எனது 24 நூல்கள்

எனது 24 நூல்கள்
எனது இருபத்து நான்கு நூல்கள்

வியாழன், 22 அக்டோபர், 2020

கொலோன் கதீட்ரலுக்குள் கல்லறைச்சிற்பங்களும் ஜெரோ சிலுவையும்.

 பன்னிரெண்டாம் நூற்றாண்டில் கோதிக் கட்டிடக்கலை பாணியைப் பின்பற்றிக் கட்ட ஆரம்பிக்கப்பட்ட கொலோன் சர்ச் (ஜெர்மனி ) பத்தொன்பதாம் நூற்றாண்டில்தான் ( 1880 ) பூர்த்தி செய்யப்பட்டது. ரோமன் கத்தோலிக்க சபையினரால் நிர்வகிக்கப்படும் இந்தக் கதீட்ரலில் சில புனிதர்களின் உடல்கள் உள்ளேயே வைக்கப்பட்டு அதன்மேல் அவர்களின் சிற்பங்களும் வடிக்கப்பட்டுள்ளன. 

வடக்கு தெற்கு என்று இரண்டு கோபுரங்கள் கொண்ட இந்த சர்ச் பதினெட்டாம் நூற்றாண்டில் பூர்த்திசெய்யப்பட்டபோது உலகிலேயே உயரமான கோபுரமாக இருந்ததாம் !. 

இரண்டாம் உலகப் போரின்போது குண்டு வீழ்ந்தும் இது அழியவில்லையாம். அவ்வளவு ஸ்ட்ராங். 

இந்த கதீட்ரலின் விஸ்தீரணத்தைப் பற்றியும் உயரத்தைப் பற்றியும் கூகுளில் படித்தால் தலை சுற்றி விடும். அவ்வளவு பெரிசு. 

சிலுவையிலிருந்து இறக்கப்பட்ட கிறிஸ்துவின் உடல்.

சிலுவைப் பாதை.. ?


சிலுவையைச் சுமந்து செல்லுதல்..
இது மூன்று அரசர்கள் சிற்பமென நினைக்கிறேன். 
குழந்தை யேசு அன்னை மரியாள். 
இந்த கதீட்ரல் உருவாகக் காரணமாக இருந்த ஆர்ச்பிஷப் பலரின் உருவங்களையும் சிலைகளாகச் செதுக்கி இருக்கிறார்கள். அதுபோகப் புனிதர்களின் கல்லறைகளியும் உள்ளே நிறுவி அவர்களின் உருவச்சிலைகளையும் செதுக்கி இருக்கிறார்கள். 

13 ஆம் நூற்றாண்டில் வாழ்ந்த ஜூலிச்சின் ஆர்ச்பிஷப் வல்ரம். 

இந்தப் புனிதரின் பக்கவாட்டில் தெரிவதுதான் லேடி சேப்பல். 1442 இல் ஸ்டீஃபன் லோச்னர் என்பவர் வரைந்த ஓவியம் ஒன்று இங்கே தெரிகிறது. 

இவரும் ஒரு புனிதர். பெயர்தான் ஜெர்மனில் இருப்பதால் தெரியவில்லை. 

ஆர்ச்பிஷப் வில்லியம் , இவர்கள் பெயரை எல்லாம் இமேஜை வைத்து கூகுள் செய்து கண்டுபிடித்தேன். 

ஆர்ச்பிஷப் வில்ஹெல்ம் என் பின்னே தெரிவதுதான் ஜெரோ சிலுவை. இது 965 - 970 வடிவமைக்கப்பட்டது. இன்றளவும் இருக்கும் மிகப் புராதனமான சிலுவைகளில் முக்கியமான ஒன்று. 


பதினோரு நூற்றாண்டுகள் கடந்தது இந்த ஜெரோ சிலுவை. இந்த கதீட்ரலைக் கட்டும் பணியும் பத்தாம் நூற்றாண்டிலேயே ஆரம்பித்துவிட்டதுபோல் தெரிகிறது. பதிமூன்றாம் நூற்றாண்டில் விட்டுப் போனது ஏழு நூற்றாண்டுகள் கழித்துப் பத்தொன்பதாம் நூற்றாண்டில்தான் முடிந்திருக்கிறது.  

இந்தக் கதீட்ரலில் புனிதர்களின் கல்லறைச் சிற்பங்கள், ஜெரோ சிலுவை போக இந்தக்கதீட்ரலே சிலுவை அமைப்பில் ( லத்தின் க்ராஸ் என்கிறார்கள் ) அமைந்திருப்பதும் இதன் சிறப்புகளில் ஒன்று. இதை சுற்றிக் காண்பிக்கவென்றே தனியாக டூர் கைடுகள் உண்டு என்றால் இது எவ்வளவு பெரிய கதீட்ரல் என்று வியந்தோம். 


முழுசாக எடுக்க வேண்டும் என்றால் இன்னும் அரை கிலோமீட்டர் தூரம் பின்னே போக வேண்டும். 
இது நம் வடநாட்டுக் கோயில்களில் தீபஸ்தம்பம் இருப்பது போல் கதீட்ரலின் எதிரில் இருந்த அமைப்பு. 

இன்னும் இந்த சர்ச்சின் கட்டிடக்கலை, முகப்புச் சிற்பங்கள், மார்பிள் & கிரானைட் சிற்பத் தொகுதிகள், (புனிதர்கள் மட்டுமல்ல வித்யாசமான உருவங்களும் பொறிக்கப்பட்டிருப்பது), ஜன்னல் கண்ணாடிகளில் வரலாறு சொல்லும் வண்ண ஓவியங்கள், ஸ்வாலோஸ் நெஸ்ட் எனப்படும் மிகப்பெரும் இசைக்கருவி அனைத்தையும் இன்னும் ஒரு இடுகையில் சொல்வேன்.   

3 கருத்துகள்:

 1. புருவங்களை உயர்த்த வைத்த அதிசயம். வட நாட்டுக்கோயிலின் தீபஸ்தம்போல..வித்தியாசமாக இருந்தது.

  பதிலளிநீக்கு
 2. ஆம் ஜம்பு சார்.

  நன்றி டிடி சகோ

  வலைப்பதிவர் ஒற்றுமை ஓங்கட்டும் !
  என்றும் நம்முள் வலிமை பெருகட்டும் !!

  பதிலளிநீக்கு

சும்மா ( பத்தி ) உங்க கருத்தையும் பதிவு செய்ங்க :)

Related Posts Plugin for WordPress, Blogger...