எனது 24 நூல்கள்

எனது 24 நூல்கள்
எனது இருபத்து நான்கு நூல்கள்
SUSPENSION MONO RAIL லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
SUSPENSION MONO RAIL லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

வெள்ளி, 9 அக்டோபர், 2020

வூபர்டால் வோஹ்விங்கல் சஸ்பென்ஷன் மோனோரயில்

 தொங்கு தோட்டம் கேள்விப்பட்டிருப்பீங்க. தொங்கும் ரயில் கேள்விப்பட்டிருக்கீங்களா. வாங்க பார்ப்போம். ஜெர்மனியின் வூபர்டால் வோஹ்விங்கல் சஸ்பென்ஷன் மோனோ ரயில்தான் அது. 

இரும்பு விளைச்சல் அதிகம் (!) என்பதால் ஜெர்மனியில் நூற்றைம்பது ஆண்டுகளுக்கு முன்பே மாங்ஸ்டன் ரயில்வே பாலம், வூபர்டால் சஸ்பென்ஷன் ரயில் என இரும்பைக் கொட்டி இருப்புப் பாதையை மேலே கீழேன்னு கட்டி ரயில் ஓட்டி இருக்காங்க.

பதினெட்டாம் நூற்றாண்டில் அவங்க தொங்கு ரயில் என்னும் புதிய முயற்சியில் இருந்தபோது இங்கே நாம் அப்போதான் போர்பந்தரில் இருந்து தானே வரை இருப்புப்பாதை அமைச்சு முதன் முதலா ரயில் ஓட்டி இருக்கோம். 



கௌசியும் அவர் கணவரும் அவர்கள் வீட்டில் விருந்தளித்தபின் மாங்க்ஸ்டன் ரயில்வே பாலம், ஷோலாஸ் கேஸில் எல்லாம் காண்பிச்ச பின்னாடி இங்கே கொண்டு வந்து இறக்கி விட்டாங்க. 

ஞாயிறு, 17 நவம்பர், 2019

பஸ், ட்ராம், சிட்டி ட்ரெயின் , மெட்ரோ, மோனோ ரயில்.

ஜெர்மனி சென்றதும் அங்கே உலாவந்த பஸ், ட்ராம், மெட்ரோ மற்றும் சிட்டி, ஸ்டேட் ட்ரெயின்களில் பயணித்தோம் . சாலையின் நடுவில் ட்ராம் ட்ராக் அமைக்கப்பட்டிருக்கிறது.  இருபுறமும் பேருந்துத் தடம். வித்யாசமான அமைப்பு !. புல்லட் ட்ரெயின்கள் கூட ஓடுவதாகச் சொல்கிறார்கள். பொதுவாகவே மணிக்கு 200 மைல் வேகத்தில் பறக்கும் ட்ரெயின்கள் இவை. 

ரயில் டிக்கட்டை பேரம் பேசி வாங்கமுடியாது என்று ஜோக்கெல்லாம் இங்கேதான் செல்லுபடியாகும். ஆனால் ஜெர்மனியிலும் யூரோப் முழுமையும் டிக்கெட் பாஸ் வாங்கலாம். மேலும் முன்பே பாஸ் வாங்கிவிட்டு மூன்று மாதங்களுக்கு ஸ்டேட் விட்டு ஸ்டேட் குறைந்த விலையில் முன்பே டிக்கெட் புக் செய்து சென்று வரும் வசதியும் உண்டு. 

லீவு நாளில் கார்டுக்கு ரெண்டு பேர் ஏழு மணிக்கு மேல் சிட்டிக்குள் எங்கு வேண்டுமானாலும் சென்று வரலாம். ஃப்ளைட் போல் முன்பே புக் செய்தால் ரயில் டிக்கெட் ஃபேர் குறைவு.

நம்மூரு போல இங்கேயும் பஸ் ட்ரெயின் பாஸ் உண்டு. பஸ்ஸிலும் ட்ரெயினிலும் எல்லாரும் டிக்கெட்டை ஸ்வைப் செய்தபின்தான் போய் அமரவேண்டும். இல்லாவிட்டால் டிக்கெட் செக்கிங் வரும்போது பிரச்சனையாகிவிடும்.

தனித்தனி ட்ராம் ஸ்டாப் , பஸ் ஸ்டேஷன்களில் பரவாயில்லை.  ஆனால் சிட்டி, ஸ்டேட் ஸ்டேஷன்களில் ட்ரயின் எங்கே சென்று எங்கிருந்து வருகிறது என்பதைக் கண்டு கொள்ள கொஞ்சம் மொழிப்பயிற்சியும் ஞானதிருஷ்டியும் அதீத புத்திசாலித்தனமும் வேண்டும். இல்லாவிட்டால் எதிர்திசையில் எங்கேயோ போய் விடுவோம் அர்த்த ராத்திரியில்.

இங்கே பயில வரும் மாணவர்களுக்கு ஃப்ரீ பாஸ் உண்டு. தினமும் மாலை ஏழுமணியிலிருந்தும் வார இறுதியில் இரண்டு நாட்களும் சிட்டிக்குள் ட்ராம், பஸ், ட்ரயினில் சென்று வர நூறு யூரோ டிக்கெட் பாஸ் யதேஷ்டம். இதிலேயே இன்னும் ஒருவரையும் இதே நேரத்தில் மட்டுமே கூட்டிச் செல்லலாம்.

காலை பத்துமணிக்கு மேல் செல்லவேண்டும் என்றால் பணம் கூடுதலாகக் கட்ட வேண்டும்.

இது டூயிஸ்பர்க்கில் வரும் ட்ராம்.
Related Posts Plugin for WordPress, Blogger...