எனது 24 நூல்கள்

எனது 24 நூல்கள்
எனது இருபத்து நான்கு நூல்கள்

சனி, 1 அக்டோபர், 2016

சாட்டர்டே ஜாலி கார்னர் :- கல்யாண்குமாரின் வீக் எண்டும் ”வேல்” வார்த்தையும்.



எனது முகநூல் தோழன் கல்யாண். கல்யாண்குமார். அவ்வப்போது போடும் டைரிக் கிறுக்கல்கள் கவிதைகளைப் படித்து ஒரு கமெண்ட் போடுவார். ஒரு நாள் பரிட்சை பூதம் என்ற கவிதை போட்ட போது நீங்க
எங்கேயோ இருக்க வேண்டிய ஆள் என்று எழுதி இருந்தார்
 
(*ஒரு பூதம்
என்னைப் பயம் காட்டுகிறது.

*கேள்விகளென்னும்
பற்களை நீட்டிக்
காகிதங்களில்
தன்முகம் தனைப் புகுத்தி
வினாக்குறிகளாய்
நகங்களை விரித்து
ஒரு தேர்வுப் பூதம்
என்னை வேர்க்க வைக்கிறது.

*கேள்விப் புழுக்களைத்
தூண்டிலில் மாட்டி
மீனாய் என்னைச் சிக்கவைக்கும்.
கேள்விக் கருவாடு பூட்டி
வண்டியில் நாயாய்
என்னை ஓட்டும்
ஒரு பரிட்சைப் பூதம்
என்னைப் பயம் காட்டுகிறது. )

இவரது முகநூல் பக்கத்தில் நான் படித்து இப்படியும் உண்டுமா என யோசித்த வாசகம் “விழுவதும் எழுவதும்  தொடர்கதையாய் இருக்கையில் விலாசம் சொல்வது வெட்கக் கேடு தானே. ” 87 ஆம் வருடத்தில் இருந்து திரைப்பட இயக்குநராகப் பணியாற்றி வருகிறார்.  
 
எனக்கு ரொம்பப் பிடித்த இந்தப் படங்களை இவர் பக்கத்தில் பார்த்ததும் மகிழ்ச்சியாய் இருந்தது. ”அயன் மேன், பேட்மேன், ஸ்பைடர் மேன், மென் இன் ப்ளாக், த டார்க் நைட், மம்மி, ஷ்ரெக், ஹெல்பாய், எக்ஸ் மேன், பைரேட்ஸ் ஆஃப் கரீபியன், ட்ரான்ஸ்போர்ட்டர்ஸ், ட்ரான்ஸ்ஃபார்மர்ஸ்,  நைட் அட் த ம்யூசியம், கராத்தே கிட், குங்ஃபூ பாண்டா, டெர்மினேட்டர், கோஸ்ட் ரைடர், அவதார், டைட்டானிக்,

இவர் டைரக்டரா இருப்பதால இவரிடம் நமது சாட்டர்டே ஜாலி கார்னருக்காக வீக் எண்ட் நிகழ்வு பத்தி எழுதித் தரச் சொல்லிக் கேட்டேன். அவரது பதில் இங்கே

சும்மா.. சாட்டர்டே ஜாலி கார்னர்!! இது கண்டிப்பா எனக்கான களம் அல்ல.. ஆனாலும் ஏன் ? அப்படின் னா!! தெரியாம மாட்டிக்கிட்டேன்னு ஒத்துக்கிறது தான் சத்தியம்! அப்புறம் ஏண்டா நாயே எழுதறேன்னு கேட்டா!!! ஒரே பதில்: தேனம்மா !


