எனது 24 நூல்கள்

எனது 24 நூல்கள்
எனது இருபத்து நான்கு நூல்கள்

வெள்ளி, 23 டிசம்பர், 2016

அங்காடித் தெருவில் ஆயர் பிறந்தார். !

”தந்தானைத் துதிப்போமே” என்ற பாடல்தான் நான் முதன் முதலில் கேட்ட கிறிஸ்துவ பாடல். அம்மாவின் தோழி காந்தி டீச்சர் ( நடனம் சார் மனைவி ) கூட்டிச் சென்ற ஒரு பெந்தகொஸ்தே சர்ச்சில் இப்பாடலைப் பாடிக் கொண்டிருந்தார்கள். அது ஒரு ஞாயிறு. காலை திருப்பலியாக இருக்கலாம். அதன் பின் செயிண்ட் ஜோசப் பள்ளியிலும், ஃபாத்திமா காலேஜிலும்  சர்ச்சில் முழந்தாளிட்டு அமர்ந்து ப்ரேயர் செய்ததுண்டு. பிதா சுதன் பரிசுத்த ஆவியின் பெயராலே ஆமென். :) IN THE NAME OF THE FATHER, AND OF THE SON , AND OF THE HOLY SPIRIT, AMEN. !

தினம் நடக்கும் திருப்பலியில் நமக்கும் நன்மை (அப்பம்)  தரமாட்டார்களா என ஏங்கியதுண்டு. ஞானஸ்நானம் செய்யாதவர்கள் நன்மை வாங்கினால் வாயில் ரத்தம் வரும் என்று கிறிஸ்துவத் தோழி சொன்னதைக் கேட்டுப் பயந்ததுண்டு. :)

நற்கருணை வீரன் படித்துப் புளகாங்கிதம் அடைந்ததுண்டு. இந்த உலகம் தப்பிப் பிழைக்குமா என யோசித்ததுண்டு. எல்லா மதங்களும் இஸத்தில் முடிய கிறிஸ்துவம் மட்டும் இன்ஃபினிட்டி என்பது போல கிறிஸ்டியானிட்டி என முடியும் என என் ஆசிரியை ஒருவர் சொன்னதைக் கேட்டு ஆச்சர்யப்பட்டதுண்டு. CHOIR GIRLS  கூடப் பாட முயற்சித்ததுண்டு. :)

அல்லேலூயா அல்லேலூயா..

ஆற்றலாலும் அல்ல அல்ல
சக்தியாலும் அல்ல அல்ல
ஆண்டவரின் ஆவியாலே ஆகுமே
ஆண்டவரின் ஆவியாலே ஆகுமே

1. மண்குடம் பொற்குடம் ஆகுமா? ஆகுமே
குறைகுடம் நிறைகுடம் ஆகுமா? ஆகுமே
தண்ணீரும் திராட்சை ரசம் ஆகுமா? ஆகுமே
திராட்சைரசம் திருரத்தம் ஆகுமா? ஆகுமே

2. செங்கடல் பாதையாய் ஆகுமா? ஆகுமே
செத்தவர் உயிர்த்தெழுதல் ஆகுமா? ஆகுமே
சிங்கமாடு நட்புறவு ஆகுமா? ஆகுமே
சிறை வாழ்வு திருவாழ்வு ஆகுமா? ஆகுமே

கிறிஸ்துமஸுக்கு சில நாட்கள் முன்னான இரவில் கியாஸ் லைட் வெளிச்சத்தில் வீடு வீடாகக் கூட்டமாகப் பாடி வரும் கேரல்ஸை ரசித்ததுண்டு. கிறிஸ்துமஸ்தாத்தா எனக்கு ஏதும் பரிசு வைத்திருப்பாரோ என்றும் யோசித்ததுண்டு.

சென்னை ராயப்பேட்டையில் இருந்தபோது ஷெரில் அம்மா கிறிஸ்துமஸ் அன்று கொடுத்துவிடும் ஹனி கேக்குகள் சுவையானவை. வாழைப்பழ டாஃபி, ஃப்ரூட் கேக், சிக்கன்/மட்டன் பிரியாணியின் சுவை அட்டகாசம்.

ஒரு முறை விஜிபி கோல்டன் பீச் சென்ற போது உலக உருண்டைக்குள் ஏறிப்பார்த்தால் எல்லா நாடுகளிலும் கிறிஸ்துவம் பரவி இருப்பதைப் போட்டிருந்தார்கள். அதற்கு அங்கே வந்த கிறிஸ்துவப் பெண்கள் உலகம் பூரா நம்ம மதம்தான் இருக்குன்னு சொல்றாங்க என்று சந்தோஷப்பட்டுக் கொண்டிருந்தார்கள்.

கிறிஸ்துமஸ் குளிர்காலத்தில் என்றாலும்  கார்ட்ஸ், கிஃப்ட்ஸ், கிறிஸ்துமஸ் மர ( பைன் , ஃபர்) மர அலங்காரங்கள், தொப்பிக்குள்/சாக்ஸுக்குள் பரிசுகள்,கேக்குகள், சாக்லெட்டுகள் , உறவினர் வருகை என ஒவ்வொருவர் இல்லத்திலும் களை கட்டும். 

