எனது 24 நூல்கள்

எனது 24 நூல்கள்
எனது இருபத்து நான்கு நூல்கள்

திங்கள், 11 நவம்பர், 2019

விஞ்ஞானி ரகுபதி விருது.

காரைக்குடியில் இருக்கும் சிக்ரியுடன் இணைந்து தமிழ்நாடு அறிவியல் இயக்கம் இந்த ஆண்டும் ( 2 வது ஆண்டு ) காரைக்குடி பெரியார் சிலையின் அருகில் இருக்கும் ஹோட்டல் சுபலெக்ஷ்மியில் புத்தகக் கண்காட்சி நடத்தியது.

அந்தக் கண்காட்சியின் கடைசி நாளன்று சிவகங்கை மாவட்ட எழுத்தாளர்களைச் சிறப்பித்து விஞ்ஞானி விருது கொடுத்துக் கௌரவப்படுத்தினார்கள். சிவகங்கை மாவட்ட எழுத்தாளர்களில் ஒருவராக நானும் கௌரவிக்கப்பட்டேன்.


அந்த நிகழ்வின் புகைப்படங்களைப் பகிர்ந்துள்ளேன். அந்நிகழ்வில் எனது ராமு மாமா மனைவி சகுந்தலா மாமியும் எனது அம்மாவும், கணவரும், எனது உறவினர்கள் அழகு சித்தப்பா , சின்ன வெங்கட் மாமா ஆகியோரும் கலந்துகொண்டு சிறப்பித்தார்கள்.

தேவகோட்டை நடனப் பள்ளி ஒன்றின் மாணாக்கியரின் கலை நிகழ்ச்சிகளோடு நிகழ்வு தொடங்கியது. தமிழ்நாடு அறிவியல் கழகத்தினர் வரவேற்க டாக்டர் சுரேந்திரன் அவர்கள் மற்றும் அழகப்பா பல்கலையின் குர்மலேஷ் அவர்கள் சிறப்புரை ஆற்றினார்கள். அதன்பின் எழுத்தாளர்களுக்கு விருது வழங்கப்பட்டது.

இந்நிகழ்வை திரு சங்கரபாண்டியன் அவர்கள் ஒருங்கிணைத்தார்கள். அவருக்கும் சிவகங்கை மாவட்ட எழுத்தாளர்களில் ஒருவராக எனது பெயரைப் பரிந்துரைத்த வினைதீர்த்தான் சார், கார்த்திகேயன் பள்ளி ஆசிரியை தென்றல் சாய் மற்றும் தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் சங்கத்தின் அங்கத்தினர் கலைவாணி ஆகியோருக்கும் மனமார்ந்த நன்றிகள்.

விருதும் பாராட்டுச் சான்றிதழும்.

ஆண் எழுத்தாளர்கள் சார்பாக ஒருவர் நன்றி நவில பெண் எழுத்தாளர்கள் ( நாங்கள் இருவர்தான் - நானும் ஆசிரியை ஜோதி சுந்தரேசன் அவர்களும் ) நான் நன்றி நவின்றேன்.

விஞ்ஞானி ரகுபதி அவர்களின் பெயரால் வழங்கப்பட்ட விருதுக்கு  சிக்ரிக்கும் தமிழ்நாடு அறிவியல் இயக்கத்துக்கும் காரைக்குடி புத்தகத் திருவிழாவுக்கும் அன்பும் நன்றிகளும். 

4 கருத்துகள்:

 1. உங்களுக்கும் பரிசு பெற்ற அனைவருக்கும் வாழ்த்துகள்

  பதிலளிநீக்கு
 2. நன்றி யாழ்பாவண்ணன் சகோ

  நன்றி கௌசி

  நன்றி ஜோதிஜி

  வலைப்பதிவர் ஒற்றுமை ஓங்கட்டும்.!
  என்றும் நம்முள் வலிமை பெருகட்டும் !!

  பதிலளிநீக்கு

சும்மா ( பத்தி ) உங்க கருத்தையும் பதிவு செய்ங்க :)

Related Posts Plugin for WordPress, Blogger...