எனது 24 நூல்கள்

எனது 24 நூல்கள்
எனது இருபத்து நான்கு நூல்கள்

ஞாயிறு, 2 அக்டோபர், 2016

லேடீஸ் ஸ்பெஷலில் ஸ்பெஷல் விருது அங்கீகாரம்.

இருபதாம் ஆண்டு ஆரம்பத்தை ஒட்டி லேடீஸ் ஸ்பெஷலில் ஸ்பெஷல் லேடி விருது கிடைத்தது. ரஷ்யன் கல்சுரல் செண்டரில் நடந்த நிகழ்வில் மிகப் பிரபலங்கள் மேடையிலும் பக்கத்திலும் வீற்றிருக்க ஸ்பெஷல்  விருது வாங்கியது மறக்கமுடியாத அனுபவம்.


ஆதியிலிருந்து தற்போது வரை லேடீஸ் ஸ்பெஷலின் வளர்ச்சியில் கரங்கோர்த்தவர்கள் அனைவருக்கும் லேடீஸ் ஸ்பெஷல் சார்பாக விருது வழங்கப்பட்டது.

நல்லி திரு குப்புசாமி செட்டி அவர்கள் தலைமை ஏற்க, டைரக்டர் திரு எஸ் பி முத்துராமன், நடிகை குட்டி பத்மினி, கல்வியாளர் திருமதி நிர்மலா ப்ரசாத், திருமதி ஜெயம் லேனா தமிழ்வாணன் ,திருமதி ரவி தமிழ்வாணன் ஆகியோர் சிறப்பு விருந்தினராகக் கலந்து கொள்ள

திரு சுப்ரபாலன், திரு.யோகா, திருமதி பத்மினி பட்டாபிராமன், திருமதி காந்தலெக்ஷ்மி சந்திரமௌலி, திருமதி பத்மாவதி திரு ஞானசேகர் ஆகியோருடன் விருதைப் பெற்றுக் கொண்டேன்.
தம்முடன் லேடீஸ் ஸ்பெஷலிலுக்காக சிறிதளவு பங்களிப்பு செய்திருந்தாலும் கூட அவர்களையும் அழைத்து கௌரவித்தது ஆசிரியை திருமதி கிரிஜா ராகவனின் பேரன்பே. மனப்பூர்வமாக அந்த மேடையில் சிரம் தாழ்த்தி வணங்கினேன் என்  குருவை. அம்மா இலக்கிய விருது , ஆஸ்கார் அவார்டு வாங்கியது போன்ற மகிழ்ச்சி பொங்கியது மனதில் லேடீஸ் ஸ்பெஷல் விருதை வாங்கியதும்.

பத்ரிக்கையை ஒரு பெண்ணாக இத்தனை வருடங்கள் நடத்தி வருவது எப்பேர்ப்பட்ட சாதனை என்பதை குட்டி பத்மினி, எஸ்பிஎம், திருமதி ரவி ஆகியோர் புகழ்ந்து கூறினார்கள். காந்தலெக்ஷ்மி கிரிஜாம்மா எப்படி ஒவ்வொருவரின் திறமையையும் 

இதனை இவனான் முடிப்பான் என்றாய்ந்து
அதனை அவன் கண் விடல்.

என்ற குறளுக்கேற்ப இனம்கண்டு அவர்களை எப்படி லேடீஸ் ஸ்பெஷலுக்கு பங்களிப்பு செய்யச் செய்தார்கள் எனக் கூறினார். நெகிழ்வாக இருந்தது. என்னைக் கண்டுபிடித்ததே அவர்தான்.

வாழ்நாள் விருது என்பார்கள். இது எனக்கு வாழ்நாள் விருதுதான். மிக்க நன்றி கிரிஜா மேடம் உங்க பேரன்புக்கு மீண்டும் ஒருமுறை தலைதாழ்கிறேன்.

11 கருத்துகள்:

 1. மனம் நிறைந்த நல்வாழ்த்துகள். மேலும் பல சிறப்புகள் உங்களை வந்தடையட்டும்.

  பதிலளிநீக்கு
 2. அருமை .. தொடரட்டும் உங்கள் இனிய பயணம்
  http://snowwhitesona.blogspot.in/

  பதிலளிநீக்கு
 3. விருது பெற்றமைக்கு இனிய நல்வாழ்த்துக்கள்! மேன்மேலும் பல சிகரங்கள் தொட்டு மிக உயர்ந்த இடத்தை அடைய மறுபடியும் மனதார வாழ்த்துகிறேன்!

  பதிலளிநீக்கு
 4. /வாழ்நாள் விருது என்பார்கள். இது எனக்கு வாழ்நாள் விருதுதான். //

  கேட்கவே மிக்க மகிழ்ச்சியாக உள்ளது. படங்களுடன் கூடிய இந்தப்பதிவு மிக அருமை. பாராட்டுகள். பகிர்வுக்கு நன்றிகள்.

  மேலும் மேலும் இதுபோன்ற பல பெருமைகள் தங்களைச் சேரட்டும். நல் வாழ்த்துகள். :)

  பதிலளிநீக்கு
 5. மனம் நிறைந்த வாழ்த்துகள். சாதனைகள் தொடரட்டும்.

  பதிலளிநீக்கு
 6. வாழ்த்துக்கள் சகோதரியாரே
  சாதனைகள் தொடரட்டும்

  பதிலளிநீக்கு
 7. நல்வாழ்த்துகள் தேனம்மை. நீங்கள் அயராது ஆற்றிய அரும்பணிக்கான சிறப்பான அங்கீகாரம்.

  பதிலளிநீக்கு
 8. தாமதத்திற்கு மன்னிக்கவும். மனம் நிறைந்த வாழ்த்துகள்!..சாதனைகள் தொடரட்டும்! தங்கள் புகழ் ஓங்கட்டும்!! வலையுலகிற்கும்பெருமை சேர்க்கட்டும்...

  பதிலளிநீக்கு
 9. நன்றி வெங்கட் சகோ

  நன்றி சங்கீதா கிரியேஷன்ஸ்

  நன்றி மனோ மேம்

  நன்றி விஜிகே சார்

  நன்றி பழனியப்பன் சார்

  நன்றி ஜம்பு சார்

  நன்றி ஜெயக்குமார் சகோ

  நன்றி ராமலெக்ஷ்மி

  நன்றி துளசி சகோ & கீத்ஸ். :) லேட்டா வந்தாலும் லேட்டஸ்டா சொல்லீட்டிங்க. அருமை :)

  பதிலளிநீக்கு
 10. வலைப்பதிவர் ஒற்றுமை ஓங்கட்டும்.!
  என்றும் நம்முள் வலிமை பெருகட்டும்.!

  பதிலளிநீக்கு

சும்மா ( பத்தி ) உங்க கருத்தையும் பதிவு செய்ங்க :)

Related Posts Plugin for WordPress, Blogger...