எனது 24 நூல்கள்

எனது 24 நூல்கள்
எனது இருபத்து நான்கு நூல்கள்

வியாழன், 20 அக்டோபர், 2016

சிலைகள் சொல்லும் சேதி.

பெங்களூரு ராஜ ராஜேஸ்வரி கோயிலுக்குச் செல்லும் வழியில் உள்ள ஒரு சிறு குன்றில் அமர்ந்திருக்கும் நிஷ்டை சிவன் :) --

சொல்லும் சேதி - மௌனம் பரமசௌக்கியம்.
நடிகர் நெப்போலியன் அவர்களின் அலுவலகத்தில் நடிகர் பார்த்திபன் பரிசளித்த சிந்தனையைத் தூண்டும் சிற்பம். -

சொல்லும்சேதி - சேவை & பொதுநலம்.
சென்னை டி நகர் பிகேஆர் ஹோட்டலின் முன்புறம் உள்ள மீனவர் சிற்பம்.
சொல்லும் சேதி - உழைப்பே உயர்வு.

ஹைதராபாத் சில்பாராமம் கலாச்சார கிராமத்தில் இருக்கும் யட்சி சிற்பம்.

சொல்லும் சேதி - மகளிர் சக்தி மிகப் பெரிது.
குல்பர்கா புத்தவிஹாரில் உள்ள ஸ்தூபியில் இருக்கும் புத்தரின் சிலை.  கீழே தர்மச் சக்கரம்.

சொல்லும் சேதி - ஆசை அறுமின்.
சென்னை ஏர்போர்ட்டில் மீனவநண்பர்கள்.

சொல்லும் சேதி - கடமையே கண்ணாயினார்.
காரைக்குடி கிருஷ்ணா மண்டபம்,பேக்கரி டிசோட்டா, ஃபர்ஸ்ட் பீட், ஜெமினி அருகில் உள்ள அண்ணா சிலை. !

சொல்லும் சேதி - கடமை கண்ணியம் கட்டுப்பாடு.
சாக்கோட்டையில் உள்ள வீரசேகர உமையாம்பிகை கோயிலின் சுற்றுப் பிரகாரத்தில் உள்ள நாகங்கள்.

சொல்லும் சேதி - சும்மா இருப்பதே சுகம். !:)
ஹைதையில் ஏதோ ஒரு சாலையில் உள்ள கம்பீரமான ராஜா சிலை. செம்பால் ஆனது.

சொல்லும் சேதி - ஒன்றே குலம் ஒருவனே தேவன்.

3 கருத்துகள்:

சும்மா ( பத்தி ) உங்க கருத்தையும் பதிவு செய்ங்க :)

Related Posts Plugin for WordPress, Blogger...