எனது 24 நூல்கள்

எனது 24 நூல்கள்
எனது இருபத்து நான்கு நூல்கள்

வெள்ளி, 22 நவம்பர், 2019

தினமலர் சிறுவர்மலரில் அரும்புகள் கடிதம். பாகம் - 5.

தினமலர் சிறுவர் மலரில் இதுவரை 50 வாசகர் கடிதங்கள் வரை இதிகாச புராணக்கதைகளைப் பாராட்டி வெளியாகி உள்ளன. படித்ததோடு நின்றுவிடாமல் சிரத்தை எடுத்து அதைப் பாராட்டிக் கடிதம் எழுதித் தெரிவித்த வாசகர்களின் அன்புக்கு நன்றி.எறிபத்தரின் கதையைப் பாராட்டிய ஸ்ரீரங்கம் வாசகர் திரு. ப. சரவணன் அவர்களுக்கு நன்றி.இதிகாச புராணக் கதைகள் வாழ்க்கைக்குத் தேவையான பாடத்தைக் கற்றுக் கொடுப்பதாகப் பாராட்டிய புதுகை வாசகி திருமிகு. எஸ். பூஜாஸ்ரீ அவர்களுக்கு நன்றி.


அகம்பாவம் ஆணவம் அழிவைத்தரும். பணிவும் பண்பும்தான் உயர்வைத்தரும் என்று உணர்த்தியதாக இதிகாச புராணக் கதைகளைப் பாராட்டிய ஸ்ரீரங்கம் வாசகி. திருமிகு. எஸ். கவிதா அவர்களுக்கு நன்றி.


நசிகேதனின் கதையைப் பாராட்டிய திருவையாறு வாசகர். திரு. கா. தரணிவேலன் அவர்களுக்கு நன்றி.


புராணக் கதைகள் நல்லெண்ணத்தை வளர்ப்பதாகப் பாராட்டிய ஆடுதுறை வாசகர். திரு. ச. ராம்சுதன் அவர்களுக்கு நன்றி.


நல்ல குணத்தையும் பழக்க வழக்கத்தையும் வளர்ப்பதாக புராணக் கதைகளைப் பாராட்டிய மணச்சநல்லூர் வாசகி திருமிகு. பாலஅபர்ணா அவர்களுக்கு நன்றி.


இதிகாசப் புராணக் கதைகளைப் பாராட்டிய நாலாநல்லூர் வாசகர் திரு. ஏ. பிரசன்னா அவர்களுக்கு நன்றி.


அதிபத்தரின் கதையைப் பாராட்டிய வந்தவாசி வாசகர். திரு. காசிதாசன் அவர்களுக்கு நன்றி.


இதிகாச புராணக் கதைகள் விழிப்புணர்வைத் தருவதாகப் பாராட்டிய தக்கோலம் வாசகர் திரு. மு. பயாசுதீன் அவர்களுக்கு நன்றி.


உன்னத உள்ளம் கொண்ட உறங்காவில்லியின் கதையைப் பாராட்டிய சேலம் வாசகர். திரு. இ. இசக்கி அவர்களுக்கு நன்றி.

இந்தக் கடிதங்களை எல்லாம் வெளியிட்டு ஊக்கம் அளிக்கும் தினமலர் சிறுவர்மலர் இதழுக்கும் ஆசிரியருக்கும் நன்றி. 

2 கருத்துகள்:

 1. வாசகர் கருத்தும்
  வாசகர் வாழ்த்தும்
  படைப்பாளி ஒருவருக்கு
  கிடைக்கின்ற நற்சான்றிதழே!

  பதிலளிநீக்கு
 2. நன்றி யாழ்பாவண்ணன் சகோ

  வலைப்பதிவர் ஒற்றுமை ஓங்கட்டும்.!
  என்றும் நம்முள் வலிமை பெருகட்டும் !!

  பதிலளிநீக்கு

சும்மா ( பத்தி ) உங்க கருத்தையும் பதிவு செய்ங்க :)

Related Posts Plugin for WordPress, Blogger...