எனது 24 நூல்கள்

எனது 24 நூல்கள்
எனது இருபத்து நான்கு நூல்கள்

புதன், 14 டிசம்பர், 2022

அறத்துக்கு அப்பால் நூலில் என் கட்டுரையும்..

 பின்னல்களும் இடைவெளிகளும் என்ற நூலுக்காக நண்பர் திரு ஆரூர் பாஸ்கர் கேட்டுக் கொண்டதற்கிணங்க எழுதியது. 


///வணக்கம் சகோ.. நலம் தானே.

ஆரூர்

உங்களுடைய கட்டுரை என்னுடைய அறத்துக்கு அப்பால் நூலில் வந்தி்ருக்கிறது. (எழுத்து பிரசுரம்)///

//பின்னல்களும் இடைவெளிகளும் என்ற நூலுக்காக நண்பர் திரு ஆரூர் பாஸ்கர் கேட்டுக் கொண்டதற்கிணங்க எழுதியது. நன்றி பாஸ்கர் சகோ & எழுத்து பிரசுரம். //

பெண் என்பதால் இன்னின்னவற்றைச் சொல்லலாம். இன்ன விதத்தில் சொல்லலாம் என்பதையே இச்சமூகம் வரையறுத்து வைத்திருக்கிறது. எல்லாவற்றிலும் பாலிஷாக நாசுக்காகப் பட்டும்படாமல் கருத்துச் சொல்லிச் சென்றால்தான் பொதுவெளியின் மிரட்டல்களில் இருந்தும் அச்சுறுத்தல்களில், வீணான விமர்சனங்களில், எள்ளல்களில் இருந்தும் தப்பிக்கலாம். 



நான் கல்லூரிப் பருவத்துக்குப் பின் கடந்த பன்னிரெண்டு வருடமாக வலைத்தளத்தில் எழுதி வருகிறேன். அதை முகநூலிலும் பகிர்ந்து வருகிறேன். வலைத்தளத்தில் நம் எழுத்தை ஆதரிப்போர் அதிகம். ஏனெனில் பின்னூட்ட மட்டுறுத்தல் போட்டிருப்பதால் கருத்துத் தாக்குதல்களில் இருந்து தப்பிக்கலாம். ஆனால் முகநூலில் நம் பதிவு பலரையும் சென்று அடைய வேண்டுமென விரும்புவதால் பப்ளிக் போஸ்டாகப் போடுகிறோம். இதை நமக்குத் தெரியாத பலர் அவர்கள் பக்கங்களில் தங்கள் நண்பர்களுக்கு மட்டும் எனப் பகிர்ந்து நம் எழுத்தைக் குறித்துக் கிண்டலாகப் பின்னூட்டமிடுவார்கள். நம் பதிவை யார் பகிர்ந்திருக்கிறார்கள் என்பதைக் கூட முகநூல் நமக்குக் காட்டுவதில்லை.

மேலும் கருத்தின்மீது வன்மம் அல்லது எள்ளல். இது குறித்து எனக்கேற்பட்ட இரு அனுபவங்கள். நம் நண்பர்களாகவே பல்லாண்டுகளாக இருப்பவர்கள் கூட முக்கிய விஷயத்தில் நாம் கருத்துக் கூறினால் இவர்களுக்கென்ன தெரியும் என்ற நோக்கிலேயே கிண்டலடிப்பார்கள். சில வருடங்களுக்கு முன் சர்வதேச சினிமா பற்றியும் அணு உலை பற்றியும் ஹலோ எஃப் எம்மிலும் , அஞ்சறைப் பெட்டி என்ற நிகழ்ச்சியிலும் என்னிடம் கருத்துக் கேட்டார்கள்.(என்னுடைய இலக்கிய செயல்பாடுகளோடு குடும்பத்தினரோடு ஆங்கிலப் படங்களும் சர்வதேசப் படங்களும்  பார்ப்பதுண்டு. சுற்றுப்புறச்சூழல் பற்றிய விழிப்புணர்வுத் தகவல்களையும் அவ்வப்போது இணையத்திலும் பத்ரிக்கையிலும் தொலைக்காட்சியிலும் தெரிந்து கொள்வதுண்டு. வீட்டில் சமையல் கோலம் ஆகிய வேலைகளை விரும்பிச் செய்வதால் அவை பற்றியும் வலைத்தளத்தில் எழுதியும் முகநூலில் பகிர்ந்தும் வருகிறேன்). 

என்னிடம் ஹலோ எஃப் எம் சர்வதேச சினிமா பற்றிக் கருத்துக் கேட்டதும் முகநூலில் என் நல்ல நண்பரொருவர் “என்ன தேனம்மையிடம் இன்னும் அணு உலை பற்றிக் கருத்துக் கேட்கலையா “ என்று கிண்டலடித்தார். எங்கள் இருவருக்கும் பொதுவான நண்பர் ஒருவரிடம் “இது பத்தி எல்லாம் இவங்களுக்கு என்ன தெரியும்னு கருத்துச் சொல்லியிருக்காங்க” என்றும் கிண்டலடித்திருக்கிறார். அவரே சமீபத்தில் என் எழுத்தாளத் தோழி ஒருவர் எழுதிய சினிமா விமர்சனத்துக்கும் ”இந்தப் படத்துல என்ன இருக்குன்னு இத்தனை விஷயத்தைக் கண்டுபிடிச்சு எழுதி இருக்கீங்க “ என்று சேற்றை வாரி இறைத்திருந்தார். இதுதான் இன்றைய நிஜம்.


 நம் நல்ல நட்புக்களே நம்மைத் தோழியாக அங்கீகரிக்கும் அதே கணம் புத்திசாலித் தோழியாக அங்கீகரிப்பதில்லை. அவர்கள் பார்வையில் நாம் அவர்களை விட புத்தியில் மாற்றுக் குறைந்த அசடுகள். 

பெண்கள் செண்டிமெண்டல் ஃபூல்ஸ். அவர்கள் ( அதாவது ஆண்கள் ) மட்டுமே எல்லாவற்றிலும் லாஜிக் படி செயல்படுபவர்கள் சிந்திப்பவர்கள் இப்படித்தான் இருக்கிறது இந்த இருபதாம் நூற்றாண்டிலும் பெண்ணின் கருத்து சுதந்திரமும் ஆணின் பெண் மீதான பார்வையும்

2 கருத்துகள்:

  1. நம் நல்ல நட்புக்களே நம்மைத் தோழியாக அங்கீகரிக்கும் அதே கணம் புத்திசாலித் தோழியாக அங்கீகரிப்பதில்லை....உண்மை...

    எழுத்து, வாசிப்பு நிலையில் பிறரைப் பற்றி நாம் சிந்திக்க வேண்டாம். பிறரின் அங்கீகாரம் எதிர்பார்த்து செய்யவேண்டாம். பயணிப்போம். சாதிப்போம்.

    பதிலளிநீக்கு
  2. மிக்க நன்றி ஜம்பு சார் :)

    வலைப்பதிவர் ஒற்றுமை ஓங்கட்டும் !
    என்றும் நம்முள் வலிமை பெருகட்டும் !!

    பதிலளிநீக்கு

சும்மா ( பத்தி ) உங்க கருத்தையும் பதிவு செய்ங்க :)

Related Posts Plugin for WordPress, Blogger...