எனது இருபது நூல்கள்

எனது இருபது நூல்கள்
எனது இருபது நூல்கள்

திங்கள், 19 ஜூலை, 2010

கசியும் மின்சாரம்...

பஞ்சாமிர்தமும் தேனுமாய்
வழிகிறது உன் சிரிப்பு..
திகைத்து நிற்கும்
தெய்வச்சிலையாய் நான்..

பூக்களின் இதழ்கள் உண்டு..
இதழ்களில் பூக்கள்
விரியப் பார்த்தது உன்னிடம்தான்..

கன்னக் குழியின் கள்ளச் சிரிப்பு
கைப்பிடி பதித்த .,கற்கள் ஜொலிக்கும் .,
குறுவாளாய் மினுமினுக்க..


ஐஸ்கட்டியும் ..
நெருப்புத்துண்டுமாய்..
ஒரு சேர விழுங்கி.,

உன் சிரிப்புக்கரையான்
அரித்த புத்தகமாய்
என் கண்கள்..

திராவகம் போலும்
இனிப்பாயும் உன் சிரிப்பு...
தெறித்தவுடன் தெரியாமல்
போய்விட்டன என் கண்கள்..

உள்ளம் கிடுகிடுக்க.,
உதடு கிறுகிறுக்க..
உயிர் பறிக்கும்
உன்னதம் இந்த சன்னதம்..

உன் கோடி சூர்யப்
பிரகாசச் சிரிப்பில்
காணாமல் போன
கோளாய் நான்..

ஹை வோல்டேஜ் மின்சாரமாய்..
கசிந்து கொண்டிருந்தது உன் சிரிப்பு..
என் கண்களால் தொட்ட பின்னும்
கருகாமல் உயிர்த்து..
பற்றியெரியும் ஹீலியப் பந்தாய்..

படமெடுத்து ஆடும் நாகமாய்ப்
பரந்து விரிகிறது உன் சிரிப்பு..
கொத்துப் படக் காத்துக்
காதலுடன் நான்...

கொத்தி விடு ..
செத்துவிடுகிறேன்... அல்லது
உயிர்த்தெழுகிறேன்..

25 கருத்துகள்:

 1. ஹை வோல்டேஜ் மின்சாரமாய்..
  கசிந்து கொண்டிருந்தது உன் சிரிப்பு..
  என் கண்களால் தொட்ட பின்னும்
  கருகாமல் உயிர்த்து..
  பற்றியெரியும் ஹீலியப் பந்தாய்..]]


  அருமை ...

  பதிலளிநீக்கு
 2. என் கண்களால் தொட்ட பின்னும்
  கருகாமல் உயிர்த்து..
  பற்றியெரியும் ஹீலியப் பந்தாய்..//


  திரும்ப திரும்ப படித்த வரி..அருமை..

  பதிலளிநீக்கு
 3. ``உள்ளம் கிடுகிடுக்க``
  அருமையான expression.

  பதிலளிநீக்கு
 4. //படமெடுத்து ஆடும் நாகமாய்ப்
  பரந்து விரிகிறது உன் சிரிப்பு..
  கொத்துப் படக் காத்துக்
  காதலுடன் நான்...//

  அருமை..!

  kavithai super..!

  namma valaikkum vanga...

  http://www.vayalaan.blogspot.com

  பதிலளிநீக்கு
 5. கவிதை நன்றாக உள்ளது. வாழ்த்துகள்.

  பதிலளிநீக்கு
 6. கவிதை நன்றாக உள்ளது. வாழ்த்துகள்.

  பதிலளிநீக்கு
 7. பூக்களின் இதழ்கள் உண்டு..
  இதழ்களில் பூக்கள்
  விரியப் பார்த்தது உன்னிடம்தான்..//

  நான் மிகவும் ரசித்த வரிகள்.
  தேனம்மை ஒரு தொடர் பதிவுக்கு அழைத்திருக்கிறேன் அன்புடன். வருகை தரவும்.

  பதிலளிநீக்கு
 8. ஆஹா..எத்தனை ரசனையான கவிதை நான் படித்துக்கொண்டே இருக்கிறேன்...என் தேனக்கா திரட்டிகளில் பகிரவில்லை???

  பதிலளிநீக்கு
 9. ரசித்து எழுதியிருக்கிறீர்கள் ரசிக்கும் படியாக!

  பதிலளிநீக்கு
 10. காதலில் அன்பில் உருகிய கவிதை.திரும்பவும் திரும்பவும் படிக்கத் தூண்டுகிறது தேனக்கா.

  பதிலளிநீக்கு
 11. கவிதை என்றும் அருமை உங்களை போல்.........

  பதிலளிநீக்கு
 12. //பூக்களின் இதழ்கள் உண்டு..
  இதழ்களில் பூக்கள்
  விரியப் பார்த்தது உன்னிடம்தான்..//

  அருமை..!அருமை..!

  பதிலளிநீக்கு
 13. மிக அருமை, பழமையும் புதுமையும் கலந்த அற்புதமான எழுத்து நடை.

  பதிலளிநீக்கு
 14. //ஹை வோல்டேஜ் மின்சாரமாய்..
  கசிந்து கொண்டிருந்தது உன் சிரிப்பு..
  என் கண்களால் தொட்ட பின்னும்
  கருகாமல் உயிர்த்து..
  பற்றியெரியும் ஹீலியப் பந்தாய்..//

  கவிதை வரிகள் அருமை அக்கா.. உங்களை போலவே..

  பதிலளிநீக்கு
 15. கவிப்பஞ்சாமிர்தம் இனிக்கிறது

  விஜய்

  பதிலளிநீக்கு
 16. உன் சிரிப்புக்கரையான்
  அரித்த புத்தகமாய்
  என் கண்கள்..  சும்மா கவிதையை செதிக்கி உள்ளீர்கள்.சகோதரி வாழ்த்துக்கள்

  பதிலளிநீக்கு
 17. பதிவுலகில் நான் எப்படிப்பட்டவர் - தொடர் பதிவு எழுத அழைப்பு வச்சுருக்கேன். முடிஞ்சா எழுதுங்க. சரியா.

  பதிலளிநீக்கு
 18. //கொத்தி விடு ..
  செத்துவிடுகிறேன்... அல்லது
  உயிர்த்தெழுகிறேன்..//

  இதிலிருந்துதான் தொடங்குகிறேன் தேனம்மை.சரியான ஆரம்பம் எனச் சொல்கிறது உள்ளுணர்வு.

  பதிலளிநீக்கு
 19. வழக்கம்போல அருமை,அக்கா (ரொம்ப நாளாச்சு)

  பதிலளிநீக்கு
 20. நன்றீ ஜமால்., இர்ஷாத்.,ஜெய்., கோபிநாத்., குமார்.,மயிலு., கும்மாச்சி., ராஜ்.,(பார்க்கிறேன் ராஜ்)., கனி., அக்பர்., ஹேமா.,குரு., கலாநேசன்., ராம்ஜி.,திவ்யாஹரி., விஜய்., முனியப்பன் சார்.,இளம்தூயவன்., வித்யா..(சரிம்மா).,சாந்தி.,சுந்தர்ஜி., ஃபாத்திமா ஜொஹ்ரா.,(ஆமாம்மா)

  பதிலளிநீக்கு
 21. வலைப்பதிவர் ஒற்றுமை ஓங்கட்டும் !
  என்றும் நம்முள் வலிமை பெருகட்டும்!

  பதிலளிநீக்கு

சும்மா ( பத்தி ) உங்க கருத்தையும் பதிவு செய்ங்க :)

Related Posts Plugin for WordPress, Blogger...