156.
3101. பாறைகள் சேர்ந்து போய்விடுகின்றன. சுமப்பதை விட வினோதமானது தான் ஒரு ஹெர்குலிஸ் என்றும் அதைச் சுமப்பது தன் கடமையென்றும் நினைத்துப் புளகாங்கிதமடைவது.
3102. இப்பிடி ஒவ்வொருத்தரா லெஃப்டு லெஃப்டுன்னு போயிக்கிட்டு இருந்தா இந்த குரூப்புத்தான் என்னத்துக்குங்குறேன். கடோசில நானும் அட்மினும்தான் அதுல லெஃப்ட்டு 😃
3103. அருமை....ஏற்கனவே படித்தது என்றாலும் விகடன் இதழில் அச்சில் படிப்பது இன்னும் மகிழ்ச்சியை ஊட்டுகிறது. சிறுவயது முதற்கொண்டே மொழிபெயர்ப்பு எழுத்துக்களோடு எனக்கு ஒரு ஆத்மார்த்தமான தொடர்பு ஏற்படுத்திக் கொள்ள இயலவில்லை. கதா பாத்திரங்களின் பெயர்கள் அன்னியமாக இருப்பதாலோ என்னமோ...
உங்கள் முயற்சியை நான் பாராட்டுவது என்பது சூரிய ஒளியைத் தெருவிளக்கு பாராட்டுவது போல.
https://www.vikatan.com/lifestyle/miscellaneous/my-vikatan-article-about-nilavarai-kuripugal-book
விகடனில் வெளியான என்னுடைய நிலவறைக் குறிப்புகள் விமர்சனத்தைப் படித்த நண்பர் ஒருவரின் கருத்து மேலே :)