எனது 24 நூல்கள்

எனது 24 நூல்கள்
எனது இருபத்து நான்கு நூல்கள்

வெள்ளி, 23 அக்டோபர், 2020

அரும்பாக்கம் மிடில் ஸ்கூலில் குழந்தைகள் நிகழ்த்திய விழிப்புணர்வு நாடகம்.

அம்பேத்கார் பிறந்தநாளில் தோழி மணிமேகலை அட்சயா ஃபவுண்டேஷன் சார்பாக அரும்பாக்கம் மிடில் ஸ்கூலுக்குச் சிறப்பு விருந்தினராக அழைத்திருந்தார். அம்பேத்கார் பற்றிக் குழந்தைகளுக்குச் சொல்ல முடிந்ததில் மகிழ்ச்சி. ஆசிரியைகளுக்கு அட்சயா ஃபவுண்டேஷன் சார்பாக விருதுகள் வழங்கினோம். 

மிக அருமையா உரையாற்றினார் தோழி மணிமேகலை. இவர் சாஸ்திரிபவன் யூனியன் லீடர் ( பெண்கள் சங்கம் & தலித் பெண்கள் சங்கம் ) என்பதால் மிக அருமையான உரையாக அது அமைந்தது. அதன் பின் குழந்தைகள் கலை நிகழ்ச்சி நடத்தினார்கள். 

தொலைக்காட்சி சீரியல்கள் பார்ப்பது பற்றிய விழிப்புணர்வு நாடகம் வெகு அருமை. குரலில் விதம் விதமான ஏற்ற இறக்கத்தோடு குடும்பங்களில் நிகழும் தொலைக்காட்சி மோகத்தை இவர்கள் நடித்தவிதம் அற்புதம். 

நான்கு மாணவர்களின் நடிப்பிலும் நாங்கள் நெகிழ்ந்திருந்த தருணம். 

சபாஷ் என்று பாராட்டுகிறார் மணிமேகலை. 

சிறந்த நையாண்டியுடன் எடுத்துரைத்த சிறார்க்கு நானும் என் கணவரும் ரொக்கப்பரிசு வழங்கினோம். 


என் இன்னுரை. 

சிறுவன் ஒருவனின் தனிப்பேச்சு. 
மழலைச் செல்வங்களுடன் நான். 

மிக அருமையாக நடந்த அவ்விழாவில் என் கணவருக்கும் பொன்னாடை போர்த்தினார்கள். வெற்றிகரமான பெண்ணின் பின்னிருக்கும் ஆண் என்று. 

நன்றி அட்சயா & அரும்பாக்கம் மிடில் ஸ்கூல் .

1 கருத்து:

  1. வலைப்பதிவர் ஒற்றுமை ஓங்கட்டும் !
    என்றும் நம்முள் வலிமை பெருகட்டும் !!

    பதிலளிநீக்கு

சும்மா ( பத்தி ) உங்க கருத்தையும் பதிவு செய்ங்க :)

Related Posts Plugin for WordPress, Blogger...