எனது 24 நூல்கள்

எனது 24 நூல்கள்
எனது இருபத்து நான்கு நூல்கள்
குமுதம் சிநேகிதி லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
குமுதம் சிநேகிதி லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

ஞாயிறு, 21 டிசம்பர், 2025

சின்ன வெங்காயத்தில் சிறப்பான உணவுகள்

சின்ன வெங்காய ரெஸிப்பீஸ்


முன்னுரை:- சின்ன வெங்காயம் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் குணம் கொண்டது. உடலுக்குக் குளிர்ச்சி தரும். பல்வலி வாய்ப்புண், சளி, இருமலைக் குணப்படுத்த வல்லது. இதயத்துக்கும் இரத்தக் கொதிப்புக்கும் மட்டுமல்ல இளமையாக இருக்கவும் உதவுகிறது. எனவே சின்ன வெங்காயத்தில் பலவிதமான உணவு வகைகளைத் தினம் ஒன்றாகச் செய்து சாப்பிட்டு நம் உடல் ஆரோக்கியத்தைப் பேணுவோம்.

அன்புடன்

தேனம்மைலெக்ஷ்மணன்.

வியாழன், 11 செப்டம்பர், 2025

அடுப்பில்லா சமையல் குமுதம் சிநேகிதியில்

அடுப்பில்லா சமையல்


அடுப்பில்லா சமையல் நம் ஆரோக்கியத்துக்குப் பரம வழிகாட்டி. எப்போதும் சமைத்ததையே உண்டாலும் வாரம் ஒருமுறையாகிலும் சமைக்காத உணவை அதன் உயிர்ச்சத்துக்களோடு சாப்பிட்டுப் பலனடைய வேண்டியே இந்த ரெஸிப்பிக்கள் தயாரிக்கப்பட்டுள்ளன. இயற்கை அன்னை வழங்கிய இந்தப் பொருட்களை அப்படியே சாப்பிட்டு ஆரோக்கியம் பேணுங்கள்.

என்றும் உங்கள் நலனில் அக்கறையுள்ள

தேனம்மைலெக்ஷ்மணன்.

ஞாயிறு, 9 மார்ச், 2025

25 வகை குழம்புகள்

 25 வகைக் குழம்புகளின் முன்னுரை:-


தமிழர் உணவில் அரிசிச் சோறும் குழம்பும் இன்றியமையாதன. பருப்புப் போட்டு வைக்கும் சாம்பார் ஒருவித ருசி என்றால் புளிக் குழம்புகளும் அரைத்துவிட்ட குழம்புகளும் இன்னொரு வித ருசி. வெளிநாட்டினர் விதம் விதமான சாஸ்களைக் கொண்டும் சீனர்கள் சோயா சாஸ் சில்லி சாஸ் கொண்டும் உணவு தயாரிப்பார்கள். நாம் புளி,  தேங்காய், பொடிகள் கொண்டு செய்யும் இவ்வகைக் குழம்புகள்

வியாழன், 3 அக்டோபர், 2024

விநாயகர் சதுர்த்தி ஸ்பெஷல் - 20 வித கொழுக்கட்டைகள்

 20 வித கொழுக்கட்டைகள்

 


1.ஆட்டிக் கிண்டும் கொழுக்கட்டை
2.சீரகக் கொழுக்கட்டை
3.கோதுமைக் கொழுக்கட்டை
4.கருப்பட்டிக் கொழுக்கட்டை.
5.ஃப்ரூட் & நட்ஸ் மோதகம்
6.தேங்காய்ப்பால் கொழுக்கட்டை
7.வெஜ் பேணி

