எனது 24 நூல்கள்

எனது 24 நூல்கள்
எனது இருபத்து நான்கு நூல்கள்

சனி, 7 ஜூலை, 2018

சாட்டர்டே ஜாலி கார்னர். சுபஸ்ரீமோகனும் ஷி ஹுவாங்க்டி அளித்த சீனப்பெருஞ்சுவரும்.

தங்கை சுபஸ்ரீ மோஹன் முகநூலில்தான் அறிமுகம் என்றாலும்  எங்கள் நட்பு ஏழெட்டு வருடங்களுக்கு மேற்பட்டது. இவர் பெய்ஜிங்கில் வசித்து வருகிறார்.

சீனா அண்ணன் தேசம் என்ற நூலாசிரியர். இந்த நூலை இவர் சென்னையில் வெளியிட்ட நிகழ்வில் எங்கள் முகநூல் தோழமைகள் எல்லாம் கலந்து கொள்ள நான்மட்டும் கலந்து கொள்ள இயலவில்லையே என்ற வருத்தம் இருந்தது.

அதைத் தீர்க்க அவரிடம் பலமுறை இந்தச் சீனாவைப்பற்றி ஏதேனும்  சாட்டர்டே ஜாலி கார்னருக்காக எழுதிக்கொடுங்கள் என்று மன்றாடி  ( ! ) இருந்தேன். ஒருவழியாக டைம்கிடைத்து என் ஞாபகம் வந்து இன்று எழுதி அனுப்பினார் சுடச் சுட அந்த சீனப்பெருஞ்சுவர் இடுகை உங்களுக்காக இங்கே. :)

அன்பும் நன்றியும் தங்காச்சி :)



