எனது 24 நூல்கள்

எனது 24 நூல்கள்
எனது இருபத்து நான்கு நூல்கள்

வெள்ளி, 16 டிசம்பர், 2016

இங்கிவரை யாம் பெறவே.. – 2இங்கிவரை யாம் பெறவே.. – 2

நமக்காகத் தங்கள் வாழ்நாள் பூரா பணிபுரியும் சிலரை நாம் மறக்கவே முடியாது. மன்னார்குடியில் எங்கள் வீட்டில் பணிபுரிந்த நீலாக்கா என்பவரை மறக்க முடியாது. மிக அன்பானவர். ஈழத்தமிழர். தினமும் வந்து வீடு துடைப்பதும் ஆட்டுக்கல்லில் மாவரைப்பதும் பாத்திரம் தோய்ப்பதும் துணி துவைப்பதுமாக இருப்பார். அவருக்கு ஒரு மகன் , ஒரு மகள். முதல் திருமணத்தில் ஒரு மகளும் , அடுத்த திருமணத்தில் ஒரு மகனும் இருந்தார்கள். மகன் நை நை என்று அழுதுகொண்டே இருப்பான். இன்று அந்தப் பையன் மிகப் பெரும் ஃபோட்டோகிராஃபராக இருக்கிறான். 

அம்மா வீட்டில் காளிமுத்து அக்கா( சரோஜா அக்கா ) சிலகாலம் பணிபுரிந்தார். எங்கள் ஆயாவைப் போல எங்கள் அம்மா அப்பாவும் வேலை செய்பவர்களைப் பிள்ளைகளாகவே பாவிப்பார்கள். அவர்கள் குடும்ப நல்லது கெட்டதுக்கெல்லாம் உடனிருப்பார்கள். இவர்களின் பிள்ளைகளின் படிப்பு கல்லூரி, திருமணச் செலவுகளை ஏற்றுக் கொள்வார்கள்.தோடு கொலுசு, ோடு, வையல், செயின், சைக்கிள் வாங்கவும், பிரசவம், கண் வைத்தியத்துக்கும், வேலையில் சேரப் பணம் கட்டவும் உதவுவார்கள்.  

துணி துவைக்கப் பழனி அண்ணனும் சரசக்காவும் வருவார்கள். குடியின் காரணத்தால் பழனி அண்ணன் இயற்கை எய்திவிட தற்போது சரசக்கா வந்து செல்கிறார்கள். வெள்ளை என்றால் அப்படி ஒரு வெள்ளை இருவரையும் போலத் துவைக்க நம்மாலும் முடியாது , எந்த அட்வான்ஸ்டு வாஷிங் மெஷினாலும் முடியாது. 

மாசமாக இருக்கும் போது எண்ணெய்த் தண்ணீர் ஊற்றவும் குழந்தைப் பேறின் பின் கைக்குழந்தைகளைக் குளிப்பாட்டவும் முத்தி அக்கா வருவார்கள். வெந்நீர், வாசனைத்தூள், சீயக்காய்த்தூள், கஷாயம், அக்காவுக்குக் காஃபி, பிள்ளைக்கு உரசிக் கொடுக்க மருந்து, என்று என் தாயார் தயாராக வைத்திருப்பார்கள். “ தாய் செய்வதை யாராலும் செய்யமுடியாது “ என்று எனது அம்மாவை சிலாகிப்பார்கள் முத்தி அக்கா. மூப்பின் காரணத்தால் கண் பார்வை மட்டுப்பட்டு கடைசிக்காலத்தில் வீட்டிலேயே இருந்தார்கள். 


என் மாமியாரிடம் முப்பத்தைந்து வருடங்களாகப் பணிபுரிந்த தனாம்மாவையும் மறக்க இயலாது. அடாது மழை பெய்தாலும் தினம் மூன்று முறை வந்து வேலை செய்வார். ராணி, மல்லிகாம்மா போன்றோரும் என் மாமியார் என்றால் லீவு போடாமல் வந்து வேலை செய்து கொடுப்பார்கள். எனது மாமியாரும் எந்த வேலையிலும் குற்றம் குறை கண்டுபிடிக்காமல் இருப்பதோடு வேலை செய்பவர்களை வேலைக்காரம்மா என்று கூடக் குறிப்பிடாமல் தனாம்மா, ராணி, மல்லிகாம்மா என்று பேரைச் சொல்லியே குறிப்பிடுவார். இந்த நல்ல பழக்கத்தை நான் என் மாமியாரிடம் இருந்து கற்றுக் கொண்டேன். 

