எனது 24 நூல்கள்

எனது 24 நூல்கள்
எனது இருபத்து நான்கு நூல்கள்

சனி, 31 டிசம்பர், 2016

நாலு புள்ளியில் ஐம்பத்தைந்து கோலங்கள்.

நாலு புள்ளி நாலுவரிசையில் கோலங்கள் போட்டு அனுப்புங்க அக்கா என்று ஸ்ரீதேவி செல்வராஜன் எனக்குக் கட்டளை இட்டிருந்தார். ( போன வருடம் ) . புள்ளைக்குக் கல்யாணமானபுதுசு. என் முகநூல் தங்கையான அவர் என் முகநூல் நண்பரான உதயாவை மணந்திருந்தார். புள்ள வாய்க்கு ருசியா சமைக்கத் தெரியுதோ இல்லயோ கண்ணுக்கு அழகா கோலமாட்டும் வாசல்ல போட்டு அஸ்பெண்டை தாஜா பண்ணுவோம்னு கேட்டிருந்துச்சு போல :)

கொசுறா ஒரு புள்ளிக் கோலமும் போட்டு அனுப்பினேன். காலை பிஸியில் ஏதோ ஒரு புள்ளிய வைச்சுக் கோலம் போட்டுடலாம்ல. ஃப்ளாட் வாசல்கள்ல அவ்ளோதானே இடம் இருக்கும் :) :) :)

இப்போ அவங்களுக்கு ஒரு குட்டிப் பொண்ணு பிறந்திருக்கா. இந்த இனிப்பான தருணத்துல அவங்கள வாழ்த்துறதோட இந்தக் கோலங்களையும் பகிர்கிறேன்.

அப்புறம் முக்கியமான விஷயம். உதயசங்கர் கோலங்களுக்காக ஒரு வெப்சைட்டே வைச்சிருக்கார் :)

சாட்டர்டே போஸ்டுக்காக ப்ராமி கல்வெட்டுக்கள் பத்தியும் ப்ராமி எழுத்துருக்கள் பத்தியும் கேட்டிருந்தேன். முன்னேயே பிஸி. இப்போ பாப்பா வேற வந்தாச்சா. என்ன சொல்ல. அதுனால மெயில்ல கிடைச்சத இங்கே போட்டிருக்கேன். நீங்களும் அவர் வெப்சைட்ஸ் பக்கம் போயிப் பாருங்க. !

அருமையா கோலம் போட சொல்லித்தராங்க. !


சாட்டர்டே போஸ்டுக்காக நான் அவரிடம் கேட்ட கேள்வியும் பதில்களும்.  

///பிராமி எழுத்துக்கள் என்றால் என்ன. அது பற்றியும் நீங்கள் சென்ற ஊர்களில் கிடைத்த கல்வெட்டுகள் அவற்றின் எழுத்துகள் கூறப்பட்டிருந்த விவரங்களையும் விரிவா சொல்லுங்க. ///

உதயனின் மடல்

/// தலை தீபாவளி பர்சேஸ் பிஸியில் இருக்கிறேன் :) கொஞ்சம் நேரம் கிடைக்கும் அனுப்புகிறேன்
முன்பு நான் சென்ற மலைகள், கோவில்கள் எல்லாம் இந்த ஆல்பத்தில் உள்ளன.
பிராமி எழுத்துக்களுக்கு பாண்ட் உருவாக்கி இருந்தேன் நண்பர்களுடன். அதன் தொடர்ச்சியாக வட்டெழுத்துக்களுக்கும் பாண்ட் உருவாக்கும் முயற்சியில் இருக்கிறேன், கொஞ்ச நாள் ஆகும்.
கண்டிப்பாக எழுதி அனுப்புகிறேன்.////

///////இந்த மடல் என்னையும்  என் வேலைகளையும் அறிமுகபடுத்தவே.

udhayam.in

பழங்கால கலைகளை ஆவணபடுத்தும் முயற்சியாக ஆரம்பித்து நடத்தி வருகின்றேன். இதில் கலைகள் பற்றிய தெரியாத விடயங்களை அதற்குண்டான படங்களுடன் விளக்கங்களும் (Image With Description) வரைவது எப்படி என்று அசைப்படங்களும் (Animation) செய்து ஒளிப்படங்களாக்கப்பட்டுள்ளது.

இத்தளத்தில் நகரமயமாக்கலில் காணாமல் போன கோலங்களை முதன்மைப்படுத்தி உருவாக்கப்பட்டுள்ளது. , இவ்விணையதளத்தில் உள்ள கோலங்கள் அனைத்தும் Engineering Drawing முறைப்படி சரியான அளவில், சரியான வடிவத்தில் வரையப்பட்டு நல்ல தரமான படங்களக உருவாக்கப்பட்டுள்ளது.