சீன பெருஞ்சுவர் By சுபஸ்ரீ மோஹன் சீன என்றாலே இந்த பெருஞ்சுவர் எல்லார் நினைவிலும் வருவதை தவிர்க இயலாது. முதலில் உலக அதிசயங்களில் ஒன்றான சீன பெரும் சுவர் ,. இது ஆறாம் நூற்றாண்டில் கட்டப்பட்டதாம். சீன மக்களின் பெருமையே இந்த சுவர் என்றால் மிகையாகாது. விண்ணிலிருந்து பார்த்தால் கூட அந்த அதிசயம் நம் கண்களுக்கு தெரிவதாக சொல்லுகிறார்கள். சீன வரைபடத்தில் இயற்கையே வரைந்த கோடுபோல சுமார் 6500 கிலோமீட்டர் பரந்து விரிந்து கிடக்கும் சீனபெருஞ்சுவர் அந்த சிறப்பை பெற்ற ஒரே உலக அதிசியம். சுமார் இரண்டாயிரம் ஆண்டு சீனவரைபடத்தில் நமக்கு பிரமிப்பூட்டும் அந்த நீளசுவர் உருவாவதற்கு காரணமான சீனத்து பேரரசன் (இங்கு சீனாவில் ராஜாக்களை பேரரசர் என்று தான் அழைத்து கொள்வார்கள்.) சீன வரைபடத்தில் சீன பெருஞ்சுவரை மட்டுமல்ல பல சிற்றரசுகளாக சிதறிக்கிடந்த சீனப் பெருநிலத்தை ஒருங்கிணைத்து ஒன்றுபட்ட சீனாவாகவும் உலகுக்குத் தந்த அந்த மன்னனின் பெயர் ஷி ஹூவாங்டி .கி.மு259-ஆம் ஆண்டு சீனாவில் பிறந்தார் ஷி ஹூவாங்டி. உலக அதிசயங்களில் ஒன்றான சீன பெரும் சுவர் உலகத்திலேயே மனிதன் கட்டிய மாபெரும் சுவர் இதுதான். இது ஆறாம் நூற்றாண்டில் சொங்யுவான் ஆட்சியின் காலத்தில் கட்டப்பட்ட இந்த சுவர் பல்வேறு ஆட்சியாளர்கள் காலத்திலும் அது நீட்டிக்கபட்டுள்ளது. இந்த கட்டிடத்தின் நீளம் 6500 கி.மீ இந்த சுவர் பாலைவனம், புல்வெளி, சதுப்பு நிலம் ஊடாக செல்கிறது. கட்டிட பணியாளர்கள் வேறுபட்ட நில அமைப்புக்கேற்ப பெருஞ்சுவரை கட்டிவிட்டனர். சீன மூதாதையர்களின் அறிவு கூர்மை இந்த பெருஞ்சுவர் முழுமையாக பிரதிபலிக்கிறது. மலை பாதைகளில் நெளிந்து வளைந்து செல்லும் பாதையின் படிகட்டுடன் கூடிய அமைப்புகள், உள்ளன. ஹான் மன்னர்கள் சுவரை கட்ட மண், மணல், ஓடு, கருங்கல் போன்றவற்றை பயன்படுத்தினர். அதற்கு பின் வந்த மன்னர்கள், செங்கல், கருங்கல் காரையை பயன்படுத்தினர். பாதலிங், ஜியோங் போன்ற இடங்களின் கருங்கல் சுமார் 1000 கிலோ எடையுள்ளதாக இருக்கும். இவற்றை மலை சிகரங்களுக்கு எடுத்து சென்றதே ஒரு வியப்பாக இருக்கும். எந்த ஆண்டில் எந்த கம்பெனி செங்கல் பயன்படுத்தப்பட்டது என்று பக்க சுவர்களில் குறிப்புகள் எழுதியுள்ளனர். மிங் கோபுரங்கள் முதலில் இருபக்கமும் கட்டப்பட்டு பின்னர் நடுவில் உள்ள பாகத்தை மண்ணால் நிரப்பி படிகட்டுகள் அமைத்தனர். பின்னர் காவற்கோபுரங்களை இரண்டடுக்காக கட்டினார்கள். மேல் கோபுரத்தின் உச்சியில் இருந்து பார்த்தால் கீழே உள்ள எல்லாம் தெரியும் வண்ணம் அமைக்கபட்டிருக்கிறது. கீழ் தளத்தில் பீரங்கிகளும் துப்பாக்கிகளும் சுடுவதற்கு இலகுவாக ஓட்டைகள் போடப்பட்டிருக்கிறது. மழைகளின் அரிப்பு ஏற்படாமல் இருக்க கால்வாய்கள் போடப்பட்டன. குளிர், பனி, வெப்பம், மழை போன்ற இயற்கை சூழலில் பலர் இறந்துவிட்டனர். மனித நடமாட்டமே இல்லாத மலையுச்சிகளில் காவல் பணியில் ஈடுபட்டிருப்போர்க்கு சிறு சிறு பாதைகள் அமைத்து கழுதைகளின் வழியாக உணவை கொண்டு சென்றனர். ஏதேனும் அவசர உதவிக்கு புகை எழுப்பி சமிஞ்சை செய்தார்கள். ஒரு புகை அறிவிப்பென்றால் 100 எதிரிகள், 2 என்றால் 500, 3 புகை எரிப்பு என்றால் 1000 பேர் என்று சமிஞ்சையின் அடையாளம் பரிமாரப்பட்டு தகவல் தெரிவிக்கப்பட்டது. இதன் மூலம் விரர்கள் உஷார் படுத்தப்பட்டனர். பெருஞ்சுவரில் ஏராளமான கண்காணிப்பு நிலையங்களும் வழிகாட்டும் கோபுரங்களும் இருக்கிறது. ஆக்கிரமிப்பாளர்கள் ஊடுருவும்போது கோபுரங்களில் ஒளிபந்தம் ஏற்றப்பட்டு சமிஞ்சை தரப்பட்டு உதவி விழைந்தனர் இந்த செய்தி எங்களை மிகவும் வியப்பில் ஆழ்தியது. ஏரளமான சுற்றுலா பயணிகள் வந்த வண்ணம் இருக்கின்றனர். இதில் ஒரு சோகமும் இருக்கிறது. இந்த சுவர் கட்டுமானத்தின் போது ஏராளமான தொழிலாளர்கள் இறந்திருக்கிறார்கள்.. பல முக்கிய போர்கள் இந்த சுவற்றின் அடிவாரத்தில் தான் நடைபெற்றதாக வரலாறு. சீனாவின் சின் வம்சம் சீன வரலாற்றில் ஒரு பெரும் பங்கு வகுக்கிறது.. கன்ஃபூசியஸ் ஆதரவாளர்கள், அறிஞர்கள் அவர்கள் எழுதிய இலக்கியங்கள் எல்லாவற்றையும் நெருப்பில் இட்டு அவர்களை உயிருடன் புதைத்து அதன் மேல் கட்டபட்டது சீன பெருஞ்சுவர் என்ற செய்தியும் இருக்கிறது.///


அடடா என்ன ஒரு துக்ககரமான முடிவு. கடைசி பாரா படித்ததும் அதிர்ச்சியா இருக்கு.

இதோ போனசாக அவருடைய கவிதையிலும் ஒன்று.