மன்னார்குடிக்கு எங்கள் வீட்டுக்கு வரும் உறவினர் எல்லாம் சுவாமிமலை, சிக்கல், எட்டுக்குடி, எண்கண், நாகூர், வேளாங்கண்ணி சென்று தரிசித்து வராமல் அவர்கள் ட்ரிப் முடியாது. ஜாதி மதம் கடந்து கடவுளர்களை வணங்கி வளர்ந்திருக்கிறோம். :)

நாங்களும் குடும்பமாக வேளாங்கண்ணி, மைசூர் செயிண்ட் ஃபிலோமினா சர்ச், கோவா செயிண்ட் ஃப்ரான்சிஸ் சர்ச், கோவை புனித அந்தோணியார் சர்ச் சென்றதுண்டு.

வேளாங்கண்ணி சிலுவைப் பாதையில் சிலர் செபம் சொல்லிக்கொண்டு வருவார்கள். 

மங்கள் வார்த்தை செபம்.
அருள் நிறைந்த மரியே வாழ்க!
கர்த்தர் உம்முடனே.
பெண்களுக்குள் ஆசீர்வதிக்கப்பட்டவள் நீரே.
உம்முடைய திருவயிற்றின் கனியாகிய
இயேசுவும் ஆசீர்வதிக்கப்பட்டவரே.
அர்ச்சியசிஷ்ட மரியாயே,
சர்வேசுவரனுடைய மாதாவே,
பாவிகளாய் இருக்கிற எங்களுக்காக
இப்பொழுதும் எங்கள் மரண நேரத்திலும்
வேண்டிக்கொள்ளும். - ஆமென்.
மேய்ப்பரின் வருகையைச் சுட்டி அக்கம் பக்கம் ஒளிரும் நட்சத்திரங்கள்மாடியிலும் ஒளிர்கின்றன குடில்களைச் சுட்டும் விண்மீன்கள்.

இரவில்தான் ஜொலிஜொலிப்பு அதிகம்.

அங்காடி ஒன்றில் கொட்டிலில் ராஜாக்கள் வணங்க யோசேப்பும் மரியாளும் யேசுவும் சுற்றிலும் ஆட்டுக் குட்டிகளும். அங்காடித் தெருவில் ஆயர் பிறந்திருந்தார். !!! மனதை நெகிழ்த்திய காட்சி.<3 p="">

எனக்குக் கிறிஸ்துவத் தோழமைகள் அதிகம். ஆயர் என்றால் கிருஷ்ணனும், கிறிஸ்துவும். கிருஷ்ணன் சிறையில் என்றால் கிறிஸ்து குடிலில் பிறந்தார். எனவே இருவரையும்பிடிக்கும். அது போக மரியாள், யோசேப்பு, மகதலேனா, யோவான் அனைவரையும் ரொம்ப ரொம்பப் பிடிக்கும். 

”நானே சத்தியமும் வழியும் ஜீவனுமாய் இருக்கிறேன்

பாவத்தின் சம்பளம் மரணம்

நான் உன்னைவிட்டு விலகுவதுமில்லை உன்னைக் கைவிடுவதுமில்லை. ”

ஆகிய பைபிள் வாசகங்கள் என் வழித்துணையாக எப்போதும் வருகின்றன. ஆமென். மெர்ரி கிறிஸ்துமஸ் & ஹேப்பி நியூ இயர்.

துபாயில் ஒரு ஷாப்பிங் மாலில்.
MERRY X- MAS & HAPPY NEW YEAR :)


5 கருத்துகள்:

 1. நல்ல பகிர்வு. அனைவருக்கும் கிறிஸ்துமஸ் தின நல்வாழ்த்துகள்.....

  பதிலளிநீக்கு
 2. எம்மதமும் சம்மதமே எல்லோரையும் ஒருப்போல் பார்க்கத் துவங்கினால் கிருஸ்துவுக்கும் கிருஷ்ணனுக்கும் பேரில் மட்டுமல்ல பிறந்த குலத்திலும் ஒற்றுமை இருக்கிறது போல் தெரிகிறது

  பதிலளிநீக்கு
 3. நல்ல அனுபவக் கட்டுரை! எல்லா கடவுளும் ஒன்றே! தாமதமான கிறித்துமஸ் வாழ்த்துகள்!

  பதிலளிநீக்கு
 4. நன்றி வெங்கட் சகோ

  நன்றி பாலா சார். ஆம்

  நன்றி துளசி சகோ & கீத்ஸ் :)

  பதிலளிநீக்கு
 5. வலைப்பதிவர் ஒற்றுமை ஓங்கட்டும்.!
  என்றும் நம்முள் வலிமை பெருகட்டும்.!

  பதிலளிநீக்கு

சும்மா ( பத்தி ) உங்க கருத்தையும் பதிவு செய்ங்க :)

Related Posts Plugin for WordPress, Blogger...