எனது இருபது நூல்கள்

எனது இருபது நூல்கள்
எனது இருபது நூல்கள்

திங்கள், 12 ஜூலை, 2010

செல்ல நாய்க்குட்டி ...

எஜமானனே..
என் கூடவே இரு..
உனக்காய் பந்து பொறுக்கி வருவேன்..
கால் கவ்வி இழுப்பேன் விளையாட..

உன் கையால் போடும் ரொட்டிக்காகவும்.,
இறைச்சிக்காகவும் பசியுடன்..

உன் உணர்வெல்லாம்..
உணர்கொம்பு இல்லாமலே
உணர்வேன்..கண்பார்த்தே..


உன் வரவில் எவ்வளவு
மகிழ்வெனக்கு..உணர்வாயா..?
உடம்பெல்லாம் சடசடக்கிறது..
குரல் கூட படக்கிறது..

எவ்வளவு நேரம் காத்திருப்பது
இந்த சிலிர்ப்புக்காய்...
சந்தோஷத்தால் காதுகள் விடைக்க..

என் கண்களை உற்றுப்பார்..
நீ காலால் சொல்வதை
நான் வாலால் செய்வேன்..

சங்கிலியில் பிணைத்து
விட்டுவிடாமல் இழுத்துச்செல்..
சுவரொட்டிகளால்
நான் ஈர்க்கப்படாமல்..
கம்பங்களைக் கழிவறையாக்காமல்..

எஜமானனே..
உன் வீட்டில்., உன் வாசலில்
உனக்காக நான்..
என் கூடவே இரு..
உன் செல்ல நாய்க்குட்டி..

28 கருத்துகள்:

 1. நல்லாயிருக்கு அக்கா கவிதை. ஆமாம் உங்க வூருல நாய்க்குட்டி பேசுமா ஹஹா

  பதிலளிநீக்கு
 2. உனக்கென இருப்பேன்..உயிரையும் கொடுப்பேன்...வரிகளையும் சேர்த்திருக்கலாம்..
  கவிதை அருமை...
  வாழ்க வளமுடன்,
  வேலன்.

  பதிலளிநீக்கு
 3. //சங்கிலியில் பிணைத்து
  விட்டுவிடாமல் இழுத்துச்செல்..
  சுவரொட்டிகளால்
  நான் ஈர்க்கப்படாமல்..
  கம்பங்களைக் கழிவறையாக்காமல்..//

  ஹா..ஹா. நல்ல கவிதை

  பதிலளிநீக்கு
 4. //சங்கிலியில் பிணைத்து
  விட்டுவிடாமல் இழுத்துச்செல்..
  சுவரொட்டிகளால்
  நான் ஈர்க்கப்படாமல்..
  கம்பங்களைக் கழிவறையாக்காமல்..//


  நல்லாயிருக்கு அக்கா கவிதை.

  பதிலளிநீக்கு
 5. //சுவரொட்டிகளால்
  நான் ஈர்க்கப்படாமல்..
  கம்பங்களைக் கழிவறையாக்காமல்..

  எஜமானனே..
  உன் வீட்டில்., உன் வாசலில்
  உனக்காக நான்..//அருமையாக இருக்கின்றது அக்கா...வாழ்த்துகள்...

  பதிலளிநீக்கு
 6. ஹையா! என் பேர்ல ஒரு கவிதை.
  என்னை புகழ்ந்து பாடிய கவியே,
  பிடியுங்கள் இந்த வோட் முடிப்பை.

  பதிலளிநீக்கு
 7. \\உன் உணர்வெல்லாம்..
  உணர்கொம்பு இல்லாமலே
  உணர்வேன்..கண்பார்த்தே..\\
  :-)))

  பதிலளிநீக்கு
 8. செல்ல நாய்க்குட்டி எப்படி இருக்கிறது?.. :)) நல்ல கவிதை தேனக்கா.

  பதிலளிநீக்கு
 9. //உனக்காக நான்..
  என் கூடவே இரு..//

  நாய் குட்டி கூட அப்டிதானா தேனக்கா....அருமை அழகு...வாழ்த்துகள் அக்கா...

  பதிலளிநீக்கு
 10. நாய்க்குட்டிக்கு இது புரிஞ்சா ரொம்ப சந்தோசப்படும் :)

  நல்லாயிருக்கு அக்கா.

  பதிலளிநீக்கு
 11. பிறந்த நாள் வாழ்த்துக்கள் அக்கா

  விஜய்

  பதிலளிநீக்கு
 12. மனிதர்களாகிய நம் மீது அன்பு செலுத்தும் அணைத்து உயிர்களின் உணர்வுகளை புரிந்துகொள்ளும் ஆர்வத்தை தூண்டி இருக்கிறது . உங்களின் கவிதை அருமை . பகிர்வுக்கு நன்றி

  பதிலளிநீக்கு
 13. மனிதர்களாகிய நம் மீது அன்பு செலுத்தும் அணைத்து உயிர்களின் உணர்வுகளை புரிந்துகொள்ளும் ஆர்வத்தை தூண்டி இருக்கிறது . உங்களின் கவிதை அருமை . பகிர்வுக்கு நன்றி

  பதிலளிநீக்கு
 14. உன் வரவில் எவ்வளவு
  மகிழ்வெனக்கு..உணர்வாயா.."//

  அடிக்கடி உணர்வேன்... நெகிழ்வான கவிதை. கடவுள் அவற்றை மனிதர்களை நம்பி வாழக் கட்டளை இட்டிருக்கிறார். சமீபத்தில் தினமலரில் ஒரு பெண்மணி தினமும் தெரு நாய்களுக்கு சோறிடுவதை ஒரு கடமையே போல் செய்வதை படத்துடன் செய்தி வெளியிட்டிருந்தார்கள். படம் பார்த்தபோது மனதில் ஏற்பட்ட நெகிழ்வு கவிதை படித்த போதும் வந்தது.

  பதிலளிநீக்கு
 15. இரண்டாம் ஆண்டுத் தொடக்கத்துக்கு பாராட்டுகள்:).

  பதிலளிநீக்கு
 16. ஜூலை 15- இரண்டாவது வருட தொடக்கம்..இந்த முதல் வருடத்தில் புலிப்பாய்ச்சல்..ஆச்சர்யம்..தொடரட்டும் உங்கள் வெற்றிகள்.சிகரத்தை தொட வாழ்த்துக்கள்

  பதிலளிநீக்கு
 17. ஆமா சசி., நன்றி., கதிர்., வேலன்.,ஜெய்., ராம்ஜி.,அமைதிச்சாரல்., அகல்விளக்கு.,குமார்., கீதா., ராஜ்.,இர்ஷாத்., அம்பிகா., ஸ்டார்ஜன்.,கனி., கருணாகரசு,ரோஹிணி.,அக்பர்., வேலு ., விஜய்.,சங்கர்., ஸ்ரீராம்., கார்த்திக்.,பாலா சார்., வெற்றி., செந்தில் குமார்..

  பதிலளிநீக்கு
 18. வலைப்பதிவர் ஒற்றுமை ஓங்கட்டும் !
  என்றும் நம்முள் வலிமை பெருகட்டும்!

  பதிலளிநீக்கு

சும்மா ( பத்தி ) உங்க கருத்தையும் பதிவு செய்ங்க :)

Related Posts Plugin for WordPress, Blogger...