///நம்பிக்கையும் துரோகமும் கலந்தே பயணிக்க நட்பு, பயணத்தில் இணை கோர்த்து வர துரோகமும் பின்னால் வர இடைப்பட்ட நேரம் தடைகளுக்கான நேரம் சிறிது இடைவெளியில் இரண்டில் ஒன்று விபரீதமாக தலைமை ஏற்று வர பின்னது சற்று நிதானித்தே கடக்கிறது. அதற்குள் நடந்துவிடும் சில விஷயங்கள் என்ன வென்று புரிய தலைப்படுமுன் துரோகத்தின் அளவு பல்கி பெருக நம்பிக்கையும் வாய்மையும் சற்று சுதாரிக்க கூடா நட்பில் புரிந்தது எது வென ஆனாலும் இன்னும் நம்பிக்கை இருக்கிறது எனக்கும் பிசிராந்தையார் கால நட்பு தேவையாயிருக்கிறது, காத்திருக்கிறேன் நட்பு பறவைகளுக்காக அது வளர்வதற்க்கான வரம் எனக்கு உண்டா என்பதே கேள்வி... கேள்விகளை கேட்டு கொண்டிருக்கிறேன், விடைகளை இயம்ப யாருக்கும் மனம் வரவில்லையோ அல்லது தெரியவில்யோ எதுவாகவும் இருக்கலாம் நட்புக்கான விதைகளை தூவ காத்திருக்கிறேன். மனதை பதியமிட்டு ஆனால் விதைகள் தான் இன்னும் கிடைத்தபாடில்லை.

டிஸ்கி : - மிகவும் அருமையான கவிதை சுபா. பிசிராந்தையார் கால நட்பு எல்லாம் கண்ணை விட்டு அகன்றதும் மறந்துவிடும் இந்த இணையக் காலத்தில் எதிர்பார்த்துக் காத்திருக்கின்றீர்களே. நிச்சயம் சிலர் இருக்கலாம். அதுபோல் ஒரு நட்பு உங்களுக்குச் சித்திக்கவேண்டும் என்று மனமாரப் ப்ரார்த்திக்கிறேன். :)

சீனப்பெருஞ்சுவர் பற்றிய தகவல்கள் அருமை. இதில் கடைசி பாரா கலவரப்படுத்தியது என்றால் மிகையில்லை. அம்மாடி எவ்ளோஉழைப்பு. மனித உழைப்பின் மகத்தான தரிசனம். அதன் காவற்கோபுரங்கள், பக்கவாட்டில் எழுதப்பட்டுள்ள நுண்ணிய தகவல்கள், தகவல் தொடர்பு அற்ற காலத்தில் புகை வழி சமிக்ஞைகள் அசத்தின. நாங்களே சென்று வந்ததுபோல் இருந்தது.

சாட்டர்டே ஜாலி கார்னரை சுவாரசியமாக்கிட்டீங்க. உலக அதிசயங்களுள் ஒன்றைப்பற்றிய அடிப்படைத் தகவல்களைத் தந்தமைக்கு அன்பும் மகிழ்ச்சியும் சுபா.

கிட்டத்தட்ட ஒன்பது மாதங்களுக்குப் பிறகு சாட்டர்டே ஜாலி கார்னரை மகிழ்ச்சியுடன் புதுப்பித்துள்ளேன். :) தொடர்ந்த ஆதரவுக்கு நன்றி மக்காஸ். :)

3 கருத்துகள்:

  1. கடைசி பத்தியைப் படித்ததும் மனம் அதிகமாக கனத்தது. ஒவ்வொரு அழகிற்கும், ஆச்சர்யத்திற்கும், பிரம்மாண்டத்திற்கும் பின்னால் இவ்வாறான நிகழ்வுகள் மறைந்திருக்கும் போலுள்ளது.

    பதிலளிநீக்கு
  2. சீனப் பெருஞ்சுவரைப் பற்றிய தகவல்கள் சுவாரஸ்யம். கடைசி பாரா அதிர வைத்தது. கவிதையின் ஏக்கம் நெஞ்சைத் தொடுகிறது.
    வாழ்க! வளர்க!

    பதிலளிநீக்கு
  3. ஆம் ஜம்பு சார்.

    ஆம் பானுமதி மேம்.

    வலைப்பதிவர் ஒற்றுமை ஓங்கட்டும்.!
    என்றும் நம்முள் வலிமை பெருகட்டும் !!

    பதிலளிநீக்கு

சும்மா ( பத்தி ) உங்க கருத்தையும் பதிவு செய்ங்க :)

Related Posts Plugin for WordPress, Blogger...