| மாங்காடு |
| திருவேற்காடு |
முதலில் மாங்காடு. ப்ரகாரத்திலேயே அம்மனைப் ப்ரதிஷ்டை செய்து சுற்றிலும் கும்பங்கள் அடுக்கப்பட்டிருந்தன. அம்மனுக்கும் வளையல்கள் அடுக்கிப் பரவசப்பட்டுக்கொண்டிருந்தார்கள் பெண்மயில்கள்.
அங்கே மூன்று விதமான க்யூ, பொது தரிசனம், 20 ரூ டிக்கெட், 50 ரூ டிக்கெட். மூன்று சுற்றுக்களாக சுற்றிச் சுற்றி வந்ததால் கூட்டத்தைக் கண்டு மலைத்து மயங்கி அமர்ந்து இருந்தபோது பக்கத்தில் இன்னும் இரண்டு மூன்று கோயில்களுக்குச் சென்றுவிட்டுவந்த பெண் ஒருவர் குடும்பத்தோடு சாப்பிட்டுக்கொண்டிருந்தார்.