எனது 24 நூல்கள்

எனது 24 நூல்கள்
எனது இருபத்து நான்கு நூல்கள்
ஏமாற்றாதே ஏமாறாதே லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
ஏமாற்றாதே ஏமாறாதே லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

வியாழன், 21 ஜூலை, 2016

தங்கத்தாமரை பதிப்பகத்துக்காக. ஏமாற்றாதே ஏமாறாதே.


மதிப்பிற்குரிய வேதா மேடம் & சுபா அவர்கட்கு,

தேனம்மைலெக்ஷ்மணன் எழுதிக் கொண்டது.

இத்துடன் ஏமாற்றாதே, ஏமாறாதே என்ற தலைப்புக்காக எழுதிஅனுப்பி இருக்கிறேன்.

அன்பும் வாழ்த்தும்

தேனம்மைலெக்ஷ்மணன்.

*************************************

தங்கத்தாமரை பதிப்பகத்துக்காக.

ஏமாற்றாதே ஏமாறாதே.

ஏ எஸ் டி எஃப் ஜி எஃப். செமிகோலன் எல் கே ஜே ஹெச் ஜே.. இதைத் திரும்பத் திரும்ப அடித்தபடி இருந்தாள் வள்ளி அக்கா. டைப்ரைட்டிங் வகுப்புக்கு ஆனா ஆவன்னா, ஏபிசிடி எல்லாம் இதுதான். அவள் தினமும் குன்றக்குடியில் இருந்து ஒரு வாரமாக வந்து கொண்டிருக்கின்றாள். நான் பக்கத்து சேரில் அமர்ந்து லெட்டர் டைப் செய்துகொண்டிருந்தேன். க்ர்ரிக் க்ர்ரிக் என நகர்த்தி நகர்த்தி அடிக்க ஆரம்பித்தேன்.