எனது 24 நூல்கள்

எனது 24 நூல்கள்
எனது இருபத்து நான்கு நூல்கள்

வெள்ளி, 23 அக்டோபர், 2020

ஃபாஸ்ட் ஃபார்வேர்ட் - FAST FORWARD - ஒரு பார்வை.

 ஃபாஸ்ட் ஃபார்வேர்ட் - ஒரு பார்வை. 

திருமணமானதும் கணவருடன் பார்த்த படங்களில் இதுவும் ஒன்று. 1985 களில் வெளிவந்தது. 1986 இல் கோவையில் பார்த்தோம். கேஜியா அர்ச்சனா தர்சனாவா மாருதியா, செண்ட்ரல் தியேட்டரா தெரியவில்லை. ஆனால் ஆரம்பம் முதல் முடிவு வரை ஒரே டான்ஸ் டான்ஸ் டான்ஸ்தான். பேருக்கேற்றாற்போல் ஃபாஸ்ட் ஃபார்வேர்ட் டான்ஸ். இதன்பின் நான் பல்லாண்டு காலம் கழித்து ரசித்த நடனப் படம் டேக் தெ லீட். ஆந்தானியோ பாந்தாரஸ் நடித்தது. நடிப்பு ராட்சசன். 

பாட்டுப் போட்டியுடன் முடியும் படங்கள் நடனப் போட்டியில் முடியும் படங்கள் எல்லாம் இதைப் பார்த்தபின்தான் எடுக்கப்பட்டிருக்க வேண்டும். தங்களை நிலை நிறுத்திக்கொள்ள ஹோட்டலில், தெருவில், அரங்கில் என எங்கு பார்த்தாலும் நிலை கொள்ளாமல் போட்டி நடனங்கள் ஆடிக்கொண்டிருப்பார்கள் படம் முழுதும். 

இந்த டான்ஸ் பேஸ்ட் படத்தை இயக்கியவர் சிட்னி போய்டியர். ஓஹியோவிலிருந்து தேசிய நடனப் போட்டியில் பங்கேற்க 8 பேர் ( இரண்டு இளைஞர்கள் - மேட், மைக்கேல் , 6 யுவதிகள் - ஜூன், டெபி, ரீடா, ஃப்ரான்ஸைன், மெரில், வலேரி) கொண்ட ஒரு குழு நியூயார்க் வர்றாங்க. அவங்க சந்திக்கும் சவால்கள்தான் கதை. 

தேசிய நடனப்போட்டியில் பங்கேற்க இவர்களுக்கு வாய்ப்பு ஏற்படுத்தித் தர்றதா சொல்றாரு (சபோல் என்னும்)  நிர்வாகி . அங்கே வந்தா அவர் இறந்துட்ட செய்தி கிடைக்குது அவங்களுக்கு. மேலும் போட்டி 4 வாரத்துக்குத் தள்ளி வைக்கப்படுது.  தற்போதைய நிர்வாகியான க்ளெம் ஃப்ரைட்கின் அவங்களுக்கு 3 வாரம் முடிஞ்சதும்  5 நிமிஷம் மட்டும் ஆடிஷனுக்கு வாய்ப்பளிப்பதாகவும் நல்லா செய்தா போட்டில கலந்துக்கலாம்னும் சொல்றார். 

வந்தது வந்தாச்சு. பர்ஃபார்ம் பண்ணியே ஆகணும். கைலயோ சொற்பக்காசுதான் இருக்கு. ஏதோ ஒரு அழுக்கான வீட்டை அவங்க வாடகைக்கு எடுத்து சுத்தம் செய்யும் காட்சி அழகா இருக்கும். எல்லாத்துக்கும் பெயிண்ட் அடிச்சு, டாய்லெட் எல்லாம் கழுவி வீட்டைப் புதுசா மாத்துவாங்க. கைப்பணம் அத்தனையும் அதிலேயே கரைஞ்சிடுறதால நாலு வாரத்துக்கு சாப்பாட்டுக்குப் பணம் இல்லை. 

எனவே ஒரு ரெஸ்டாரெண்ட்ல நைஸா புகுந்து இவங்க டேப்ரெக்கார்டர போட்டு டான்ஸ் ஆடுவாங்க. அத மொதல்ல அந்த ஹோட்டல்காரங்க எதிர்த்தாலும் மக்கள் விரும்பி ரசிக்கிறதால விட்ருவாங்க. கைல கொஞ்சம் காசும் புழங்க ஆரம்பிச்சிடுது. இப்பிடியே ரெண்டு வாரத்துக்கு ஒவ்வொரு ரெஸ்டாரெண்டா ஆடிக் காசு சம்பாதிக்கிறாங்க. 

