எனது 24 நூல்கள்

எனது 24 நூல்கள்
எனது இருபத்து நான்கு நூல்கள்
மலைகள் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
மலைகள் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

வியாழன், 26 பிப்ரவரி, 2026

இத்தாலியின் சாலைகள் மலைகள் டனல்கள்

 இத்தாலியின் சாலைகள் மலைகள் டணல்கள் 

யூரோப் டூரின் ஐந்தாம் நாள் மற்றும் ஆறாம் நாள் இத்தாலியில் பயணம் செய்தோம்.

இது மர்மோல்ஸ் மேன் என்ற பிரபலமான மார்பிள் விற்கும் கம்பெனியின் தொழிற்சாலை


வெள்ளி, 24 ஏப்ரல், 2015

சித்திரை.( மலைகள் இதழ் )

குறும்பாட்டைக் கவ்விப்
போடுகிறது புலிவேஷம்.
மயானக் கொள்ளையில்
சப்பரத்தில் அங்காளம்மனும்
பேச்சியம்மனும் பாவாடை ராயனும்.
வியர்வையும் வெண்ணையும் வழிய
திருமாலோடு திரும்புகிறது பல்லாக்கு.
சூர்யப் பிரபையும் சந்திரப் பிரபையும்
வாணவேடிக்கையாய்ப் பொரிகின்றன.
கொடுக்காப் புளியும் குமுட்டிப் பழமும்
குவிந்து கிடக்கிறது சந்தையில்.

திங்கள், 30 மார்ச், 2015

பூதமும் பிசாசுகளும் பேய்க்கதைகளும்:- ( மலைகள் இதழ் )

பூதமும் பிசாசுகளும் பேய்க்கதைகளும்:-
****************************

பக்கத்தில் நெருக்கி அமர்ந்து
பேய்க்கதைகள்
பேசத்துவங்கினார்கள்
இருள் அடர்ந்த இரவில்.


கம்மாய்ப் பேய்,
ஊரணிப் பேய்,
ஆலமரத்துப் பேய்,
அரசமரத்தடிப் பேய்,
மயானப் பேய்,
முச்சந்திப் பேய்,
எக்ஸார்சிஸ்ட் பேய்

வியாழன், 11 டிசம்பர், 2014

மலைகள் எத்தனை வகைகள்.. ( MOUNTAIN DAY )

மரம் செடி கொடிகள் , மற்ற மலை வாழ் உயிரினங்கள் வாழும் இடத்தை நாம் ப்ளாஸ்டிக் மலைகளால் மூடி வருகிறோம். பத்தாதுக்கு ப்ரபஞ்ச ரகசியத்தை அறிகிறோம் என்று மலையைக் குடைந்து ஒரு அணு ஆய்வுக்கூடம் ( நியூட்ரினோ ) கட்ட முயற்சி நடந்து வருது.  மான்களும் முயல்களும், யானைகளும் காட்டெருதுகளும் , புலிகளும் உலவும் மலையையே துண்டு துண்டாக வெட்டி  கூறு போட்டு தின்னத் தெரியும் நமக்கு. நம்மால் உருவாக்க முடியாத பொருள்களில் மலையும் ஒன்று. நிலத் திட்டுகள் நகர்ந்து மலையை உருவாக்குகின்றன. இவை குஜராத்,  ஆந்திரா, கேரளா,  கர்நாடகா, மலேஷியா, ஓம்காரேஷ்வர், (சேலம், பழனி, கோவை), தமிழ்நாட்டில்  நான் பயணம் செய்தபோது புகைப்படம் எடுத்த மலைகள்.

 குவாலியரிலிருந்து போபாலுக்கு வரும் வழியில் விந்தியா சத்புரா மலைகள்.

ஆந்திராவில் ஹைதைக்கு அருகே உள்ள மலைகளை ஒரு ரயில் ப்ரயாணத்தின்போதே  எடுத்தேன்.


செவ்வாய், 21 அக்டோபர், 2014

நுரைத்துப் பெருகும் அருவி. ( மலைகள் இதழ் )


கண்ணோரம் காக்கைக் கால்களாய்ச் சுருங்கி விரிந்து  கிடக்கின்றன காட்டு விருட்சங்கள்..

நுரைத்துக் கிடக்கும் அருவி பெருகி வீழ்கிறது அந்தரங்கம் திறந்த மனமாய். 

தவளைகள் முணுமுணுப்போது குதித்துச் செல்கின்றன கரையோரம்.

மினுமினுப்போடு  தாவித் தாவி நீந்திக் கொண்டிருக்கிறது நதி.

முங்கிக் குளித்துக் கொண்டிருந்தன கற்கள். கரையோரம் கிடந்தவை கால் நனைத்துக் கிடந்தன.

விருட்சங்கள் விருப்பத்தோடு கரை அணைத்துத் தழுவிக் கொடியாய்க் கிடந்தன.

அள்ளி அள்ளிச் சுழற்றிச் சென்றது நீரை நதி.... குழந்தையைக் கொஞ்சுவதாய்.

எச்சில் நுரையால் முத்தமிட்டபடியே சென்றன தாவரப் பாதங்களை.

ஆனந்த அதிர்ச்சியோடு நீர்ப்பாயைப் பரப்பி விட்டது அருவி. 

Related Posts Plugin for WordPress, Blogger...