கோலங்களுக்கு மட்டுமல்லாது தமிழின் பழங்கால எழுத்து வடிவங்களை எழுத்துருக்களாக மாற்றும் முயற்சியில் முதல் கட்டமாக பிராமி எழுத்து வடிவங்களை ஆராய்ந்து கணிணியில் வரைந்து ஆதிநாதன் என்ற பெயரில் எழுத்துருக்கள் யூனிக்கோடு பார்மட்டில் ஒப்பன் சோர்ஸாக வெளியிட்டுள்ளோம்,

அசோக பிராமி எழுத்துருக்கள் டிசம்பர் மாதம் வெளியிட இருக்கின்றோம். இவற்றுடன் வட்டெழுத்துக்களை
யுனிக்கோடு எழுத்துருக்களாக மாற்றும் முயற்சியையும் தற்சமயம் தொடங்கியுள்ளோம்.

ஆதிநாதன் எழுத்துருவிற்கு

கலைகளுக்கான படத்தொகுப்பிற்கு (Traditional art image  Gallery)

Link: http://udhayam.in/art-gallery

கலைகளுக்கான வீடியோத்தொகுப்புகளுக்கு (Arttube)

Link : http://udhayam.in/art-tube

(Youtube போன்று ARTTUBE என்ற பெயரில் அனிமேஷன், வீடியோ, அகியவற்றையும் அனிமேசன் சாப்ட்வேர் உதவியிடன் கோலம் எப்படி வரைவது என்று அளித்து வருகிறேன்)

தற்சமயம் தமிழ் ஆங்கிலத்தில் மட்டும் உள்ள இத்தளத்தில் செப்டம்பர் மாத இறுதியில் அல்லது செம்ப்டம்பரில் மலையாளம், கன்னடம், தெலுங்கு மற்றும் இந்தியில் இதன் சேவை  செயல்படத்துவங்கும்...மேலும் சமண மலைகளை போட்டோகேலரியாக செய்து வருகிறேன்.

மாங்குளம் : https://picasaweb.google.com/109292260549096695317/Mangulam

கிடாரிபட்டி & அரிட்டாபட்டி : https://picasaweb.google.com/109292260549096695317/KidaripattiArittapatti

கிழக்குயில்குடிஉ : https://picasaweb.google.com/109292260549096695317/Keelakuilkudi

கிடாரிபட்டி : https://picasaweb.google.com/109292260549096695317/Kidaripatti

திருப்பரங்குன்றம் : https://picasaweb.google.com/109292260549096695317/Thiruparankundram

மேலும் : https://picasaweb.google.com/109292260549096695317


எனது அலுலக ரீதியான டிசைன் வேலைகள் : http://mo-engineers.com/

நாங்கள் செய்த கோவில் மாடல் : http://www.youtube.com/watch?v=mU6jn9zipLQ
-------------

பெயர்                   -  உதயன் (உதயசங்கர்)
வேலை                - வரைபட கலைஞர் (Designer :- Auto Cadd, 3ds MAX, Flash)
வலைபதிவு         -   http://udhayan-photos.blogspot.com/

டிஸ்கி:- சமண மலைகள் பற்றிப் படித்ததும் ஜம்பு சார் அவர்கள் ஞாபகம் வந்தது. :) எனிஹௌ நன்றி உதயன் . 2014 லில் கேட்ட கேள்வி இது. கூடிய சீக்கிரம் பதிலை அனுப்புங்க. :) பாப்பாவுக்கும் ஸ்ரீக்கும் என் அன்பை சொல்லிடுங்க :)

4 கருத்துகள்:

 1. சிறப்பான பகிர்வு. கோலங்கள் அனைத்து எளிமையாக இருக்கின்றன.

  பதிலளிநீக்கு
 2. தங்களுக்கும் தங்கள் குடும்பத்தாருக்கும் இனிய ஆங்கிலப் புத்தாண்டு வாழ்த்துகள்!

  பதிலளிநீக்கு
 3. நன்றி வெங்கட் சகோ

  நன்றி யாழ்பாவண்ணன் சகோ

  பதிலளிநீக்கு
 4. வலைப்பதிவர் ஒற்றுமை ஓங்கட்டும்.!
  என்றும் நம்முள் வலிமை பெருகட்டும்.!

  பதிலளிநீக்கு

சும்மா ( பத்தி ) உங்க கருத்தையும் பதிவு செய்ங்க :)

Related Posts Plugin for WordPress, Blogger...