சம் தைரியமா இறங்கினேன். வண்டியில் தொப் என உக்காருவது போலவே பரிசலிலும் தொப் என விழுந்து அமர்ந்து ஆட்டம் காணவைத்து திகிலானேன் ஹாஹா


வட்ட வட்டமாய் சுழலுடன் சிறிது தூரம் சென்ற வட்டு ஓரிடத்தில் நின்றது.அடடா இதென்ன ஓடக்காரர் இறங்கி நம்மை நடக்கச் சொன்னதோடல்லாமல் வட்டை அலாக்காத் தோளில் தூக்கித் துடுப்பையும் சுமந்தவாறு சும்மா சல்லுன்னு இறங்கிப் போறாரே.

இம்மாம் படியா என்று சலித்த நான் பரிசல்காரர்கள் வட்டைத் தூக்கியபடி நடந்ததைப் பார்த்ததும் மௌனமாய்ச் சென்றேன்.அஹா. எல்லாரும்தான் நடக்குறாங்க. ஏனெனில் நீர்வீழ்ச்சி உருவாக்கிய மிகப்பெரும் நீரோட்டத்தில் மிதக்கப் போறோம்ல.


இங்கேயும் ஆடி திகிலாடி அமந்தோம் :) எண்ணெய்க் குளியல் முடித்து வெய்யிலில் அமர்ந்தது சுள் என எரித்தது.
a

எங்கே செல்லும் இந்தப் பாதை.. யாரோ யாரோ அறிவார்... :)
வெய்யிலில் மினு மினுவென்ற கருகருப் பாறைகள். அதில் மீன் சுட்டும் விற்றார்கள். சிலர் பொங்கிய அருவியில் புனலாடிக் கொண்டிருந்தார்கள்.


நாம் போட்டை விட்டு இறங்கவே இல்லையே. :)
அக்கரைக்குப் போனா அது கன்னடக் கரையாம். அங்கே போட்காரர்கள் அந்தக் கரையில் ஆட்களை ஏற்றி வந்து கொண்டிருந்தார்கள்.

இந்தப் பரிசல்காரர்களின் யூனிஃபார்ம் வைத்துத்தான் அடையாளம் கண்டுபிடிக்கணும்.

மஞ்சள் சட்டை போட்டவங்க கன்னடத்துக்காரங்க. நீலச்சட்டை போட்டவங்க தமிழ்க்காரங்க.

பத்ரமா கொண்டுவிட்டதுக்காக ரங்க்ஸ் பரிசல்காரரைத் தனியாகக் கவனித்தார்.

ரைட்டு விடு ஜூட்டு. நாம மேலேறி வந்த வட்டுக்களையும்  படம் பிடித்தோம்.

5 கருத்துகள்:

 1. அருமை
  ஒருமுறையேனும் பயணித்துப் பார்க்க வேண்டும்

  பதிலளிநீக்கு
 2. நீங்களும் பரிசலில் ஏறி பயணித்தீர்களா? நம்ப முடியவில்லை.. இல்லை.. இல்லை..
  படங்கள் எதிலும் உங்களைக்காணோம். அதனால் எனக்கு ஓர் சந்தேகம்.

  கொச்சினிலும், கோவாவிலும் எனக்கும் இதுபோன்ற அனுபவங்கள் ஏற்பட்டன. நாம் காலை வைக்கும்போதே அது கவிழ்ந்து விடும்போல ஒரு ஆட்டம் ஆடி நம்மை பயமுறுத்தும்.

  படங்களும் பதிவும் ஜோர் ஜோர் !

  பதிலளிநீக்கு
 3. நாங்கள் ஆறுபேர் ஹொகனேகலில் பரிசலில் சென்ற அனுபவமுண்டு கமிராவில் பிடித்த படங்கள் எங்கோ இருக்கிறது வேறு சமயத்தில் உதவலாம் அனுபவம் புதுமை யாரிடம் சொல்வேன்

  பதிலளிநீக்கு
 4. INTHA VIDUMURAIKKU SENDRU VAARUNGKAL JAYAKUMAR SAGO

  AAM DD SAGO

  PHOTO EDUTHATHU PINNE YARAM VGK SIR. NANDRI :) :) :)

  PADATHA THEDINEENGKALA BALA SIR. KIDAICHUTHA. POST PODUNGKA :)


  வலைப்பதிவர் ஒற்றுமை ஓங்கட்டும்.!
  என்றும் நம்முள் வலிமை பெருகட்டும்.!

  பதிலளிநீக்கு

சும்மா ( பத்தி ) உங்க கருத்தையும் பதிவு செய்ங்க :)

Related Posts Plugin for WordPress, Blogger...