சனி, 29 ஜூன், 2024

அள்ளித்தரும் அட்சயதிரிதியை

 அள்ளித்தரும் அட்சயதிரிதியை 



நன்மையையும், செல்வத்தையும், ஆரோக்கியத்தையும் அள்ளித்தரும் நாள் அட்சய திரிதியை. காசியில் அன்னபூரணி பரமேசுவரருக்கே அன்னம் பாலித்த நாள். இன்று அன்னம் போன்ற வெண்மைப் பொருட்களை வாங்குவதை விட  வெண்மை நிற உணவுகளை இறைவனுக்குப் படைத்து இல்லாதோருக்கு வழங்கினால் அன்னபூரணியின் அருளும் விசுவநாதரின் அருளும் பெருகும். உப்பு, அரிசி போன்றவை செல்வச் செழிப்பின் அடையாளங்கள்.  அவற்றோடு இங்கே கூறப்பட்டுள்ள வெண்மை நிற உணவுகளைச் செய்து இறைவனுக்குப் படைத்துத் தானமும் செய்யலாம்,  நாமும் உண்டு மகிழலாம். அள்ள அள்ளக் குறையாமல் நம் அனைவரின் இல்லங்களிலும் உணவு மட்டுமல்ல, உள்ளங்களிலும் பகிர்ந்து உண்ணும் இன்பமும் மகிழ்ச்சியும் பெருகட்டும். நன்மையும் செல்வமும் என்றும் பொலியட்டும். ஆயுளும் ஆரோக்கியமும் நிலைக்கட்டும். 

திங்கள், 15 ஏப்ரல், 2024

தமிழ்ப் புத்தாண்டு அறுசுவை ரெஸிப்பீஸ்

 தமிழ்ப் புத்தாண்டு அறுசுவை ரெஸிப்பீஸ்


தமிழ்ப் புத்தாண்டு ஏப்ரல் 14 ஆம் தேதி வருடந்தோறும் வருகிறது. அன்றுதான் பிரம்மா உலகைப் படைத்ததாக புராணங்களில் வழி வரும் நம்பிக்கை. அன்று உணவில் அறுசுவையும் இடம்பெறவேண்டும். இனிப்பும் கசப்பும் கலந்ததுதான் வாழ்க்கை என்பதை உணர்த்தும் வண்ணம் அன்றைய சமையலில் அறுசுவையும் இடம் பெறும். இங்கே பாரம்பரியமும் புதுமையும் கலந்த ரெஸிப்பீஸ் இடம் பெற்றுள்ளன. கசப்புக்கு வேப்பம்பூ, பாகற்காய், வெந்தயம், வெந்தயக் கீரை, சுக்குடிக் கீரை, சுண்டை வற்றல், துவர்ப்புக்கு வாழைப்பூ, பலாப்பிஞ்சு, கிளைக்கோஸ், கறிவடகம், மாங்கொட்டைப் பருப்பு, இனிப்புக்கு மாம்பழம், பீட்ரூட், ஃப்ரூட் கீர் புளிப்புக்கு நார்த்தை, பைனாப்பிள், நெல்லிக்காய், காரத்துக்கு வரமிளகாய், பச்சை மிளகாய், இஞ்சி, மாவடு இவற்றில் சில உப்புச் சேர்த்தும் சில வெல்லம் சேர்த்தும் சமைக்கப்பட்டுள்ளன. பீட்ரூட் வடையும், ஃப்ரூட் கீரும் இந்தப் புத்தாண்டில் ஸ்பெஷலாகச் செய்து அசத்துங்கள். வாழ்க்கையை அதன் வண்ணங்களோடு அறுசுவைகளோடு வரவேற்று வாழுங்கள். வாழ்க வளமுடன். இனிய புத்தாண்டு நல்வாழ்த்துக்கள் அனைவருக்கும்.

செவ்வாய், 23 ஜனவரி, 2024

சர்வதேச இனிப்புகள்

 


