எனது 24 நூல்கள்

எனது 24 நூல்கள்
எனது இருபத்து நான்கு நூல்கள்

புதன், 21 அக்டோபர், 2020

சுவடு மின்னிதழ் – ஒரு பார்வை.

சுவடு மின்னிதழ் – ஒரு பார்வை.


சுவடு மின்னிதழ்

அண்ணாவின் வார்த்தைகளை மேற்கோள் காட்டும் தலையங்கம் நல்ல சாட்டையடி.. இரும்புப் பட்டாம்பூச்சி, கவிஜி, பாரியன்பன் ஆகியோரின்  கவிதைகள் இடம்பெற்றுள்ளன.

கருநீல நிறத்துக்கு அவுன்ஸ் வீதம் (1:3) தங்கம் கொடுத்து வாங்கினார்கள் பதினெட்டாம் நூற்றாண்டில் என ஓவியர் சிவா தரும் தகவல்கள் வித்யாசம். பவா சமத்துவத்தின் மனிதர்கள் எங்கும் இருக்கிறார்கள் நெகிழ வைத்தது. லதாவின் உளவியல் கட்டுரை புதுமையாக சிந்திக்க வைத்தது.

குழந்தைகளின் ஓவியங்களும் உண்டு. மேகாலயா பற்றிய பயணக் கட்டுரையும் உண்டு. சரிதா ஜோவின் சிறுவர் தொடர்கதை ஒன்றும் உண்டு. பூங்கொடி பாலமுருகனின் மார்பகப் புற்றுபற்றிய விழிப்புணர்வும் உண்டு.

நிசப்தம் படம் பற்றி நடுநிலையான விமர்சனம் அளித்திருக்கிறார் மது ராஜேந்திரன். பிரியா மனோகரனின்அரசியல் களத்தில் அவமானப்படுத்தப்படும் பெண்கள்சிறந்த ஆய்வு. ரமாதேவி இரத்தினசாமியின் பெண்குழந்தைகளின் கனவு மெய்ப்படட்டும் அனைவருமே படிக்க வேண்டிய ஒன்று.

சாதாரணனின் நிலம் நிலமறிய ஆவல் இலக்கியப் பரிமாறலோடு இயற்கை பற்றிய விழிப்புணர்வைக் கொடுத்தது. உமாவின் அரசுப் பள்ளிகளில் காணாமல்போன தமிழ்க் கல்வி பற்றிய கட்டுரை அதிர்ச்சி ரிப்போர்ட். தமிழ் வாழ்வதற்கான சாத்யக்கூறு அங்கேயும் குறைந்துவிட்டதா ?

பாவெல் சக்தியின் நிழல் வீரர்கள் பற்றிய விமர்சனம் நம் எதிரேயே நடக்கும் கண் துடைப்பு வேலைகளையும் நிழல் செயல்களையும் வெளிச்சமிட்டுக் காட்டியது. 800 படம் பற்றிய கட்டுரையும் வெகு காட்டம்.

முனைவர் தி. நெடுஞ்செழியனின் பெரியார் பக்கம் விழிப்புணர்வு தருகிறது. டாக்டர் விமுணா மூர்த்தியின் மருத்துவக் கல்வி பற்றிய நேர்காணல் இட ஒதுக்கீடு, அதனால் பயன் பெறும் அந்நிய மாநிலத்தார், நுழைவுத் தேர்வு , கல்விக் கொள்கை பற்றி விரிவாக அறியத்தந்தது.

கபிலர் குன்று வரலாறு பாரிக்குப் பின் அங்கவை சங்கவையின் வாழ்வைச் சொல்லியது. மொத்தத்தில் பத்து இதழ்களிலேயே சுவடு நல்ல தடம் பதித்திருக்கிறது. அருமையான இதழ்

யுவைடிஸ்என்ற எனது சிறுகதை ஒன்றும் (அக்டோபர் 15 – 31 , 2020 ) இந்த இதழில் இடம்பெற்றுள்ளது J  நன்றி சுவடு & நல்லு சார்.

நூலின் பெயர்சுவடு
நிர்வாக ஆசிரியர் :- அகமது மன்சூர்
இதழாசிரியர் :- நல்லு இரா.லிங்கம்.
மாதமிருமுறை இலக்கிய மின் இதழ்

3 கருத்துகள்:

  1. வினையாற்றும் தன்மை குறைந்து வரும் சூழலில் இதழ் குறித்து பதிவு செய்திருப்பது வரவேற்கத்தக்கது. இதழ் தொடர்பு முகவரி பதிவு செய்தியிருந்தால் இன்னும் சிறப்பாக இருந்திருக்கும்.

    பதிலளிநீக்கு
  2. நன்றி துரை அறிவழகன் சார். முகவரி பதிய முயல்கிறேன். வாட்ஸப்பில் இருக்கு. மெசேஜை அழிச்சிட்டா டவுண்ட்லோட் டாகுமெண்டை எப்படிப் பார்ப்பதுன்னு தெரியல.

    நன்றி ஜம்பு சார்.

    வலைப்பதிவர் ஒற்றுமை ஓங்கட்டும் !
    என்றும் நம்முள் வலிமை பெருகட்டும் !!

    பதிலளிநீக்கு

சும்மா ( பத்தி ) உங்க கருத்தையும் பதிவு செய்ங்க :)

Related Posts Plugin for WordPress, Blogger...