நாங்கள் பணி நிமித்தம் இரு வருடங்களுக்கு ஒரு முறை ஊர் விட்டு ஊர் மாறுவதால் வேலை செய்பவர்கள் மாறுபடுவார்கள். சில வட இந்திய ஊர்களில் வசித்தபோது ஆள் வைத்துக் கொள்ளவில்லை. எல்லாம் மிஷின் மயம். கோவையில் தனாம்மா, தனா, சென்னையில் கஸ்தூரி, சிதம்பரத்தில் குமாரி, நெய்வேலியில் சகுந்தலா, காரைக்குடியில் லெக்ஷ்மி, திரும்ப சென்னையில் அஞ்சுமா, பெங்களூரில் கனகம்மா, காரைக்குடியில் மல்லிகாம்மா என்று லிஸ்ட் தொடர்கிறது. 

எல்லாமே நல்ல தேவதைகள் என்றாலும் ஒரு துர்தேவதையும் என்னை மிரட்டி இருக்கிறது. அதுதான் கனகம்மா. தினம் காலையில் ஒன்பது மணிக்கு வருவேன் ஒருதரம்தான் பாத்திரம் தேய்ப்பேன். இவ்ளோ போடாதே. சூடா டிஃபன் காஃபி கொடுத்தால்தான் வருவேன் என்று பல்வேறுபட்ட கண்டிஷன்ஸ். 

லீவு நாளிலும் குளிரிலும் எங்களுக்காக எழுந்து சமைக்கிறேனோ இல்லையோ கனகம்மாவுக்காக எழுந்து சுடச்சுட சமைப்பதுண்டு. பய இட்லி, பலகாரம் நாம தின்னலாம் அவருக்குக் கொடுத்தால் கோபமாகிவிடுவார். தனது பையன்கள் மருமகள்கள் கதையைச் சொல்வது போல கோபம் வந்து பெரிய பையனை அடித்தேன் உதைத்தேன் என்பார். அவரின் பெரிய பையனுக்கே நாற்பத்திஐந்து வயதிருக்கும். இவருக்கு ஐம்பத்தி எட்டு வயது. நல்ல ஜெயண்ட் போலிருப்பார். ஆகிருதியான பெண்மணி. சாப்பாட்டில் ரொம்பக் குறை கண்டுபிடிப்பார். உப்புமாவுக்கு கடலைப்பருப்பு, வேர்க்கடலை, பட்டாணி, காய்கறிகள் தாளிக்கணும் என்று கண்டிஷன்ஸ் வேற. J அவ்வப்போது ஆப்செண்ட் வேற. ரொம்ப இம்சையில்தான் வைத்திருந்தேன். 

திடீரென சம்பளம் வாங்கிய அன்று நின்றுவிட்டு நாங்கள் ஊர் மாறப்போகிறோம் என யார்மூலமோ தெரிந்தவுடன் திரும்ப பார்க்க வந்தார் கனகம்மா ! பெங்களூரை விட்டு வரும்போது எல்லாப் பணியாளர்களுக்கும் கொடுப்பதைப் போலக் கனகம்மாவுக்கும் என்னால் முடிந்ததை அள்ளிக் கொடுத்துவிட்டுத்தான் வந்தேன். 

நெய்வேலியில் என்னை விட்டுப்போகமாட்டேன், என் வீட்டு வேலையை விட்டால் எல்லார் வீட்டிலும் வேலையை விட்டு விடுவேன் என்று கூறிய சகுந்தலாவும் இருக்கிறார். என்னை விட்டுப் போமாட்டேன் என்றும் நான் ஊர் விட்டு ஊர் மாறினால் அழுதுகொண்டும் விடை அனுப்பியவர்கள்தான் மற்ற அனைவரும். 

எங்கள் ஆயாவீட்டு ஐயாவிடம் கல்யாணம் அண்ணன், காசி அண்ணன் என இருவர் கக்கப்ிள்ளைகாகப் பணிபுரிந்துவந்தார்கள். இதில் கல்யாணம் அண்ணன் வேலை நேரம் போக பார்ட்டைமாக பினாயில் விற்கும் தொழிலைச் செய்துவந்தார். ! 

மன்னார்குடியில் என் அம்மாவும் பெரியம்மாவும் ஆனந்த விநாயகர் மெட்டல் மார்ட் என்றொரு சில்வர் பாத்திரக் கடையை 1977 முதல் 1983 வரை நடத்தி வந்தார்கள். அப்போது அங்கே சிவாஜி அண்ணன் என்றொருவர் பணி செய்துவந்தார். பின்னாளில் அவர் சிங்கப்பூர் சென்று சம்பாதித்து செட்டில் ஆகிவிட்டார். !

