எனது 24 நூல்கள்

எனது 24 நூல்கள்
எனது இருபத்து நான்கு நூல்கள்

திங்கள், 3 செப்டம்பர், 2018

கோலமிட்டு சாந்தமடைவோம்.

ஸைமாட்டிக்ஸ் என்னும் தனிப்பிரிவு அதிர்வுகளுக்கும் கோலங்களுக்கும் உள்ள உறவை விளக்குகிறது.

///ஒரு உலோகத் தகட்டில் சிறிது மணலைத் தூவி அதை அதிர்வு ஏற்படுத்தக் கூடிய ஜெனரேட்டரோடு இணைத்தால் ஒவ்வொரு ஒத்ததிர்வுக்கும் ஏற்ப மணல் துகள்கள் வெவ்வேறு வடிவமைப்புப் பெறுகின்றன. இப்படி அதிர்வானது வெவ்வேறு வடிவமைப்புகளை உருவாக்குவது போல இந்த வடிவமைப்பில் அமைந்த கோலங்களைப் பார்க்கும் மனிதருக்குள் அவை நல்ல அதிர்வுகளை உருவாக்கும். அமைதியான, மகிழ்ச்சியான மனநிலையைக் கொடுக்கும். இதைக் கொண்டு சிக்கலான மனநிலை வியாதி கொண்டவரையும் குணமாக்கப் பயன்படுத்த முடியும் என விஞ்ஞானிகள் கண்டுபிடித்திருக்கிறார்கள். வண்ணங்கள் வடிவங்கள் கொண்டு மனித மனங்களில் மாற்றங்கள் நிகழ்த்த இயலும் என்று நரம்பியல் அறிவியல் நிரூபித்துள்ளது. இதற்கு ஸைமோதெரஃபி என்று பெயர். ////

எனவே கோலமிட்டு சாந்தமடைவோம் அன்புத் தோழியரே. 

இது இருதய கமலம் கோலம். இருதயம் சிறப்பாக ஆரோக்கியமாக செயல்பட இந்தக் கோலத்தைப் பூஜையறையில் போட்டு வணங்கினால் நல்லது.


இது கண் திருஷ்டிக் கோலம். இதைப் போட்டால் கண் திருஷ்டி கழியுமாம்.

திருப்புகழ் முருகன் கோலம்.


ஐஸ்வர்யக் கோலம்.

இதுவும் கண் திருஷ்டி கழியும் கோலமே.  கீழே தாமரை மடல்.


தெண்டாயுதபாணி பூசையின்போது பூசை ஹாலில் மகளிர் மாக்கோலங்கள் போட்டபோது எடுத்தது. ரங்கோலி டிசைன்.

நடுவீட்டுக் கோலம்.

பாப்பாரக் கோலம் புது டிசைனில்.

அனைவரின் கைவண்ணத்திலும் நடுவீட்டுக் கோலம். பொங்கல் இடப் போடப்படும் கோலம்.

வாசலில் அலங்கார வண்ண மயில்.

உள்ளே காவடிச் சிந்து. வேலும் மயிலும் துணை.

பொங்கல் பானைக் கோலங்கள்.

பொங்கல் பாத்திரங்களில் பஞ்சு சுற்றின குச்சியால் கரைத்த கோலமாவைத் தொட்டு இடப்படும் கோலம். மஞ்சள், சந்தனம் , நாமக்கட்டி உரைத்து மஞ்சள் கலர் போடுவார்கள்.

சங்கு ,சக்கரம், மயில், நாமம் எல்லாம் போட்டது நானே :)

பொங்கலோ பொங்கல். உங்களுக்குப் பால் பொங்கிருச்சா. எங்களுக்கு நல்லாப் பொங்கிருச்சு. :)

கரும்பு, வெற்றிலை பாக்கு, பூ, வாழைப்பழம், தேங்காய் மூடிகள், பொங்கல் பானை
டிஸ்கி :- இதையும் பாருங்க.

நல்ல காலம் பிறக்குது. நல்ல கோலம் பிறக்குது.


2 கருத்துகள்:

 1. அழகான கோலங்கள்.
  கோலங்கள் மனம் அமைதி ஆகும் என்பது உண்மை.அலைபாயும் மனதால் கோலம் சரியாக போட முடியாது.
  ஸைமோதெரஃபி தெரிந்து கொண்டேன்.
  நன்றி.

  பதிலளிநீக்கு
 2. நன்றி கோமதி மேம்

  வலைப்பதிவர் ஒற்றுமை ஓங்கட்டும்.!
  என்றும் நம்முள் வலிமை பெருகட்டும் !!

  பதிலளிநீக்கு

சும்மா ( பத்தி ) உங்க கருத்தையும் பதிவு செய்ங்க :)

Related Posts Plugin for WordPress, Blogger...