என் பெயர் சரஸ்வதி காயத்ரி
வீட்டில் காயத்ரி .வெளியில்( official பெயர் சரஸ்வதி).
சென்னை ,மடிப்பாக்கம்( அரசு) பள்ளியில் ஆசிரியை.
27 வருட பணி அனுபவம்.
சிறுவயதிலிருந்தே புத்தகங்கள் படிப்பதில் ஆர்வம் அதிகம். திருமணமானவுடன் குடும்பம்,குழந்தைகள் ,வேலை என வாசிப்பது நின்று இப்பொழுது ,2015ல் முகநூல் வந்தப்பிறகு இழந்த ஆர்வங்களையெல்லாம் மீட்டெடுத்திருக்கிறேன்.
அதில் வாசிப்பது தலையாயது.
சரஸ்வதி காயத்ரி என் முகநூல் தோழி. புத்தகங்களை வாசிப்பதிலும் அவற்றை மென் இறகால் தொடுவது போல மென்மையாக விமர்சிப்பதிலும் வித்தகி. சொல்லப்போனால் இவருக்கு கவிதைத் தொகுதிகள்தான் பிடிக்கும். வண்ணதாசனின் கவிதைகள் பிடிக்கும்.
இவர் தனது உறவினர்கள் பற்றி எழுதும் அனைத்தும் மனம் தொட்டவை. உறவுகளின் நெருக்கத்தையும் அன்பையும் வாசித்துக் கண்ணைக் கசியவிட்டவை. வீடு பற்றிய இவரது கவிதை என் உயிரைத் தொட்ட ஒன்று. வீடு என்பது சிதிலமானாலும் அதில் வாழ்ந்த அன்பு இன்னும் உயிர்த்துக்கொண்டிருக்கிறது இவரது எழுத்தில்.
இனி சாட்டர்டே ஜாலி கார்னருக்காக நான் இவரிடம் சிறுகதை, கவிதைகள் பற்றிய இவரது பார்வையைக் கேட்டிருந்தேன். அவர் கூறியதை இங்கே அளித்திருக்கிறேன்.
///பாவண்ணனின் " துங்கபத்திரை" படித்துக்கொண்டிருக்கிறேன்.
நந்தனார் படத்தில் தண்டபாணி தேசிகரின் குரலைப்பற்றி அவர் எழுதியிருப்பதை படித்தவுடன் படிப்பதை நிறுத்தி விட்டு பாடல்களை கேட்க ஆரம்பித்து விட்டேன்.துக்கப்பிரவாஹத்திலிருந்து மீள்வதற்கு படிக்க ஆரம்பித்து மீண்டுமொரு துக்கத்தில்..