எனது 24 நூல்கள்

எனது 24 நூல்கள்
எனது இருபத்து நான்கு நூல்கள்

திங்கள், 5 அக்டோபர், 2020

கயலுடன்..

 கயலுடன் எத்தனையோ சந்தர்ப்பங்களில் எடுத்த ஃபோட்டோக்கள் இருக்கு. சுமார்100க்கு மேல் தேறும். அவற்றில் சிலதை மட்டும் இங்கே பகிர்கிறேன் :) 

இது கயல் பிறந்தநாளின் போது எடுத்தது. லாமிக்கிளில்தான். நிறைய பிரபலங்கள் இருக்காங்க. யார்னு சொல்லுங்க பார்ப்போம் :) 

டாக்டர் காயத்ரி, மில்லர்,ஹுசைனி . 


தமிழ்ச்செல்வி நிகோலஸ், ஆனந்த் பெரியசாமி, நிதிஷ் ( இன்று இவர் இல்லை :( ) , பாகி, சதீஷின் மனைவி, குழந்தைகள். 

கேக் ரொம்ப ஸ்வீட் இல்ல.. கயல் போல :) 

2010 ஆம் வருடம். மே மாதம் இருக்கும். முகநூல் வந்த புதிது. நாங்கள் (கயல், வசு, செல்வா, ராஜிக்கா, தமிழ், லல்லி, அன்பு, ஸ்ரீஜி, வாணி ) எல்லாரும் ஒரு இன்பாக்ஸில் -ராஜியின் ராஜாங்கம் என்று அந்த த்ரெட்டுக்குப் பெயர். உரையாடிக் கொண்டிருந்தோம். ஏதோ ஒரு பழைய தமிழ்ப் பாடலை யாரோ போஸ்ட் செய்ய. நானும் வாணியும் ஒரு மாதிரி அழும் மனநிலைக்குப் போய் அதில் நெகிழ்வாய் ஏதேதோ எழுதி இருந்தோம். 

அப்போதே தனித்திரியில்  என் அட்ரஸ் கேட்டுக் காலையில் என் வீட்டுக்கே வந்துவிட்டாள் கயல் என்னைப் பார்க்க. மறக்கமுடியாத நாள். :)  13. 5. 2020. 

அன்பு அணைப்போடு( நடனமாடும் பெண் சிலை ஒன்று) அன்புப் பரிசும் :) 

அன்றுமுதல் இன்றுவரை பிரியாதிருக்கிறோம். உணர்வால் எண்ணங்களால். 

இதுஒரு காஃபி டேயில் எடுத்த புகைப்படம். :) 


இது போனவருடம் விருகம்பாக்கம் ஆவின் ரெஸ்டாரெண்டில். 
இது 2016 இல் கே கே நகர் க்ரீமி இன்னில் :) 


அதே க்ரீமி இன்னில் வசுவுடனும் கயலுடனும் :) 


2016 இல் என் பிறந்தநாளை நம்மவீடு வஸந்தபவனில் கொண்டாடியபோது :) 


செல்வா கொண்டுவந்த கேக் :) 

விளையாட்டாய் ஒரு ஷாட் :)


பர்த்டே பாடல் :)இன்னும் நிறையப் புகைப்படங்கள் இருக்கு. அதுவும் கயலுடனும் வசுவுடனும் அநேக புத்தக வெளியீட்டில் கலந்து கொண்டதாக இருக்கும். கயலுடன் நிறையப் பள்ளிகளுக்குப் பேசவும் போயிருக்கேன். நிறைய நிகழ்வுகளிலும் சிறப்பு விருந்தினராகக் கலந்துக்கிட்டு இருக்கோம். அதெல்லாம் இன்னொரு இடுகையில். 

நான் சிலசமயம் அப்செட்டாய் இருந்தாலும் அதை எல்லாம் ஒரிரு வார்த்தைகளில் காணாமல் போகச் செய்யும் வல்லமை படைத்தவள் கயல். என்றென்றும் புத்துணர்ச்சியைத் தருவாள். இனிமையாய்த் தொடரும் இந்த உறவு என்றென்றும் நீடித்திருக்க எல்லாம் வல்ல இறைவனை வேண்டுகிறேன். 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

சும்மா ( பத்தி ) உங்க கருத்தையும் பதிவு செய்ங்க :)

Related Posts Plugin for WordPress, Blogger...