வியாழன், 22 ஜூன், 2017

பாலாசாரின் – ”பாலசுப்ரமணியனின் கவிதைகள்” ஒரு பார்வை.பாலாசாரின் – ”பாலசுப்ரமணியனின் கவிதைகள்” ஒரு பார்வை.

பாலா சார் என நான் விளிக்கும் திரு பாலசுப்ரமணியன் சார் பெங்களூரில் வசித்து வருகிறார். இவரின் கட்டுரைகள் போலவே கவிதைகளும் அற்புதமாய் இருக்கின்றன. மிக இயல்பான பாடுபொருளைக் கொண்டிருக்கின்றன. 

நாம் அன்றாட வாழ்வியலில் காணும் பேசும் அனைத்தும் கருப்பொருளாயிருக்கின்றன. கேள்வி கேட்டலும் பதில் கூறலுமான கவிதைகள் சில. சில ஞானத்தேட்டம் உடையன. சில விஞ்ஞானமும் சில மெய்ஞானமும் கூறுகின்றன.


முதல் கவிதை ஒரு சிறுவனின் பார்வையில் நானும் பட்டாம்பூச்சியானேன். கவிதை தாகம் நீருக்கான ஏக்கம் கொள்ள வைத்தது. தாத்தா சாமி, பாவைக்கு ஒரு பாமாலை ரசனையான கவிதைகள். அம்மா ஆதங்கக் கவிதை. இன்னொரு கவிதையான என் அம்மாவாக நீ எங்கே இருக்கிறாய் கழிவிரக்கம் உண்டு செய்தது. 

வயோதிகம் பற்றிய நச் என்ற கேள்வி, நிலையிலா வாழ்வு, சிறுதுளி பெருவெள்ளம் , ஹாப்பி பர்த்டே , உஷ் தொந்தரவு செய்யாதீர்கள், தனிமைப் பறவை, எண்ணப்பறவை, நம்பிக்கை, ஆண்டவன் முன், முதுமையின் பரிசு, கடவுள் அறிவா உணர்வா ஆகிய கவிதைகள் சிந்திக்க வைத்தன. 

புராண, இதிகாச அவதாரக் கவிதைகள் குழந்தைகள் & பெரியவர்களும் படிக்க வேண்டிய அத்யாவசியமான ஒன்று. மிகச் சிறப்பாக சுருக்கமாக மிகுந்த அர்த்தம் கொண்ட வார்த்தைகளுடன் அமைக்கப்பட்ட சிறந்த கவிதைகள் இவை. ராமாயணமும் கிருஷ்ணாயணமும் வெகு சிறப்பு. 

கேள்விக்கென்ன பதில் என்ற கவிதை என்னைச் சிரிக்க வைத்து விட்டது ஹாஹா 

நான் ரசித்த சில கவிதை வரிகள் இங்கே. 

 “எண்ணிப் பார்க்கின்றேன் எனக்கென்ன வயசு
எண்ணில் அடங்குவதோ மனசின் வயசு “

”ஒளிர்கின்ற கோணங்களில் எல்லாம்
மிளிர்கின்ற மாணிக்கம் “ ( என மனைவியைப் புகழ்வது அழகு ! )

மணவினை சிறைவாசம் வித்யாசமான கவிதை. வெற்றி தோல்வி பற்றிய அறிவுரைகள் மிக யதார்த்தக் கவிதைகள். அதிலும் முருகனைப் பற்றிய கவிதை ஆஹா ஓஹோ படிச்சுப் பாருங்க நீங்களும் சொல்வீங்க J
 
கட்டுரையாளராகவும் கேள்விகணைகள் தொடுப்பவராகவுமே நான் கண்ட இவரது இப்புதுத் திறமையை ( கவிதை ஆற்றல் – ஓரிரு கவிதைகள் வலையில் படித்திருந்தாலும் ) நான் இப்போதுதான் முழுமையாக வாசிக்கிறேன். ஆக மொத்தத்தில் கவிஞராகவும் பாலா சார் சிறப்பாகப் பரிணமித்திருக்கிறார்கள். வாழ்த்துக்கள் பாலா சார். வாங்குங்க & வாசிங்க & யோசிங்க மக்களே.

