ஜெர்மனியில் பாயும் முக்கியமான நதிகளில் ஒன்று ரைன். இது ஐரோப்பா முழுமைக்குமே பாய்கிறது. முன்பே ரைன் டவரில் ( ரொட்டேட்டிங் சர்க்குலர் டவர் ) ஏறி ரைன் நதியின் அழகுக் காட்சிகளை நாம் கண்டு களித்திருக்கிறோம்.
எனது 24 நூல்கள்
எனது இருபத்து நான்கு நூல்கள்
புதன், 19 ஏப்ரல், 2023
ரைன் நதியின் சரக்குக் கப்பல்கள்.
புதன், 6 அக்டோபர், 2021
டூயிஸ்பர்க்கில் நடைப்பயிற்சி. HEALTHY LIVING AT DUISBURG
ஜெர்மனியின் டூயிஸ்பர்க் நகரில் இரு மாதங்கள் மகனோடு வசித்து விட்டு வந்தோம். மிக அருமையான நகரம். ஜெர்மனியின் மேற்கில் ரைன் நதிக்கரையின் வடக்கில் அமைந்த நகரம். ஜெர்மனியின் பெரிய நகரங்களில் 15 ஆவது இடம் வகிக்கிறது. ரைன், ரூர் என இரு நதிகள் பாய்கின்றன. ரைன் நதிக்கரையோரம் இண்டஸ்ட்ரியல் ஏரியா. இரும்பு, எஃகு, ரசாயனத் தொழிற்சாலைகள் அதிகம். இங்கே நதி வழி சரக்குப் போக்குவரத்து முக்கியமானது. இப்போது இந்தத் தொழிற்சாலைகளில் பாதிக்குமேல் செயல்படாமல் பூட்டிக் கிடக்கின்றன.
இரண்டாம் உலகப்போரில் பிரிட்டிஷ் படைகளால் அதிகம் குண்டு போடப்பட்டு அழிக்கப்பட்ட ஊர்தான் டூயிஸ்பர்க். காரணம் இங்கே உள்ள தொழிற்சாலைகளும் அதனால் நாட்டின் முன்னேற்றமும் வசதிகளும் அவர்களின் கண்ணை உறுத்தியதுதான். இருந்தும் தனது 1100 வது பிறந்தநாளை 1983 இல் கொண்டாடியதாம் சரித்திரப் புகழ் வாய்ந்த டூயிஸ்பர்க். ( இதற்கு அரண்போல் மதிற்சுவரின் எச்சங்கள் எல்லாம் இருக்கு !)
பேருந்துப் போக்குவரத்து சாலையின் இரு மருங்கும். நடுவில் எஸ்பான், டி பான், ரைன் பான் என ரயில்வே சிஸ்டம். ட்ராம் வண்டிகளும் ஓடுகின்றன. ஹாபன்ஹாஃப் என்பது ரயில்வே ஜங்க்ஷன். ஆட்டோ பான் என்பது சாலைப் பேருந்துப் போக்குவரத்து.
ஒரே நாள் இரவிலேயே ட்ராக் ரிப்பேர் எல்லாம் செய்து ட்ராக்கையே மாற்றி விடும் கில்லாடிகள் ஜெர்மானியர்கள். முதல்நாள் ஒரு ட்ராக்கில் பயணித்தோம். அர்த்த ராத்திரியில் இன்னொரு ட்ராக்குக்கு தண்டவாளங்களை இணைத்து விட்டார்கள்!
சரி வாங்க ஒரு நாளைக்கு ஒரு ரோடு என நடந்து உலா வந்து ரசிப்போம்.
நாம் செல்லும் வழியில்தான் டூயிஸ்பர்க்கின் உள் துறைமுகம், ரயில் போக்குவரத்துப் பாலம், லைப்ரரி, ஜிம் செண்டர், ஓல்ட் ஏஜ் ஹோம், கடைத்தெருக்கள், வீடுகள், அலுவலகங்கள், ரயில் நிலையங்கள், ஷாப்பிங் மால்கள், சர்ச்சுகள், தொழிற்சாலைகள், தாவரவியல் பூங்கா ஆகியன உள்ளன.
டூயிஸ்பர்க் ரூஹ்ராட்டர்ஹாஃபன் என்பது உலகிலேயே மிகப் பெரிய உள்நாட்டுத் துறைமுகம். இதில் 100 கார்களுக்குமேல் ஏற்றிச் செல்லக்கூடிய சரக்குக் கப்பல்களை எல்லாம் பார்த்தோம். அது எல்லாம் இன்னொரு இடுகையில். இப்போது நடக்க ஆரம்பிப்போம்.
செவ்வாய், 19 நவம்பர், 2019
டூயிஸ்பர்க்கில் ரோடு துடைக்கும் ட்ரக்ஸ்.
விடிகாலையில் அதாவது ஆறு மணிக்கே ரோட்டில் மெல்லிசாக தினமும் கடகடவென சத்தம் கேட்கும். கார்பேஜ் கலெக்ஷன் மற்றும் ரோடு துடைக்கத்தான் இந்த மினி சத்தம் எனக் கண்டு கொள்ள நாளாயிற்று.