ஃபேஸ் புக்ல யதேச்சையா கண்ல பட்டது சில கவிதைகள்... எண்பதுகளின் கடைசி, தொண்ணூறுகளின் தொடக்கம்... உறவுகள், உணர்வுகள், வாழ்வியல்,சமுதாய மதிப்பீடுகள் என்று பல கோணங்களில்... எனக்கு என் வீட்டில் மஞ்சுக்காவோட கவிதை நோட்டை படித்த நினைவுகள்.. அக்கா பார்த்தா திட்டுவாங்க.. நோட்டு அப்புறம் கண்ல பட ரொம்ப நாளாகும்.. சில வரிகளிலேயே என்னை இருபது வருஷம் பின்னால கொண்டு போனது தேனம்மா...

இந்த "வீக் எண்ட்" னு சொல்றது என் அறிவிற்கு, இது மென்பொருள் உலகம் அறிமுகத்திற்கு பிறகு தான்.. சரி தானே?

எனக்கெல்லாம் வெள்ளிக்கிழமையே ஸ்டார்ட் ஆயிடும்!! புது படம் பார்த்துடுவேன்.. சனிக்கிழமை மாமா கூட தான் பெரும்பாலும்.. சாயங்காலம் பாலசமுத்திரம் போகணும்.. மாமா ஒரு டெண்ட் தியேட்டர் நடத்திட்டிருந்தார்.. ரெண்டு ஷோ தான்.. ரெண்டும் பார்ப்பேன்.. நைட் கொசுக்கடில தூங்கிட்டு, காலைல மல்லிக் காபி குடிச்சுட்டு பழனிக்கு வந்தா நம்ம "வீக் எண்ட்" ஓவர்..


எனக்கு ஃப்ரண்ட்ஸ் இருக்கக்கூடாதுங்கிறதுல அப்பா கவனமா இருந்தார்.. அதற்காக வருஷம் ஒரு ஸ்கூல் மாறும்.. ஹாஸ்டல்.. ஏன் ? இது வரைக்கும் புரியல.. ஆனால் தொடக்கத்துக்கும் முடிவிற்குமான இடைவெளியும் , அதன் காரணமும் புரிந்து விட்டது ( அத்வைதம்)


அப்புறம் தராசுல மாணவ பத்திரிகையாளனா சேர்ந்த பிறகு, வாழ்க்கை மாறி விட்டது..

நிறைய பேர் பழக்கம்.. ஆனா நட்புங்கிற வட்டத்துக்குள்ள பேசுறவங்க கம்மிதான்..

சரி... மேட்டருக்கு வருவோம்.. சனிக்கிழமை! இன்வெர்ட்டர்ல ஃப்யூஸ் அவுட்.. வேலு  வரச் சொல்லி போன் போட்டாச்சு... வாஷிங் மெஷின்ல துணி போட்டாச்சு.. ஒன்மோர் ப்ளாக் காஃபி... அப்படியே டைப்பும்...
திடீர்னு குட்டியம்மாவோட போன்.. அக்கா பொண்ணு... காலங்கார்த்தால பீதிய கிளப்பிட்டா...


போன் அட்டண்ட் பண்ண ஒரு பயம் மனசுல... அம்மா, அக்காவுங்க, மாமான்னு, மனசுக்குள்ள ஃப்ளாஷ் கட்ஸ்...

ஆனாலும் நான்: ஹலோ... குரல்: மாம்ஸு... நான்: சொல்லு தங்கம்.. குரல்: சென்னைல இருக்கேன்.. (அப்பாடா.. நோ ப்ராப்ளம்) நான்: எப்ப வந்தீங்க? யார்யாரு? குரல்: நானு, பாவா, தம்பி,லட்டு.. நான்: ஏன் நேத்தே கூப்பிடல... இப்ப எங்கிருக்கீங்க..? குரல்: கவி வீட்ல... கவி உங்கள இங்க வரச் சொல்றா... (வேளச்சேரில இருந்து அங்க போக ஒரு மணி நேரமாகும்) நான்: ஓகே தங்கம்.. கட் பண்ணினா, காலிங் பெல் சத்தம்...