எங்கள் அப்பத்தாவீட்டு ஐயாவிடம் எனக்கு நினைவு தெரிந்த நாளில் இருந்து பணிபுரிந்த சிலரை மறக்க முடியாது. ஒருவர் அடிக்கடி ராமச்சந்திரா என்று சொல்லிக் கொண்டே இருப்பார். எனக்கு அவர் பெயர் தெரியாததால் அவரை ராமச்சந்திரன் என்றே எண்ணிக்கொண்டிருக்கிறேன். சிறு வயதில் அவர்துணையுடன் ராஜபார்ட் ரங்கதுரை, ஆயிரத்தில் ஒருவன் போன்ற சினிமாவெல்லாம் பார்த்திருக்கிறோம் J
 
என் கல்லூரிப் பருவத்தில் அம்மா வீட்டின் பின் வீதியில் ஒரு வீட்டில் குடி இருந்த லெக்ஷ்மி அம்மா என்பவர் ஐயாவுக்கு சமைத்துக் கொண்டிருந்தார். விறகு அடுப்பில் மிக அருமையாக ருசியாகச் சமைப்பார். இட்லி சட்டியை அடுப்பில் ஏற்றிவிட்டு சில நிமிடங்களில் அம்மியில் மிளகாய்த்துவையல் அரைத்து எடுத்து வந்துவிடுவார். செம ஃபாஸ்ட் & டேஸ்ட். தினமும் கூட மிளகாய்த்துவையல், மிளகாய்ச் சட்னி, டாங்கர் சட்னி என சாப்பிடுவோம் என்றால் பார்த்துக் கொள்ளுங்களேன். 

மறக்கவே முடியாத இன்னொருவர் சோமண்ணன். காரைக்குடியில் அருணாசலா என்றும் சத்யம் என்றும் ஆனந்த் என்றும் பெயர் மாற்றம் பெற்றுள்ள தியேட்டரில் பல வருடம் பணிபுரிந்தவர். கண்நீர் அழுத்த நோயால் கடைக்காலத்தில் பாதிக்கப்பட்டிருந்தார். ஐயாவிடம் பணிபுரிந்தபின் தியேட்டர் வேலைக்குச் சென்றுவிட்டார். ஆனாலும் எப்போது அழைத்தாலும் வந்து வேண்டிய வேலைகளைச் செய்துவிட்டுச் செல்வார். தியேட்டருக்குப் படம் பார்க்கச் சென்றால் சரியான இடத்தில் அமரவைப்பார். டிக்கெட் வேண்டாம் உள்ளே போங்க என அவர் சொன்னாலும் வற்புறுத்தி வாங்குவோம். 

என் திருமணத்துக்கு மெத்தை தலையணைகளில் பஞ்சு அடைத்தது இவர்தான். இதற்கென ஒரு ரூமையே ஒதுக்கி இருந்தார்கள். 21 தலையணைகள், ஐந்து மெத்தைகள். பஞ்சு நிரம்பப் படிந்த கோலத்தில் ஒரு நாள் முழுதும் வேலை செய்து வெளியே வந்த அண்ணன் உருவம் இன்னும் படியாமல் பம்மென்று இருக்கும் தலையணைகளைப் பார்க்கும்போது ஞாபகம் வரும். 

சேலத்தில் இருந்து நாங்கள் வீடுமாற்றும்போது கூட சினிமா தியேட்டர் வேலைகளை முடித்துவிட்டு இரவு கிளம்பிக் காலையில் வந்து உடனே பாக் செய்து வண்டியில் ஏற்றி காரைக்குடி வந்து இறக்கி அடுக்கி வைத்துவிட்டுச் சென்றார். அந்தக் கால மனிதர்களின் உழைப்பும் டெடிகேஷனும் நாம் கற்றுகொள்ளவேண்டியவை.

கண் அழுத்த நோயால் பாதிக்கப்பட்டிருந்தபோது மருத்துவச் செலவு அதிகம் இருப்பதாகக் குறிப்பிட்டார். முடிந்ததைக் கொடுத்தேன். முதுமையின் காரணத்தால் உடல்நிலை சரியில்லாமல் இறந்துவிட்டார். அவர்கள் நம்மீது வைத்திருக்கும் பாசத்துக்கு எல்லாம் அவ்வப்பு நினத்ு மம் ெகிழ்வை விட  நாம் பெரிாக என்ன கைமாறு செய்துவிட முடியும். 

ையும் பாரங்க. :-

இங்கிவரை யாம் பெறவே…


3 கருத்துகள்:

  1. ஆம் சிலரை மறக்க முடியாது நம் வாழ்வின் அங்கமாகி இருப்பார்கள்

    பதிலளிநீக்கு
  2. வலைப்பதிவர் ஒற்றுமை ஓங்கட்டும்.!
    என்றும் நம்முள் வலிமை பெருகட்டும்.!

    பதிலளிநீக்கு

சும்மா ( பத்தி ) உங்க கருத்தையும் பதிவு செய்ங்க :)

Related Posts Plugin for WordPress, Blogger...