ஒருநாள் கிச்சன் கதவைத் திறந்து பார்த்தால் தூரத்தில் குட்டியானை போன ஒன்று தும்பிக்கையைத் தரையில் தடவிக் கொண்டு தட தடவெனத் தாறுமாறாக ஓடி வந்தது.
சுவாரசியம் அதிகப்பட அது என்ன என்று நின்று நிதானித்துக் கவனித்தேன். சீராக இல்லாமல் அதகளம் செய்யும் யானை போல் ரோடு முழுவதும் குறுக்கும் நெடுக்கும் எட்டுப் போட்டுக் கொண்டிருந்தது அது. நீங்களே புகைப்படங்களில் அதன் அதகளத்தைப் பாருங்களேன்.
குப்பை மட்டுமில்லாமல் சாலையில் ஒட்டும் பிசுக்குகளையும் நீக்குகிறது இது. ஆர்கானிக் வேஸ்ட், இன்னார்கானிக் வேஸ்ட் ப்ளாஸ்டிக் என இது தரம் பிரித்துச் சேர்த்தும் விடுமாம். ரோட்டில் குண்டூசி கூடக் கிடக்க முடியாது . அப்படி சுத்தம் செய்கிறது.
குளிர்காலத்தில் பயன்படுவது மேன் ட்ரக் மெஷின்ஸ். அது கொட்டிக் கிடக்கும் பனியை எல்லாம் வாரி வழித்து எறிந்து விடுமாம். வீடுகளின் அமைப்பையே பாருங்களேன். கூம்பு வடிவக் கூரைகள். அதிலும் ஓடுகள் பதித்தது. இந்த அமைப்பினால்தான் கூரைகளில் படியும் பனி அனைத்தும் கீழே வழியும். சூரியனைக் கண்டதும் உருகி இறங்கவும் வசதி. ஆனால் ரோட்டில் விழும் பனியை இந்த மாதிரி ட்ரக்ஸ் மூலம்தான் சுத்தம் செய்ய முடியும். அதன் பெயர்தான் மேன் ட்ரக் மெஷின்ஸ்.
பாரம்பரிய ஓடுகள் பதிக்கும் முறை அனைத்துக் கட்டிடங்களிலும் உண்டு. இப்படி வைத்தால்தான் அரசாங்கம் வீடு கட்டும் ப்ளானையே அப்ரூவ் செய்யும். இல்லாட்டி பனித்தங்கி தண்ணியா உருகித் தேங்கி வீடே நாஸ்தியாகிரும்ல.
தூரத்தில் கடகடவென ஓடிவந்து எங்கோ கடைப்பக்கம் திரும்புகிறது இந்த ட்ரக்.
புதன், 21 ஆகஸ்ட், 2019
குட்டீஸ்களும் வாசிக்கும் டூயிஸ்பர்க் சிட்டி லைப்ரரி. IM SCHLENK STADTBIBLIOTHEK.
வந்த தினத்தில் இருந்து பல்வேறு ஆச்சர்யங்களை அளித்துக் கொண்டிருக்கும் ஜெர்மனியில் இந்த லைப்ரரியும் புத்தகப் பராமரிப்பும் இங்கே வருகை தந்து வாசித்த குட்டீஸ்களும் பிரமிப்பூட்டியதால் உங்களிடம் பகிர்ந்து கொள்கிறேன். சிறு வயதில் இருந்தே வாசிக்கும் பழக்கத்தை இளஞ்சிறார்களிடம் விதைக்கும் ஜெர்மானியர்களின் திறம் வியக்கத்தக்கது.
வாசிப்பை ஊக்குவிக்க புக் கிளப், ஆசிரியர்கள் மூலம் புத்தகப் பரிந்துரைகள், புக் பைக் மூலம் மக்களிடம் புத்தகங்களை கொண்டு சேர்த்தல், குழந்தைகளை நூலகத்துக்கு அழைத்து வந்து வாசிக்கச் செய்தல் ஆகியவற்றோடு சர்வதேச குழந்தைகள் புத்தகக் கண்காட்சியும் நடைபெறுகிறது. சில வருடாந்திரத் திட்டங்களும் வாசிப்புக்கு அறிமுகப்படுத்தப்படுகின்றன. IKIBU -
IKiBu - Internationale Kinderbuchausstellung in Duisburg
ட்ராம், ட்ரெயின் ஆகியவற்றில் கூட புத்தகங்களுடன் பயணிக்கும் மக்களை நீங்கள் காண முடியும்.
வருடத்துக்கு 15 யூரோ செலுத்துவதன் மூலம் இந்த நூலகத்தில் அங்கத்தினராகலாம். பதினைந்து நாட்களுக்கு ஒரு முறை சென்று புத்தகங்களை மாற்றிக் கொள்ளலாம்.
மிக அழகான இந்த லைப்ரரியை ஒரு சுற்றுச் சுற்றி வரலாம் வாங்க. அநேகமா எல்லா புக்கின் தலைப்பையும் படிக்க முடியும் . ஏன்னா ஓரளவு ஜெர்மனும் ஆங்கிலம் போல் இருப்பதால் ஆங்கிலத்தில்தான் இருக்கும். ஆனா புரியாது :) இங்கே ஆங்கிலப் புத்தகங்களே கிடையாது என்பதை அந்த ஜெர்மனி நூலகர் பெண்மணி சொன்னார்.