மின்னூல் :- பாலசுப்ரமணியனின் கவிதைகள்.
ஆசிரியர் :-பாலசுப்ரமணியன்
வெளியீடு :- புஸ்தகா.
பக்கங்கள் :- 127.
விலை. ரூ75 /- /  $ 1.99.

டிஸ்கி :- பாலா சார் இரண்டு மாசம் முன்னாடி ஒரு போட்டிக்கான பதிவை காப்பி பேஸ்ட் பண்ணிப் போடும்போது ப்லாகில் டாஷ்போர்டில் ஃபாண்ட் மாற்றம் ஏற்பட்டுவிட்டது. அதை எப்படி நிவர்த்திப்பதுன்னு தெரில. அதுனால நோட் பேட் அல்லது வேர்ட் பேடில் எழுதி இடுகைகளை காப்பி பேஸ்ட் செய்றேன். நிறைய போட்டோ பதிவுகள் போடுறேனே . அது எவ்ளோ கொடுமைன்னு தெரிஞ்சிருக்கும் உங்களுக்கு.

நல்லா பார்த்தீங்கன்னா தெரியும் சில மாதங்கள் முன்பு வரை நான் தமிழில்தான் பின்னூட்டம் போட்டுக்கிட்டு இருந்தேன். இப்ப ஒவ்வொரு பின்னூட்டத்தையும் நோட்பேட், வேர்ட்பேடில் டைப்படிச்சு காப்பி பேஸ்ட் பண்றது ரொம்ப கஷ்டமா இருக்கு. பசங்க ஊருக்கு வர்றதுக்காக வெயிட்டிங்க். அதன் பின் சரியாயிடும் 

ஏதோ இந்த அளவுல லாப்டாப்பிலாவது என் ஹெச் எம் ரைட்டர் செயல்படுதேன்னு நிம்மதியா இருக்கேன். இதுனாலதான் நான் தங்கிலீஷில் பின்னூட்டம் போடுறேன்னு நம் வலைப்பதிவர்கள் அனைவருக்குமே தெரியுமே. ( அதுவே ஆடிக்கொருக்கா அம்மாசிக்கு ஒருக்கா போடுறேன் . திட்டாதீங்க மக்காஸ் J )

4 கருத்துகள் :

Ramani S சொன்னது…

நான் தொடர்ந்து விரும்பித் தொடரும்
பதிவர் அவர்களின் மின் நூல் புத்தகம்
வெளியாகி இருப்பதும்
அதற்கான தங்கள் அருமையான
விமர்சன அறிமுகப்பதிவும்
மனம் கவர்ந்தது
பகிர்வுக்கும் தொடரவும்
நல்வாழ்த்துக்களுடன்

G.M Balasubramaniam சொன்னது…

அன்பின் தேனம்மைக்கு . பதிவுகள் எழுதி மின்னூல்கள் வெளியிட்டு கொள்வார் இலையோ என்று நினைக்கும் போது உங்களது விமரிசனம் இதமாக இருக்கிறது நான் எழுதும்போது வந்த எழுத்துகள் எல்லாம் அந்த க்ஷணத்தில் தோன்றியவையே பாவைக்கு ஒரு பாமாலை என்னும் பதிவு அந்தாதி மாதிரி எழுத முயற்சித்தது சில நேரங்களில் எழுதியது பிற சமயத்தில் ரெப்லிகேட் செய்ய முடிவதில்லை நன்றி மேம்

Thenammai Lakshmanan சொன்னது…

THANKS RAMANI SIR

THANKS & WELCOME BALA SIR.

Thenammai Lakshmanan சொன்னது…

வலைப்பதிவர் ஒற்றுமை ஓங்கட்டும்.!
என்றும் நம்முள் வலிமை பெருகட்டும்.!

கருத்துரையிடுக

சும்மா ( பத்தி ) உங்க கருத்தையும் பதிவு செய்ங்க :)

Related Posts Plugin for WordPress, Blogger...