தெ ஸூ அப்பிடிங்கற புகழ்வாய்ந்த நடனக் குழுவோட ஆடும்போதுதான் மைக்கேலுக்கு தன்னோட டீம்ல அப்பிடி புது வகையான நடன அசைவுகள் யாருமே செய்றதில்லைன்னு தெரிய வருது. (அதுல ஆடுற ஆண் பெண் எல்லாரும் செமயா ஆடுவாங்க . கீழே வீடியோ போட்டிருக்கேன். பாருங்க. ) அதுனால காம்பெடிஷன்ல ஜெயிக்கணும்னா புதுசு புதுசா கத்துக்கிட்டு ஆடணும்னு அந்த டீம் முடிவு பண்ணுது. 

இதுக்கு நடுவுல ஏகப்பட்ட ப்ரச்சனை. பில்டிங்க்ல இருக்கவங்க இவங்க தங்குறத எதிர்க்கிறாங்க. இவங்க க்ரூப்ல ஒருத்தி கார் கண்ணாடியை ஒடைச்சிடுறதால ஜெயிலுக்குப் போக வேண்டி வருது. மேட் வேற ஜூனை முத்தமிடுவதைப் பார்க்கும் அவளோட அம்மா அவ அங்க இருக்கத விரும்பல. உடனே அவ சாண்டுஸ்கிக்குக் கிளம்ப முடிவெடுக்கிறா. இப்பிடி அடுக்கடுக்கா சோதனைகளைத் தாண்டி எப்பிடி ஜெயிக்கிறாங்கங்கிறதுதான் க்ளைமேக்ஸ்.

ஸூ குழுவோட போட்டி நடனத்துல ஜெயிச்சிட்டா தாங்கள் தேசிய நடனப் போட்டிலயும் ஜெயிச்சிருவோம்னு சொல்றான் மைக்கேல். அதுக்குள்ள வேறொரு பிரச்சனையில சூஸன் என்கிற பெண்ணோட அம்மா ஃப்ரைட்கின்னுக்கு ஃபோன் செய்து இவங்களுக்கு வாய்ப்பளிக்க வேண்டாம்னு தடுத்துடுறாங்க. அதுனால இவங்க 8 பேரும் சபோலின் மனைவியை சந்தித்துத் திரும்ப நடனப்போட்டில கலந்துக்க வாய்ப்பைத் திரும்ப ஏற்படுத்தித் தருமாறு கேக்குறாங்க.

அவங்க போய் ஃப்ரைட்கின்கிட்டப் பேசும்போதுதான் தெரியுது, உண்மையான திறனாளிகளுக்காக அவங்க கணவர் சபோல் ஏற்படுத்திய அந்த நிறுவனத்தை முன்கூட்டியே முடிவு செய்த இன்னொரு நடனக் கூட்டணிக்குச் சாதகமாக விட்டுக் கொடுத்து  ஃப்ரைட்கின் 250 மில்லியன் டாலருக்கு விலை போயிட்டார்னு. 

ஃப்ரைட்கின் இவங்கள நடனப் போட்டில கலந்துக்கத் தடை செய்ததோட சபோலின் மனைவியையும் தடுக்குறாரு. ஆனால் சபோல் நடனப் போட்டில இவங்களப் பார்வையாளர்களா அழைச்சிட்டுப் போய் போட்டிகளுக்கு நடுவுல ஸ்டேஜுக்குப்போய் இவங்கள அழைச்சுப் பர்ஃபார்ம் பண்ண வைக்கிறாங்க. எல்லா சோதனைகளையும் தாண்டி இவங்க ஜெயிச்சிடுறாங்க. சுபம். சபோலும் ஃப்ரைட்கின்கிட்டேருந்து தன் கணவர் உருவாக்கிய கம்பெனியின் அதிகாரத்தைக் கைப்பற்றிடுறாங்க. :) டபிள் சுபம். 

இளையவர்களின் துள்ளல், துடிப்பு, காதல், பதின்பருவம், போட்டிகள், இடைஞ்சல்கள், அதை எதிர்கொள்ளும் விதம், அவர்கள் சந்திக்கும் எதிர்பாரா நிகழ்வுகள்னு படம் ரொம்பவே விறுவிறுப்பாப் போகும்.

இந்த ரெண்டு வீடியோவையும் பார்த்திருங்க. 80 களின் ஆட்டம் பாட்டம் கொண்டாட்டம் புரியும். :) 

https://www.youtube.com/watch?v=rG55x29b5VY

https://www.youtube.com/watch?v=yqipbmqcMz0

1 கருத்து:

  1. வலைப்பதிவர் ஒற்றுமை ஓங்கட்டும் !
    என்றும் நம்முள் வலிமை பெருகட்டும் !!

    பதிலளிநீக்கு

சும்மா ( பத்தி ) உங்க கருத்தையும் பதிவு செய்ங்க :)

Related Posts Plugin for WordPress, Blogger...