சாட்டர்டே ஜாலி
கார்னர். ட்ரெண்டிங் ட்ரென்ஞ்சர்ஸ் பற்றி சுந்தரி செல்வராஜ்.
( உங்க ஃபோட்டோவை
சுட்டுட்டேன் மன்னிச்சிடுங்க J)
முகநூல் ஒரு பொழுதுபோக்குத்தளம்.
இதைத் தன்னுடைய ஆக்கப்பூர்வமான வளர்ச்சிக்குப் பயன்படுத்தியோர் ஏராளம். ( நானும் இதில்
உண்டு.) ஆனால் நட்பை வளர்ப்பதற்கு மட்டுமே முகநூலைப் பயன்படுத்துபவர்கள் சிலர். அவர்களுள்
என் அன்பிற்கினிய தோழி சுந்தரி செல்வராஜ் குறிப்பிடத்தக்கவர்.
பெங்களூரில் வசித்து
வரும் இவர் எப்போதாவது ஒரு முறை நம் பக்கம் வந்தாலும் வலைத்தள போஸ்ட் எல்லாம் படித்து
விட்டே கமெண்டுவார். இவருக்கு எதையும் உண்மையாகச் செய்யவேண்டும், போலியாகப் பாராட்டத்
தெரியாது. சிறந்த சாய் பக்தை. சொல் ஒன்று என்றால் செயலும் ஒன்றுதான். அதுதான் அவரின்
சிறப்பு.
