வெள்ளி, 8 ஜூலை, 2016

மனசே ரிலாக்ஸ் ப்ளீஸ் – பாகம் – 2. ஒரு பார்வை.மனசே ரிலாக்ஸ் ப்ளீஸ் – பாகம் – 2.

பொதுவாக சாமியார்கள் எழுதிய புத்தகம் என்றால் படிக்க விரும்புவதில்லை நான். தனக்கென்று ஒன்றும் மக்களுக்காக ஒரு முகமுமாக இருக்கும் சாமியார்களைப் பார்த்தாலே வெறுப்பு எனலாம். விகடன் வெளியீடு என்பதால் படித்தேன். சில சுவாரசியம் என்றாலும் சில யோசிக்க வைத்தன என்றாலும் சில கொஞ்சம் எரிச்சலாகவும் இருந்தன.

முதல் பாகம் இரண்டரை லட்சம் பிரதிகள் தாண்டியும் விற்றுக் கொண்டிருக்கிறதாம். இது ( 2008 தகவல்) பொதுவாக முதல் பாகம் பெற்ற அளவு வரவேற்பை அடுத்த பாகங்கள் பெறுவதில்லை. முதல் பாகத்தைப் படித்து ஏற்பட்ட அதீத எதிர்பார்ப்பாகவும் இருக்கலாம். இம்மாதிரி நூல்களை எழுதும் ப்ரபலங்களை விட அதை அழகாக எழுத்தில் கொண்டு வந்த எழுத்தாளர்களே பாராட்டப்பட வேண்டியவர்கள். இதை வேல்ஸ் தொகுத்துள்ளார். எனவே சிறப்பாக அமைந்துள்ளது. அதேபோல் சிலவற்றை தொகுத்த தளவாய் சுந்தரம் எழுத்துக்காகவும் படிப்பேன்.

81 வாரங்கள் வந்த கட்டுரைகளின் தொகுப்பு இது. ஒவ்வொரு வாரமும் ஒவ்வொரு தலைப்பு. முதல் சாப்டர் செம எரிச்சலானது. அதைப் படிக்காமல் ஸ்கிப் செய்யலாம். இப்படியும் நடக்குமா என்ற அளவுக்கு மீறிய அபத்தம் அது.

என்னைக் கடுப்பேற்றிய அபத்தக் கருத்துகள் கொண்ட கட்டுரைகள். பிரசாதம் மகா ப்ரசாதம், எதிரிகளை மன்னியுங்கள், அந்த மூன்று விஷயங்கள், பொற்காசா இளவரசியா, யார் தவறு, இந்தியாவா வேண்டாம், மனதில் அமைதி வேண்டும்.

சில கட்டுரைகள் பாதி பிடித்தும் பாதி பிடிக்காமலும் கூட இருக்கிறது. நம் எண்ணப் போக்கை ஒட்டி வந்தால் பிடித்தால் ஒட்டாமலிருந்தால் பிடிக்காமலும் போகிறது.

பிடித்ததையும் சொல்ல வேண்டும் தானே. எனக்குப் பிடித்த கட்டுரைகளும் இதோ.

குறை சொல்லாதீர்கள், பணக்காரர் ஆக வேண்டுமா, துன்பத்துக்குக் காரணம் யார், மூன்று மரங்களின் ஆசை, அன்புக்கு யார் அடிமை, கிளி சொல்லும் ரகசியம், பூங்கொத்துகளோடு தயாராக இருங்கள், யானை கொடுத்த விருந்து, பிரச்சனை மூட்டைகள், உயிர் தப்பினார்களா சிறுவர்கள்.

மிகப் பிடித்த கட்டுரைகள் சண்டைகள், சங்கடங்கள்., ரோலர் கோஸ்டர் மாதிரிதான் வாழ்க்கை, எனர்ஜி ஃபீல்ட், ரசனை மூன்றுவிதம், முனிவர் ஏன் திருடினார், நீங்கள் ஒரு ஊழியரா, தினமும் உங்களைப் புதுப்பித்துக் கொள்ளுங்கள், எதிர்ப்புகளை வெல்ல எலிமையான வழி.

நூல் :- மனசே, ரிலாக்ஸ் ப்ளீஸ் ! பாகம் -2.
ஆசிரியர்: சுவாமி சுகபோதானந்தா
தொகுப்பு ;- வேல்ஸ்
பதிப்பகம். :- விகடன் பிரசுரம்
விலை :- ரூ 100.6 கருத்துகள் :

Ezhil.V சொன்னது…

பாகம் 1 மிகவும் பிடித்ததிருந்தது எனக்கு... பாகம் 2 சுமாராக இருக்குன்னு சொல்றீங்க... வாய்ப்பு கிடைக்கும் போது படித்துப் பார்க்கிறேன்....

தி.தமிழ் இளங்கோ சொன்னது…

நல்ல விமர்சனம். இந்த நூலின் முதல் பாகத்தில் இருந்த எழுத்து ரசனை இரண்டாம் பாகத்தில் இல்லை.

Dr B Jambulingam சொன்னது…

நடுநிலையான விமர்சித்துள்ளீர்கள். நன்றி.

வெங்கட் நாகராஜ் சொன்னது…

முதல் பாகம் படித்திருக்கிறேன். இரண்டாம் பாகம் இதுவரை படிக்கும் வாய்ப்பு அமையவில்லை.....

Thenammai Lakshmanan சொன்னது…

நன்றி எழில்

நன்றி இளங்கோ சார்

நன்றி ஜம்பு சார்

நன்றி வெங்கட் சகோ

Thenammai Lakshmanan சொன்னது…

வலைப்பதிவர் ஒற்றுமை ஓங்கட்டும்.!
என்றும் நம்முள் வலிமை பெருகட்டும்.!

கருத்துரையிடுக

சும்மா ( பத்தி ) உங்க கருத்தையும் பதிவு செய்ங்க :)

Related Posts Plugin for WordPress, Blogger...