ஷென்ஜென் விசா
ஜெர்மனிக்குச் செல்வதென்றால் யூரோப் முழுமைக்கும் செல்லுபடியாகக்கூடிய ஷென்ஜென் விசாவை ( யூரோப் செல்வதற்காக) அப்ளை செய்து பெற்றுக்கொள்ள வேண்டும்.
நாங்கள் சென்ற முறை அப்ளை செய்தபோது ஒரு வருடத்துக்கு மட்டும் கொடுத்தார்கள், அதுவும் மூன்று மாதம் மட்டுமே இருக்க இயலும். இந்த முறை அப்ளை செய்தபோது நான்கு ஆண்டுகளுக்கு வழங்கியுள்ளார்கள். அதுவும் ஒரு வருடத்துக்கு ஒரு முறை சென்று மூன்று மாதங்கள் மட்டுமே இருந்துவர இயலும். மேலும் எந்த வெளிநாடு சென்றாலும் மெடிக்கல் இன்சூரன்ஸ் எடுக்க வேண்டும். பத்து வருட பாஸ்போர்ட் நாம் சென்று வரும் வரை காலாவதியாகாமல் இருக்க வேண்டும்.