வேலு வந்தாச்சு... கார்ப்பரேட் கம்பெனிகள் இருக்கிற பில்டிங் மெயிண்ட்டனன்ஸ் சீஃப்.. நான்: வாங்க வேலு.. ரொம்ப பிஸி போல... இப்பெல்லாம் பார்க்கவே முடியல.. வேலு: அதையேன் சார் கேட்கறீங்க... அங்கங்க ஓடவே நேரம் பத்தல.. நான்: ஏன்? உங்க அஸிஸ்டெண்ட்கள் இல்லையா? வேலு: எல்லாரும் இருக்காங்க சார்.. நான் தான் இல்ல.. நான்: புரியல... வேலு: நாலு பேரையும் நாந்தான் சார் சேர்த்துவிட்டேன்.. ஒரு வாசருக்கு 75 ரூபா பில் போடரானுக சார்.. மேனேஜரும் கூட்டு... இவனுககூட சேரமுடியாது சார்.. பழி எனக்கு வந்துடும்... மாசம் ஒரு லட்சத்துக்கு மேல ஊழல் சார்...


நான்: சரி, அதுக்கு என்ன செய்ய? வேலு: ஒண்ணும் செய்ய முடியாது சார்.. என்னால அவங்கள மாதிரி செய்ய முடியாது சார்.. என் குழந்தைகளுக்கு பணம்கிற பேர்ல பாவத்த சேர்க்க விரும்பல சார்..(வேலுவோட வார்த்தை "வேல்" மாதிரி ஷார்ப் தான்)


வேலை முடிந்தது.. பில் 800+500..

வேலுவால் வாழ முடியும்

சரி, இனி நான் லட்டுவையும், குட்டி குலாபியையும் பார்க்கப் போறேன்.. நானும் பிஸி

பீனிக்ஸ் மால்.. மிச்சத்தை அப்புறமா... ஒகேயா... பை...

டிஸ்கி:-  ஜாலியா ஏதும் எழுதுவீங்கன்னு பார்த்தா நெகிழ வச்சிட்டீங்க கல்யாண்.நெசமாவே படிச்சு அசந்தேன். மனசாட்சியோட இருக்க இம்மாதிரி மக்களாலதான் இன்னும் நியாயம் நிர்வகிக்கப்படுது. அவர் சொன்ன ஒவ்வொரு வார்த்தையும் வேல் மாதிரி ஷார்ப்தான். மனசாட்சியின் படி நடப்பவர்களுக்கு அதுவே வழிகாட்டி வாழவைக்கும் என்பது உண்மைதான் கல்யாண். அருமையான மனிதரைப் பற்றிப் பகிர்ந்தமைக்கு நன்றி. 

இந்த வீக் எண்டும் சுற்றம் சூழ வாழ வாழ்த்துகள். மென்மேலும் சாதனைச் சிகரங்களை எட்டவும் வாழ்த்துகள். சாட்டர்டே ஜாலி கார்னரை நியாயத்துக்கும் நேர்மைக்கும் மனசாட்சிக்கும் குரல் கொடுத்த தளமா மாத்திட்டீங்க நன்றி. வாழ்க வளமுடன்.


6 கருத்துகள்:

  1. நல்லதோர் பகிர்வு. தொடரட்டும் ஜாலி கார்னர்.

    பதிலளிநீக்கு
  2. அட! சூப்பர் சாட்டர்டே!!! நல்ல பகிர்வு. அதில் தத்துவம் ஒன்றும் அடங்கிவிட்டது வேலாய்!!!

    பதிலளிநீக்கு
  3. நன்றி ஜெயக்குமார் சகோ

    நன்றி குமார் சகோ

    நன்றி வெங்கட் சகோ

    நன்றி துளசி சகோ & கீத்ஸ். ஆமாம் :)

    பதிலளிநீக்கு
  4. வலைப்பதிவர் ஒற்றுமை ஓங்கட்டும்.!
    என்றும் நம்முள் வலிமை பெருகட்டும்.!

    பதிலளிநீக்கு

சும்மா ( பத்தி ) உங்க கருத்தையும் பதிவு செய்ங்க :)

Related Posts Plugin for WordPress, Blogger...