புதன், 21 டிசம்பர், 2016

நலந்தாவில் எனது நூல்கள். தனித்தமிழும் இனித்தமிழும் கருத்துப் பேழை.

////அன்புடையீர் 

வணக்கம் 

வ. சுப. மாணிகனார் நூற்றாண்டை முன்னிட்டு நலந்தாவின் "தனித் தமிழும் இனித் தமிழும்" கருத்துப் பேழையில் ஆக்கம் நல்கி பங்கு பெற வேண்டுகிறோம். 

தங்கள் கருத்துகளை 500 சொற்களுக்கு மிகாமல் கை எழுத்து பிரதியாகவோ தட்டச்சுப் பிரதியாகவோ 05.01.2017 க்குள் அளிக்க வேண்டுகிறேன்.

நன்றி

அன்புடன்
நலந்தா செம்புலிங்கம் .////
*                *                   *               *                  *                   *                *
காரைக்குடி நலந்தா புத்தகக் கடை நிகழ்த்தும் ”இனித்தமிழும் தனித்தமிழும் ” என்ற தலைப்பில் கருத்துப் பேழைக்கு உங்கள் ஆக்கங்களை அனுப்பிப் பங்கு பெற வாழ்த்துகிறேன்.
நலந்தா = நல்ல புத்தகக் கடை. இதை நடத்தி வருபவர் தேவகோட்டையைச் சேர்ந்த திரு ஜம்புலிங்கம் அவர்கள். 

அவர்களை சென்றவாரத்தில் ஒரு நாள் கடைக்குச் சென்று சந்தித்தேன். சிறிது நேரம் உரையாடினேன். 
அங்கே எனது திருமணத்துக்கு முன் நான் பங்கு பெற்ற ஒரு கவியரங்கிற்குத் தலைமை தாங்கிய திரு. கனவுதாசன் அவர்களையும் சந்தித்தேன். 
மிகப் பிரபலமான திருமணப் புகைப்படக்காரர் திரு, வள்ளியப்பன் அவர்களும் வந்திருந்தார்கள்.

கடையில் திரு ஜம்புலிங்கம் அவர்களின் துணைவியாரும் இருந்தார்கள். புத்தகத் திருவிழாக்களில் மட்டுமே புத்தகங்கள் அதிகம் விற்பனை ஆகின்றன என்ற கருத்து இருவருக்குமே இருந்தது.

மிகப் பழைய பதிப்பாக இருந்தாலும் திலகவதி அவர்களின் கதைத் தொகுப்பை ( 70 சிறுகதைகள் - முதல் பாகம்.. யம்மாடியோ எவ்ளோ எழுதி இருக்காங்க. அதே சமயம் வலிமையான அர்த்தமுள்ள எழுத்துகள் !!! ) வாங்கி வந்தேன். 

எனது நூல்கள் அங்கே  கிடைக்கின்றன. காரைக்குடி தினசரி மார்க்கெட் - குறிஞ்சிக்கு எதிரில் உள்ள ஏவிசி காம்ப்ளெக்ஸில் இந்தக் கடை உள்ளது. எனது ஐந்து நூல்களும்  ( சாதனை அரசிகள், ங்கா, அன்ன பட்சி, பெண்பூக்கள், சிவப்புப் பட்டுக்கயிறு ) இருக்கின்றன. காரைக்குடி மக்களும் சுற்று வட்டார மக்களும் அங்கே எனது புத்தகம் வாங்கலாம். 


6 கருத்துகள் :

Jeevalingam Yarlpavanan Kasirajalingam சொன்னது…

வாழ்த்துகள்

சிவகுமாரன் சொன்னது…

வாழ்த்துக்கள். பதிப்பகமும் , புத்தகக் கடையும் நடத்துவதற்கு சேவை மனப்பான்மை வேண்டும்

கரந்தை ஜெயக்குமார் சொன்னது…

வாழ்த்துக்கள் சகோதரியாரே

G.M Balasubramaniam சொன்னது…

வாழ்த்துகள்

Thenammai Lakshmanan சொன்னது…

நன்றி யாழ்பாவண்ணன் சகோ

நன்றி சிவகுமாரன்

நன்றி ஜெயக்குமார் சகோ

நன்றி பாலா சார்.

Thenammai Lakshmanan சொன்னது…

வலைப்பதிவர் ஒற்றுமை ஓங்கட்டும்.!
என்றும் நம்முள் வலிமை பெருகட்டும்.!

கருத்துரையிடுக

சும்மா ( பத்தி ) உங்க கருத்தையும் பதிவு செய்ங்க :)

Related Posts Plugin for WordPress, Blogger...