முன்பு வீட்டில் மிக்ஸி, கிரைண்டர் போன்றவற்றையே கிச்சன் ஹெல்ப்பர்ஸ் என்று நினைத்திருந்தேன். அடுத்து டிஷ் வாஷர் போன்றவையும் ஜூஸர் மிக்ஸர் போன்றவையும் காய்கறியை சிப்ஸ், துருவுதல் போன்றவற்றுக்கு நறுக்குபவையும் வந்தன. இப்போது எண்ணற்றவை புழக்கத்தில் உள்ளன. அவற்றில் ஒன்றிரண்டை உபயோகித்துப் பார்த்தேன். ஆனாலும் அருகாமனை, காய் துருவி, தோல் சீவி போல் வரலை. பசங்களுக்கோ இவைதான் ஆபத்பாந்தவை.