////”இனிப்பைச் சாப்பிட்டு இனிப்பாகப் பேசுங்கள்” என்பது ஒரு துருக்கியப் பழமொழி . கடந்த ஐந்தாண்டுகளாக ஜெர்மனியின் கொலோன் நகரத்தில் வசிக்கும் நான் குமுதம் சிநேகிதிக்காக ஜெர்மனி, ஃப்ரான்ஸ், பல்கேரிய, எகிப்து, ஒட்டாமான், ஐரிஷ், டர்க்கிஷ் இனிப்பு வகைகளை (சிலவற்றை டெஸர்ட் என்றும் சொல்லலாம்) அனுப்பி உள்ளேன். கேக் வகையறாக்கள் ஜெர்மனியில் பிரசித்தம், ப்ளாக் ஃபாரஸ்ட் என்பது ஜெர்மனியில் இருக்கும் ஒரு இடம். துருக்கிய இனிப்புக்களில் பாதாம், பிஸ்தா, முந்திரி, சீனிப்பாகு அதிகம். ஆரோக்கியத்துக்கும் ஏற்றவை. எனவே இந்த இனிப்புகளைச் செய்து சாப்பிட்டு இனிமையாக வாழுங்கள். இனிய புத்தாண்டு நல்வாழ்த்துக்கள் அனைவருக்கும்.

நன்றி

அன்னபூரணி சபாரெத்தினம்

ஜெர்மனி.////


புதன், 13 டிசம்பர், 2023

வியாழன், 14 செப்டம்பர், 2023

தக்காளி இல்லாத சமையல்

 இந்த ரெஸிப்பீஸ் 10.8.2023 குமுதம் சிநேகிதியில் வெளியானவை. 

தக்காளி இல்லாத சமையல்


 



1.க்ரீன் ஆப்பிள் மோர்க்குழம்பு

2.மாவத்தல் குழம்பு

3.கருணைப் புளி மசியல்

4.உருளை எலுமிச்சை சப்ஜி

5.உப்புப் புளி ரசம்

6.பரங்கிக்காய் புளிக்கறி

7.முருங்கைக்காய் கத்திரிக்காய் பச்சடி

8.காலிஃப்ளவர் சொதி

9.பைனாப்பிள் ரசம்

10.கோங்குரா  துவையல்/சட்னி

11.வெஜ் லெமன் சேமியா

12.ஆரஞ்சு சப்பாத்தி

13.மாம்பழ சாம்பார்

14.வர மிளகாய்த் துவையல்

15.இஞ்சிப்புளித் தொக்கு

16.வேப்பம்பூ எலுமிச்சை ரசம்

17.தால் தட்கா

18.மோருகறி

19.பச்சைப்புளியஞ்சாதம்

20.பலகாய் மண்டி


திங்கள், 20 பிப்ரவரி, 2023

ஜவ்வரிசி சேமியா ரெஸிப்பீஸ் குமுதம் சிநேகிதியில்

 ஜவ்வரிசி சேமியா ரெஸிப்பீஸ் 

 


1.ஜவ்வரிசி புரத போகா
2.ஐந்தரிசிப் பணியாரம்
3.பிசினரிசிப் புட்டு இனிப்பு
4.பிசினரிசிப் புட்டு உப்பு
5.ஜவ்வரிசி ஊத்தப்பம்
6.தவலை வடை
7.சாபுதானா கிச்சடி
8.ஜவ்வரிசி பொங்கல்
9.ஜவ்வரிசி சேமியா பால் ஐஸ்
10.ஜவ்வரிசி ஃப்ரூட் கேக்

 


1.சாஃப்ரான் செமோலினா
2.ட்ரைகலர் கேப்ஸிகம் செமோலினா
3.வெஜ் சேமியா சூப்
4.ராகி இனிப்பு சேமியா
5.தஹி சேமியா
6.லெமன் சேமியா
7.ஃப்ரூட் ஃபலூடா
8.சேமியா இட்லி
9.சேமியா நெஸ்ட் கட்லெட்
10.குனாஃபா

இந்த ரெசிப்பீஸ் 9.2.2023 குமுதம் சிநேகிதியில் வெளியானவை. 

வெள்ளி, 28 அக்டோபர், 2022

வெய்யிலைப் பிடித்து வத்தல் வடகம் போடலாம் வாங்க.

 குமுதம் சிநேகிதியின் குட்டி புக்கில்  வெளியான வத்தல் வடாம் போடுவது பற்றிய குறிப்புகள். 


வத்தல் வடகங்கள்